பதிப்புகளில்
’வாவ்’ வாசல்

மறுசுழற்சி செய்யப்பட்ட அட்டைப்பெட்டிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள உணவகம்!

32 வயதான அமீத் தனானி மும்பையில் 40,000 சதுர அடியில் அட்டைப்பெட்டிகளால் உருவாக்கப்பட்ட உணவகத்தை நிறுவியுள்ளார்.

YS TEAM TAMIL
12th Jul 2019
11+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போக்கு மக்களிடையே அதிகரித்திருப்பதால் வீட்டில் அட்டைபெட்டிகள் குவிந்து கிடக்கின்றன. ஆன்லைனில் நீங்கள் வாங்கும் பொருட்களை பேக் செய்வதைத் தாண்டி இந்த அட்டைபெட்டிகளை வேறு ஏதேனும் பயன்பாட்டிற்கு உட்படுத்தமுடியும் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா?


அட்டைப்பெட்டிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட கட்டிடம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.


மும்பையில் முழுவதுமாக மறுசுழற்சிக்கு உட்படுத்தப்பட்ட அட்டைக்பெட்டிகளைக் கொண்டு கஃபே ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஃபர்னிச்சர், லைட்டிங் தொடர்பான சாதனங்கள், விளம்பரம், கட்லெரி போன்ற அனைத்துப் பொருட்களும் அட்டைப் பெட்டிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

32 வயதான அமீத் தனானி இந்த கஃபேவை நிறுவியுள்ளார். முதலில் செஃப் ஆக இருந்த இவர் பின்னர் நூலாசிரியராக மாறியுள்ளார். கட்டிட வடிவமைப்பாளர் நுரு கரீம் அவர்களால் வடிவமைக்கப்பட்ட இந்த கஃபே மும்பையின் பாந்திரா குர்லா காம்ப்ளெக்ஸில் அமைந்துள்ளது.

’கார்ட்போர்ட்’ என்றழைக்கப்படும் இந்த கஃபே 40,000 சதர அடியில் அமைந்துள்ளது. அட்டைப்பெட்டிகளால் உருவாக்கப்பட்ட இந்த கஃபே வெறும் ஏழு மாதங்களில் கட்டப்பட்டுள்ளது. இங்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களும் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படும் பொருட்களும் வீகன் உணவும் ஊக்குவிக்கப்படுகிறது.

1

அமீத் என்டிடிவி உடனான உரையாடலில் கூறும்போது,

”அட்டைப்பெட்டி எப்போதும் குறைத்து மதிப்பிடப்படுகிறது. அவற்றை வீடு மாற்றும்போதோ வெவ்வேறு பொருட்களை பேக் செய்யும்போதோ மட்டுமே பயன்படுத்தமுடியும் என மக்கள் நினைக்கின்றனர். ஆனால் அட்டைப்பெட்டி சுற்றுச்சூழலுக்கு உகந்தது. இது நூறு சதவீதம் மறுசுழற்சிக்கு உட்படுத்தக்கூடியது. விலை மலிவானது; நீடித்து உழைக்கக்கூடியது; எடை குறைவானது; ஒலி அனுபவம் சிறப்பாக இருக்கும். நம் அன்றாட வாழ்க்கையில் அட்டைப்பெட்டிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கவேண்டும் என்பதே இந்த கஃபேவின் நோக்கம். மிகச்சிறந்த பொருளான அட்டைப்பெட்டியைக் கொண்டு ஒருவர் ஆயிரக்கணக்கான பொருட்களை உருவாக்க முடியும்,” என்றார்.

தீவிர வானிலையில் இருந்து பாதுகாக்கவும் ஏதேனும் சிந்திவிட்டால் பாதுகாப்பாக இருக்கவும் இங்குள்ள பொருட்களின் மேற்பரப்பு மெழுகு அடுக்குகளால் உருவாக்கப்பட்டுள்ளது.


கஃபேவில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்துமே அதன் செயல்பாடுகளுக்காகவும் நீடித்திருக்கும் தன்மைக்காகவும் பல்வேறு நிலைகளில் பரிசோதனை செய்யப்படுகிறது.

2

பேக்கேஜிங்கைப் பொறுத்தவரை கையில் எடுத்துச்செல்லப்படும் உணவுகள் பேப்பர் பாக்ஸில் வழங்கப்படுகிறது. பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதில்லை. உணவு வீணாவதை முறையாகக் கையாள்வது குறித்தும் இந்த கஃபே திட்டமிட்டு வருவதாக ’தி இந்து’ குறிப்பிடுகிறது. அமீத் மேலும் கூறும்போது,

"மேலும் உணவகத்தில் உணவு அல்லது மற்ற பொருட்களைப் பொறுத்தவரை கழிவுகள் இல்லாத முறையில் சுழற்சி இருப்பதை உறுதிசெய்கிறோம். உணவகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்துவிட்டோம். கழிவுகள் சேகரிக்கப்படும் தொட்டியில் என்ன போடப்படுகிறது என்பதை மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கிறோம்,” என்றார்.

கட்டுரை: THINK CHANGE INDIA


11+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags