ரூ.5,541 கோடி முதலீட்டை ஈர்த்துள்ள சிறு தொழில் நிறுவனங்கள்...

MSME நிறுவனங்கள் மூலமான முதலீடுகள் தமிழகத்தில் 5.96 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளதாக அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.

7th Nov 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

தமிழகத்தில் ஜனவரி மாதம் நடைபெற்ற, இரண்டாவது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில், 3,573 சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம், ரூ.5,541 கோடி முதலீட்டை மாநில அரசு ஈர்த்துள்ளதாக, கிராமப்புற தொழில்கள் அமைச்சர் பி.பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.

நிதி
சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் இந்த முதலீடு, 5.96 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும், அமைச்சர் பெஞ்சமின், சென்னையில் நடைபெற்ற சி.ஐஐ. எம்.எஸ்.எம்.இ. சி.இ.ஓ மாநாட்டை துவக்கி வைத்து பேசும் போது கூறினார்.

வர்த்தகத்தை எளிதாக்குவதற்கான செயல்முறையை தமிழக அரசு உருவாக்கி இருப்பதாகவும், எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் தொழில் துவங்க ஒற்றை சாளர போர்டல் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


எம்.எஸ்.எம்.இ. துறை முதன்மை செயலாளர் ராஜேந்திர குமார், ஐடி துறை மற்றும் தொடர்புடைய துறைகளில் தொழில்முனைவோர் செயல்பாடுகள் காரணமாக தமிழக மாநிலம், எம்.எஸ்.எம்.இ துறைக்கான விருப்பத் தேர்வாக அமைந்திருப்பதாக தெரிவித்தார்.


நிறுவனங்களிடம் இருந்து துறைக்கான நிலுவைத்தொகையை பெற எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு உதவ மாவட்டந்தோறும் பிரத்யேகமான மையம் அமைக்கப்பட்டுள்ளது.


எம்.எஸ்.எம்.இ வளர்ச்சிக்கு உதவ இந்திய தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இதன் தலைவர் எஸ்.சந்திரமவுளி தெரிவித்தார்.  

தமிழகம் முதலீட்டிற்கான விருப்ப மாநிலமாக இருப்பது தொடர்பாக மற்றும் இதை மேம்படுத்துவது தொடர்பாக அண்மையில் யுவர்ஸ்டோரி நடத்திய நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட போது, மாநிலம் நாட்டில் இரண்டாவது அதிக வளர்ச்சியை பெற்றிருப்பதாகவும், ஜிடிபி வளர்ச்சியில் மூன்றாவது மாநிலமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பயோ டெக், ஏரோஸ்பேஸ், ஐடி, மின் வாகனம், ஆன்லைன் வர்த்தக உதவி உள்ளிட்ட துறைகளில் புதிய கொள்கைகள் வளர்ச்சிக்கு உதவி வருகின்றன. மேலும் உள்கட்டமைப்பு வசதிகளிலும் மாநிலம் சாதகமான நிலையை பெற்றுள்ளது.


ஸ்பெயின் நாட்டின் கவுரத தூதர், ஆந்தோனி லோபோ, மாநிலத்தில் உள்ள படித்த ஊழியர்கள் மற்றும் தகவல் தொடர்பிற்கு ஆங்கில மொழிப் பயன்பாடு ஆகியவற்றால் தமிழகம் வர்த்தக நிறுவனங்களை கவர்வதற்கான காரணங்களாக கூறினார்.


செய்தி: பிடிஐ | தமிழில் : சைபர்சிம்மன்


  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India