பாதாள சாக்கடையில் யாரும் விழாமல் பாதுகாக்க 7 மணி நேரம் மழையில் நின்ற பூ வியாபாரி!

By YS TEAM TAMIL|7th Sep 2020
மும்பையின் மாதுங்கா பகுதியைச் சேர்ந்த காந்தா மூர்த்தி சாலையில் தேங்கியுள்ள தண்ணீர் வடிய அங்கிருந்த பாதாள சாக்கடையைத் திறந்து அதனருகிலேயே ஏழு மணி நேரம் நின்றுகொண்டிருந்தார்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

மும்பையில் சமீபத்தில் தொடர்ந்து கன மழை பெய்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமான மழைப்பொழிவு இருந்தது. பல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக போராடி வரும் மக்களுக்கு இது மேலும் சவாலாக மாறிப்போனது.


சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற ஒரு சூழலில் தீபக் அம்ராபுர்கர் என்கிற மருத்துவர் எல்ஃபின்ஸ்டோன் சந்திப்பில் இருந்த ஒரு பாதாள சாக்கடையில் விழுந்து உயிரிழந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு வொர்லியில் உள்ள கடல் பகுதிக்கு அருகில் அவரது உடல் மீட்கப்பட்டது.


காந்தா மூர்த்தி என்கிற பெண்மணி பூ விற்பனை செய்து வருகிறார். இவர் ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி மாதுங்கா பகுதியில் சாலையில் தேங்கியிருந்த தண்ணீர் வடிய அங்கிருந்த ஒரு பாதாள சாக்கடையைத் திறந்துள்ளார். அந்த வழியாக செல்பவர்கள் யாரும் அதில் தவறி விழுந்துவிடக்கூடாது என்பதற்காக அதனருகிலேயே ஏழு மணி நேரம் நின்று கொண்டிருந்தார்.

“நான் என் வாழ்வாதாரத்திற்காக பூ விற்பனை செய்து வருகிறேன். எனக்கு எட்டு குழந்தைகள். ஐந்து குழந்தைகளுக்கு திருமணம் முடிந்துவிட்டது. மூன்று குழந்தைகளைப் படிக்க வைக்கிறேன். என் குடும்பத்தில் நான் மட்டுமே சம்பாதிக்கிறேன். என் கணவர் ரயில் விபத்து ஏற்பட்டு முடமாகிவிட்டார்,” என்று ஏஎன்ஐ-இடம் தெரிவித்தார்.

“ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி நகரில் பெய்த தொடர் மழை காரணமாக எல்லா இடங்களிலும் தண்ணீர் தேங்கியது. மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். வாகனங்கள் தண்ணீரில் மிதந்தன. என் வீட்டில் இருந்த பொருட்களும் மழை நீரில் அடித்து செல்லப்பட்டன. எனவே சாலையில் தேங்கிய தண்ணீர் வடிய நான் சாலைக்கு வந்து பாதாள சாக்கடையைத் திறந்துவிட்டேன்,” என்றார்.


யாரும் பாதாள சாக்கடையில் தவறி விழுந்துவிடக்கூடாது என்பதற்காக ஏழு மணி நேரம் அதனருகிலேயே நின்று அந்த வழியாக சாலையில் செல்பவர்களை வழிநடத்தினார். குழந்தையின் படிப்பிற்காக சேமித்து வைத்திருந்த 10,000 ரூபாய் பணத்தையும் இழந்துள்ளார்.

இவரது செயலைப் பலர் பாராட்டியுள்ளது. இருப்பினும் மறுநாள் நகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடையின் மூடியை திறந்ததற்காக திட்டியுள்ளனர்.

“நான் ஏழு மணி நேரம் தண்ணிரீல் நின்றிருந்தேன். பலர் என்னை பாராட்டினார்கள். சிலர் குடை கொடுத்தார்கள். காவல் அதிகாரி ஒருவர் என்னை ஊக்கப்படுத்தினார். மக்கள் நகராட்சிக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் யாரும் வரவில்லை. மறுநாள் சில அதிகாரிகள் வந்து நான் பாதாள சாக்கடையின் மூடியைத் திறந்ததற்காக திட்டினார்கள்,” என்று அவர் தெரிவித்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

கட்டுரை: THINK CHANGE INDIA