‘லதா மங்கேஷ்கர் மரணம் முதல் சுஷ்மிதா சென் வரை’ - 2022ல் இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட செய்தி பட்டியல்!
பிரம்மாஸ்திரா, கேஜிஎஃப்: சாப்டர் 2 ஆகிய திரைப்படங்கள் இந்த ஆண்டு ட்ரெண்டிங் தேடல்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
கூகுள் இல்லாத ஒரு உலகை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அந்த அளவிற்கு இந்தத் தேடல் தளம் நம் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது.
உள்ளூர் செய்திகள் முதல் உலகச் செய்திகள் வரை அனைத்து தரவுகளையும் நம் கைகளில் கொண்டு சேர்த்துவிடுகிறது கூகுள்.
கூகுள் அதன் வருடாந்திர தேடல் முடிவுகள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. 2022ம் ஆண்டில் அதிகமாக தேடப்பட்ட இந்திய திரைப்படங்கள் பட்டியலில் முன்னணி வகிக்கிறது ’பிரம்மாஸ்திரா’ திரைப்படம்.
இந்த ஆண்டு அதிகமாக தேடப்பட்ட இந்திய செய்தி லதா மங்கேஷ்கரின் இறப்பு பற்றிய செய்தி. 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் லதா மங்கேஷ்கர் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு இதுபற்றிய செய்தியே கூகுள் சர்ச்சில் அதிகம் தேடப்பட்டிருப்பதாக கூகுள் தெரிவித்திருக்கிறது.
அதைத் தொடர்ந்து மூன்று பாடகர்களின் மரணம் பற்றிய செய்தி அதிகம் தேடப்பட்ட பட்டியலில் முன்னணியில் உள்ளன.
பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா மரணம், பாடகர் கேகே-வின் மரணம், பப்பி லஹரியின் மரணம் ஆகியவை பட்டியலில் முன்னணியில் உள்ளன.
கூகுளில் அதிகம் தேடப்பட்ட செய்திகளின் பட்டியலில் மேலும் இரண்டு பேரின் மரணம் பற்றிய தேடல் இடம்பெற்றுள்ளன.
- கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணம்
- பிரிட்டிஷ் ராணி எலிசபத் II மரணமும் இதில் இடம்பெற்றுள்ளன.
கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்
2022-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட 10 பிரபலங்களின் பட்டியலில் பொழுதுபோக்குத் துறை சம்பந்தப்பட்ட நான்கு பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர். ஐந்தாவதாக சுஷ்மிதா சென் இடம்பெற்றுள்ளார். இவரின் லலித் மோடி உடனான காதல் பற்றிய செய்தி வெளிவந்ததால், சுஷ்மிதா சென் அதிகம் தேடப்பட்டார்.
Lockupp ரியாலிட்டி டிவி ஸ்டார் அஞ்சலி அரோரா ஆறாம் இடத்திலும் பிக் பாஸ் போட்டியாளர் அப்து ரோசிக் ஏழாம் இடத்திலும் உள்ளனர்.
கிரிக்கெட் வீரர் பிரவீன் தாம்பேவின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டது. இதில் ஷ்ரேயஸ் தல்பதே நடித்திருந்தார். இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் பிரவீன் தாம்பே ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
முன்னாள் கணவர் ஜானி டெப் மீது வழக்கு தொடர்ந்து ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட ஆம்பர் ஹெர்ட் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட 10 பிரபலங்களின் பட்டயலில் பத்தாம் இடத்தில் இருக்கிறார்.
பிரம்மாஸ்திரா, கேஜிஎஃப்: சாப்டர் 2 ஆகிய திரைப்படங்கள் இந்த ஆண்டு ட்ரெண்டிங் தேடல்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
டாப் 10 கூகுள் தேடலில் ‘விக்ரம்’
இதனிடையே, 2022-ம் ஆண்டு கூகுள் தளத்தில் இந்திய ரசிகர்கள் அதிகம் தேடிய திரைப்படங்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது. இதில், தமிழில் இருந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
டாப் 10 பட்டியல்:
- பிரம்மாஸ்திரா: பாகம் 1 - சிவா
- கே.ஜி.எஃப்: அத்தியாயம் 2
- தி காஷ்மீர் ஃபைல்ஸ்
- ஆர்ஆர்ஆர்
- காந்தாரா
- புஷ்பா
- விக்ரம்
- லால் சிங் சத்தா
- த்ரிஷ்யம் 2
- தோர்
IMDb 'டாப் 10 இந்திய திரை நட்சத்திரப் பட்டியல்' - நடிகர் தனுஷ் முதலிடம் பிடித்தது எப்படி?