‘நண்பேன்டா’ - கல்லூரி நண்பர்; விசுவாச ஊழியருக்கு ரூ.1500 கோடி மதிப்பு வீட்டை பரிசளித்த முகேஷ் அம்பானி!

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தனது ஊழியர் ஒருவருக்கு 1500 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை பரிசளித்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

‘நண்பேன்டா’ - கல்லூரி நண்பர்; விசுவாச ஊழியருக்கு ரூ.1500 கோடி மதிப்பு வீட்டை பரிசளித்த முகேஷ் அம்பானி!

Thursday April 27, 2023,

3 min Read

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தனது ஊழியர் ஒருவருக்கு 1500 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை பரிசளித்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் உள்ள தனது மிகவும் நம்பிக்கைக்குரிய ஊழியர் ஒருவருக்கு 1,500 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 மாடி கட்டிடத்தை பரிசாக அளித்துள்ளார். முகேஷ் அம்பானியின் நீண்டகால பணியாளரான மனோஜ் மோடி, அவருடைய வலது கை என அழைக்கும் அளவிற்கு விஸ்வாசமானவராம். அவரது உழைப்பையும், விஸ்வாசத்தையும் பாராட்டும் விதமாக மனோஜ் மோடி இந்த அன்பளிப்பை அளித்துள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸில் பல பில்லியன் டாலர் ஒப்பந்தங்களைப் பெறுவதில் மனோஜ் மோடி முக்கிய பங்கு வகிக்கிறார். கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி, மனோஜ் மோடிக்கு 22 மாடி கட்டிடத்தை பரிசாக வழங்கினார். இந்த கட்டிடம் மும்பையின் நேபியன் கடல் சாலை பகுதியில் அமைந்துள்ளது.

ambani

யார் இந்த மனோஜ் மோடி?

மனோஜ் ஹரிவன்ஜன் மோடி குஜராத்தில் பிறந்தவர். அங்குள்ள உயர் நிலைப்பள்ளியில் படிப்பை முடித்த மனோஜ், அதன் பின்னர் மும்பை பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றார். 1980ம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL)-யில் பணிக்குச் சேர்ந்த மனோஜ் மோடி, தற்போது ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவில் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

கல்லூரியில் படிக்கும் நாட்களிலிருந்தே முகேஷ் அம்பானியும் மனோஜ் மோடியும் நெருங்கிய நண்பர்கள். அம்பானி குடும்பத்தின் மூன்று தலைமுறைகளான திருபாய் அம்பானி, முகேஷ் மற்றும் நீதா அம்பானி ஆகியோருடன் பணிபுரிந்து, இப்போது மகள் இஷா அம்பானி மற்றும் மகன்கள் ஆகாஷ் மற்றும் ஆனந்த் அம்பானி ஆகியோருடன் பணியாற்றி வருகிறார்.

ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம், ஹசிரா பெட்ரோ கெமிக்கல் வளாகம் மற்றும் முதல் தொலைத்தொடர்பு வணிகமான ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் இப்போது 4ஜி வெளியீடு உட்பட பல பெரிய அளவிலான ரிலையன்ஸ் திட்டங்களில் மனோஜ் மோடி பணியாற்றியுள்ளார்.

மனோஜ் மோடி தற்போது ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவில் இயக்குநராக பணியாற்றி வருகிறார். Magicbricks.com இன் படி, ஹசிரா பெட்ரோகெமிக்கல் வளாகம், ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம், முதல் தொலைத்தொடர்பு வணிகம், ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் 4G வெளியீடு போன்ற ரிலையன்ஸின் பெரிய அளவிலான திட்டங்களும் மனோஜ் மோடிக்கு சொந்தமானது.

ரூ.1500 கோடியில் அழகான வீடு:

தெற்கு மும்பையில் அமைந்துள்ள ஆடம்பரமான ஏரியாவான நேப்பன் சீ ரோட்டில், மலபார் மலையை ஒட்டிய இடத்தில் 22 மாடி அடுக்குமாடி கட்டிடத்தை மனோஜ் மோடிக்கு முகேஷ் அம்பானி பரிசளித்துள்ளார். மூன்று புறமும் கடல் சூழ்ந்த இந்த சொகுசு வீடு உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் அமைந்துள்ளது.

இந்த வீட்டை 50 ஆண்டுகளுக்கும் மேல் இன்டீரியர் டிசைனிங் துறையில் கொடிகட்டி பறந்து வரும் தலதி & பார்ட்னர்ஸ் எல்எல்பி நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதற்காக காஸ்ட்லியான பல பொருட்கள் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

1.7 லட்சம் சதுர அடியைக் கொண்ட 22 மாடி கட்டமாகும். ஒவ்வொரு தளமும் 8000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த ஆடம்பரமான ஏரியாவில் வீடுகளின் விலை சதுர அடிக்கு ₹45,100 முதல் ₹70,600 வரை விற்பனையாகிறது.

இந்த வீட்டில் சமையல்காரர், பட்லர், மேலாளர், பாதுகாப்புக் காவலர்கள், ஹவுஸ் ஹெலோ போன்ற 175 பேர் பணிபுரிய உள்ளனர்.

இஸ்ரேலைச் சேர்ந்த நிறுவனம் வடிவமைத்த உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.

ambani

22 மாடிகளில் இத்தனை வசதியா?

  • முகேஷ் அம்பானி மனோஜ் மோடிக்கு பரிசாக அளித்த வீட்டிற்கு ‘பிருந்தாவனம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

  • வீட்டின் முதல் 7 தளங்களும் பார்க்கிங்கிறாக ஒதுக்கப்பட்டுள்ளன.

  • 9,10 வது தளங்கள் - பொழுதுபோக்குக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தளங்களில் ஜிம், ஸ்பா, தியேட்டர், மீட்டிங் ஹால் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக தியேட்டரில் ஒரே நேரத்தில் 50 பேர் வரை அமர்ந்து படம் பார்க்க அளவிற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

  • 15வது தளத்தில் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக தீவிர சிகிச்சைப் பிரிவை (ICU) அமைக்கவும் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். பூஜை அறையும் அதே மாடியில் அமைக்கப்பட உள்ளது.

  • 19 முதல் 21 மாடிகள் மனோஜ் மோடியின் குடும்ப உறுப்பினர்களுக்கான பென்ட்ஹவுஸாக மாற்றப்பட்டுள்ளன.

  • 16, 17 மற்றும் 18வது தளங்கள் மோடியின் மூத்த மகள் குஷ்பு போதார், கணவர் ராஜீவ் போடார், மாமனார் அரவிந்த் மற்றும் மாமியார் விஜயலட்சுமி போத்தார் உள்ளிட்டோர் வசிக்க உள்ளனர்.

  • 11வது, 12வது மற்றும் 13வது மாடிகள் மனோஜ் மோடியின் இளைய மகள் பக்தி மோடிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

  • மனோஜ் மோடி வீட்டின் மொட்டை மாடியில், அரபிக்கடலை போல பரந்து விரிந்த இன்பினிட்டி நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.