4 வருடங்களில் 52 கிளைகள்: கொரோனா மத்தியிலும் லாபமும், வளர்ச்சியும் கண்ட ‘நந்துஸ் சிக்கன்’

பெங்களூருவைச்சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான நந்துஸ் கடந்த மூன்று ஆண்டுகளாக 2X மடங்கு வளர்ச்சி கண்டு வருவதோடு, ஐதராபாத், சென்னை, புனே உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் விற்பனை மையங்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
1 CLAP
0

2008ல் நரேந்திர கே.பசுபதி அமெரிக்காவில் இருந்தி இந்தியா திரும்பியவர், ரூ.5,000 கோடி மதிப்புள்ள குடும்பத்தொழிலான நந்தா குழுமத்தில் இணைந்து செயல்படத்துவங்கினார்.

எட்டு ஆண்டுகள் கழித்து, 2016ல் அவர் 100 சதவீதம் டிரேஸ் செய்யக்கூடிய இறைச்சி உணவை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதற்காக நந்துஸ் (Nandu’s) நிறுவனத்தைத் துவக்கினார்.

இன்று, நாடு முழுவதும் ஒருங்கினைக்கப்பட்ட சிக்கன் பிராண்டாக வளர்ந்திருக்கும் இந்நிறுவனம், பெங்களூருவில் 52 விற்பனை மையங்களைக் கொண்டுள்ளது. தரமான மற்றும் ஆரோக்கியமான சிக்கனை அளிக்கிறது. சுரப்பிகள், ஸ்டிராய்டு போன்றவை பயன்படுத்தாமல் வளர்க்கப்படும் சிக்கனை நந்துஸ் வழங்குகிறது.

ஆண்டுக்கு 2X மடங்கு வளர்ச்சி கண்டு வரும் நிறுவனம், செயல்பாட்டு லாபத்தை அடைந்திருப்பதாகவும், ஐதராபாத், சென்னை, புனே, மும்பை மற்றும் தில்லி உள்ளிட்ட நகரங்களில் தனது நிலையை வலுவாக்கிக் கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறது.

நந்துஸ் நிறுவனம், முக்கிய சந்தைகளில் 125 விற்பனை மையங்களை பெற்றிருக்க திட்டமிட்டிருபதோடு, அடுத்த ஐந்தாண்டுகளில் 600 மையங்களாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

500 கோடி விற்றுமுதல் கொண்ட இந்நிறுவனம், ரூ.2,000 கோடி வருவாயை இலக்காகக் கொண்டுள்ளது.

பெருந்தொற்று காலம்

கொரோனா பெருந்தொற்று பாதிப்பை மீறி நிறுவனம் வலுவான வளர்ச்சி பெறுவதற்கான காரணம், துவக்கத்தில் இருந்து சுத்தமான சிக்கன் தயாரிப்புக்கான வலுவான அடித்தளத்தை அமைத்தது தான் என்கிறார் நரேந்திரா.

“மொத்த சப்ளை சைனையைம் சொந்தமாகக் கொண்டிருந்தது மற்றும் துவக்க முதலீட்டை மேற்கொண்டது பெருந்தொற்று காலத்தில் எளிதாக அமைந்தது என்கிறார் அவர்.

கொரோனா பாதிப்புச் சூழலில் மூன்று நாட்களில் வர்த்தகத்தை மீண்டும் துவக்க முடிந்ததாகவும் தெரிவிக்கிறார்.

“நாங்கள் தான் முதலில் அரசை அணுகி, எங்கள் ஆலையில் உற்பத்தியை துவக்கினோம். அனைத்து சேனல்களிலும் இருப்பதால், ஆன்லைன் டெலிவரிக்கு தேவை அதிகரிகும் என உணர்ந்திருந்தோம்,” என்கிறார்.

சுகாதாரம் மற்றும் பாதுகாப்பையும் இந்த குழு உறுதி செய்தது.

“உற்பத்தி ஆலை, இயந்திரங்கள் பாதுகாப்பாக அமைத்ததோடு, ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து செயல்பட்டனர். தலைக்கான கவசம், உடலை சுற்றிய ஏப்ரான் அணிந்ததோடு, முழு இடமும் சானிடைஸ் செய்யப்பட்டது. துவக்கம் முதல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு அடிக்கடி சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன,” என்கிறார் நரேந்திரா.

சப்ளை செயின்

நிறுவனத்தை துவக்கிய போது, சப்ளை செயின் செயல்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியம் என நரேந்திரா உணர்ந்திருந்தார். இதன் காரணமாக முழு சப்ளை செயினையும் சொந்தமாக உருவாக்கினார். குழுமத்திற்கு ஏற்கனவே கோழிப்பண்ணைகள் இருந்தது சாதகமாக அமைந்தது.

நந்தா குழுமம் தனது பண்ணைகளில் மூன்று மில்லியன் சிக்கன்களை உற்பத்தி செய்கிறது. இவற்றில் பெரும் பகுதி வர்த்தக நோக்கிலானவை. 20 சதவீதம் வாடிக்கையாளர்களுக்கு விற்கப்படுகிறது. ஒப்பந்த பண்ணை அடிப்படையில் குழுமம் விவசாயிகளுடன் இணைந்து செயல்படுகிறது.

கர்நாடகா முழுவதும் 350 விவசாயிகள் நந்துஸ் சிக்கனுக்கான கோழி வளர்க்கின்றனர். இவர்களுகு உதவ 30 பேர் குழு செயல்படுகிறது. மென்பொருள் பொறியாளரான நரேந்திரா தொழில்நுட்பத்தின் அவசியத்தை உணர்ந்திருக்கிறார். இறைச்சி உற்பத்தியின் ஒவ்வொரு கட்டமும் தொழில்நுட்பத்தால் கண்காணிக்கப்படுகிறது.

சிக்கன் உற்பத்தியின் அனைத்து செயல்பாடுகளிலும் நிறுவனம் வெளிப்படைத்தன்மையை உருவாக்கியுள்ளது.

“கோழிக்குஞ்சுகளுக்கான சரியான உணவை தேர்வு செய்வது முதல் இது அமைகிறது. கோழிகள் வளர்ச்சி, முட்டை ஆரோக்கியம், குஞ்சு அடைக்காப்பது என எல்லாமே கண்காணிக்கப்படுகின்றன,” என்கிறார்.

ஆன்லைன் வளர்ச்சி

இந்தியா ஆண்டுதோறும் 30 பில்லியன் மதிப்பிலான இறைச்சி உணவைப் பயன்படுத்துகிறது. இந்த போக்கு மேலும் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், 90 சதவீத தேவை அமைப்பு சாரா நிறுவனங்களால் பூர்த்தி செய்யப்படுகிறது. நந்துஸ் சிக்கன், லிசியஸ், மீட்டிகோ ஆகிய நிறுவனங்கள் இந்த துறையை முறைப்படுத்த முயல்கின்றன.

மளிகைப் பொருட்கள் போலவே இறைச்சி உணவிலும் ஆன்லைன் விற்பனை அதிகரித்து வருவதாக ரெட்சீர் இயக்குனர் ரோகன் அகர்வால கூறுகிறார். இந்நிறுவன தகவல் படி, 2019ல் ரூ.330,000 கோடியாக இருந்த இறைச்சி சந்தை 2024ல் ரூ.460,000 கோடி அளவு வளர்ச்சி அடைய உள்ளது.

“கொரோனா காரணமாக ஆன்லைன் சந்தை 2.5-3X மடங்கு அதிகரித்திருப்பதாக எங்கள் ஆய்வு தெரிவிக்கிறது. உள்ளூர் கடைகளில் இறைச்சி வாங்குவதில் உள்ள தயக்கமே இதற்குக் காரணம். ஆன்லைன் நிறுவனங்கள் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு அம்சத்தை வாடிக்கையாளர்களுக்கு புரிய வைத்துள்ளனர். ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் அதிகம் வாங்கத் துவங்கியதோடு, புதிய வாடிக்கையாளர்களும் அதிகரித்துள்ளனர்.”

ஆங்கில கட்டுரையாளர்: சிந்து காஷ்யப் | தமிழில்: சைபர் சிம்மன்

Latest

Updates from around the world