4 லட்சம் சதுர அடியில் சென்னையில் ஏத்தர் எனர்ஜி துவங்கியுள்ள மின் வாகன உற்பத்தித் தொழிற்சாலை!

ஏத்தர் எனர்ஜி நிறுவனம், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்யும் புதிய தொழிற்சாலையை அமைக்க, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.

2nd Dec 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

சென்னையில் நடைபெற்ற முதலீடுகள் மற்றும் திறன் மேம்பாட்டு மாநாட்டில் 'ஏத்தர் எனர்ஜி' (Ather Energy) நிறுவனம் 4,00,000 சதுர அடியில் மின் வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.


அடுத்த 5 ஆண்டுகளில் 30 நகரங்களில் விரிவடைய திட்டமிட்டிருப்பதாக ஏத்தர் நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த வளர்ச்சித் திட்டத்திற்கு தற்போதைய புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும். இந்தத் தொழிற்சாலை தமிழ்நாட்டின் ஓசூர் பகுதியில் கட்டப்படும். இதற்கு தமிழக அரசின் மின்சார வாகன திட்டத்தின்கீழ் ஆதரவளிக்கப்படும்.


ஃபேம் திட்டம், ஜிஎஸ்டி குறைப்பு, வரிசெலுத்துவோர்களுக்கு மின்சார இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கான கடன் மீது சலுகைகள் என நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் மின்சார இரு சக்கர வாகனங்களை ஊக்குவித்து வருகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் அதற்கான ஒரு முன்னெடுப்பாகும்.

2

ஏத்தர் எனர்ஜி ஐஐடி முன்னாள் மாணவர்களான தருண் மேத்தா, ஸ்வப்னில் ஜெயின் ஆகியோரால் 2013ம் ஆண்டு நிறுவப்பட்டது. ஃப்ளிப்கார்ட் நிறுவனர்களான சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால், ஹீரோ மோட்டோகார்ப், டைகர் க்ளோபல் ஆகியோர் இந்நிறுவனத்திற்கு ஆதரவளிக்கின்றனர்.


பெங்களூருவில் 38 சார்ஜிங் பாயிண்ட்களும் சென்னையில் 14 சார்ஜிங் பாயிண்ட்களும் கொண்டுள்ள ஏத்தர் க்ரிட் நாட்டின் மின்சார வாகனங்களுக்கான மிகப்பெரிய ஃபாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க் ஆகும்.

வடிவமைப்பு, ஆட்டோமோடிவ், தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் 30 விருதுகளை வென்றுள்ளது. இந்நிறுவனம் அதன் பெயரில் 51 காப்புரிமைகளையும் 113 வணிகக் குறியீடுகளையும் 123 வடிவமைப்பு பதிவுகளையும் பெற்றுள்ளது.

ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் தயாரிப்பான ஏத்தர் 450 நகர பயன்பாட்டை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் அதிகபட்சமாக 80 கி.மீ வேகத்தை எட்டக்கூடியது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 75 கி.மீ தூரம் செல்லும். 40 கி.மீ வேகத்தை 3.9 விநாடிகளில் தொட்டுவிடும்.


முதல் முறையாக பார்க்கிங் அசிஸ்ட் வசதியுடன் இருப்பதால் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ரிவர்ஸில் எடுத்து எளிதாக நிறுத்தமுடியும். ஏத்தர் 450 வாகனத்தில் 7 இன்ச் தொடுதிரை உள்ளது. இது சேமித்து வைத்த இடங்களைக் காட்டுவதுடன் மாற்று வழிகளையும் பரிந்துரைக்கிறது. ஏத்தரின் பிரத்யேக செயலி வாயிலாக வாகனத்தின் சார்ஜ் அளவையும் திறனையும் தெரிந்துகொள்ளலாம். OTA அப்டேட் இருப்பதால் அவ்வப்போது கூடுதல் அம்சங்கள் இணைக்கப்பட்டு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.

ஏத்தர் நிறுவனம் லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தியில் முக்கியக் கவனம் செலுத்துகிறது. எனவே இந்த ஒப்பந்தத்தின்கீழ் அமைக்கப்பட உள்ள தொழிற்சாலையில் மின்சார வாகன உற்பத்தி மட்டுமின்றி லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தியும் செய்யப்படும். இந்த முதலீடானது இந்தப் பிரிவில் மதிப்பு உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பாகும். அத்துடன் வேலை வாய்ப்பும் உருவாக்கப்படும். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக 4000க்கும் அதிகமான ஊழியர்களுக்கு அடுத்த ஐந்தாண்டுகளில் மின்சார வாகன உற்பத்தி பிரிவிற்கு தேவையான முக்கிய திறன்களில் பயிற்சியளிக்கப்படும்.

ஏத்தர் எனர்ஜி சென்னைக்கான முன்பதிவை 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது. டிசம்பர் வரை பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏத்தர் 450 மூன்றாவது தொகுதி 2020-ம் ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் டெலிவர் செய்யப்படும். சென்னை வாலஸ் கார்டன் சாலையில் உள்ள இந்நிறுவனத்தின் ஏத்தர் ஸ்பேஸ் அனுபவ மையத்தில் சோதனை ஓட்டம் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.


ஏத்தர் நிறுவனம் பெங்களூரு மற்றும் சென்னையில் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்கட்டமைப்பு அமைப்பதில் முதலீடு செய்து வருகிறது. தற்சமயம் சென்னையில் 10 ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டுகள் உள்ளன. வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இரண்டு நகரங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட பிறகு அடுத்து வரும் ஆண்டுகளில் ஹைதராபாத், புனே, டெல்லி மற்றும் மும்பையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

1

ஏத்தர் எனர்ஜி சிஇஓ தருண் மேத்தா இதுபற்றி கூறும்போது,

”ஏத்தர் நிறுவனம் விரைவாக வளர்ச்சியடைந்து வருகிறது. அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய எங்களது உற்பத்தித் திறனை விரிவுபடுத்தவேண்டிய அவசியம் உள்ளது. இந்தப் புதிய தொழிற்சாலையானது அடுத்த சில ஆண்டுகளுக்கான தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்ய உதவும்.

தமிழ்நாடு, ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக விளங்குகிறது. மின்சார வாகன சுற்றுச் சூழலை உருவாக்கும் அதன் முயற்சியில் எங்களை இணைத்துக்கொண்டுள்ளது. எங்களது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயல்பாடுகள் பெங்களூருவில் அமைந்துள்ளது. அத்துடன் தற்போது எங்களுடன் இணைந்து செயல்படும் சப்ளையர்களும் வருங்காலத்தில் இணைய சாத்தியமுள்ள சப்ளையர்களும் அந்தப் பகுதியில் உள்ளனர். இதனால் ஓசூரில் தயாரிப்பு தொழிற்சாலையை அமைப்பது சிறந்த தேர்வாக இருக்கும்,” என்றார்.  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close
Report an issue
Authors

Related Tags

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக

Our Partner Events

Hustle across India