பிரிட்டன் நிதியமைச்சர் ஆன இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன்!

ரிஷி சுனக் உள்துறை செயலர் ப்ரீத்தி படேல் உடன் பிரிட்டனின் உயர்மட்ட நிர்வாகப் பொறுப்பில் இணைய உள்ளார்.

14th Feb 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டனின் புதிய நிதியமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானபோது இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷி சுனம் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன். இவர் உள்துறை செயலர் ப்ரீத்தி படேல் உடன் பிரிட்டனின் உயர்மட்ட நிர்வாகப் பொறுப்பில் இணைய உள்ளார்.
1

டிசம்பர் 2019 தேர்தலில் போரிஸ் ஜான்சன் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றதை அடுத்து பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சாஜித் ஜாவித் நிதியமைச்சர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார்.


இதனையடுத்து கருவூல தலைமைச் செயலாளராக இருந்த ரிஷி சுனக் நிதியமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 39 வயதான ரிஷி சுனக் பிரிட்டன் அமைச்சரவையில் பிரதமருக்கு அடுத்தபடியாக இரண்டாவது முக்கியப் பதவியான நிதியமைச்சர் பதிவியேற்க உள்ளார். இதனால் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள எண் 11, டவுனிங் தெருவிற்கு செல்ல உள்ளார்.

”ரிஷி சுனக்கை நிதியமைச்சராக நியமிப்பதற்கு பிரிட்டன் ராணி ஒப்புக்கொண்டுள்ளார்,” என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார்க்‌ஷையரின் ரிச்மாண்ட் பகுதியின் எம்பியான இவர் முதன் முதலில் 2015-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் நுழைந்தார். நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதாவை திருமணம் செய்துகொண்டார். இவர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக ஜான்சனுக்கு பெருமளவு ஆதரவளித்தவர்.


ரிஷி சுனக்கின் அம்மா மருந்து கடை நடத்தி வருபவர். இவரது அப்பா அரசு மருத்துவர். ரிஷி; ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக பட்டதாரி ஆவார்.

”என்னுடைய அம்மாவின் சிறிய மருந்து கடையில் பணிபுரிந்துள்ளேன். அதேசமயம் மிகப்பெரிய வணிகங்களை உருவாக்கிய அனுபவமும் எனக்கு உண்டு. பிரிட்டனின் வலுவான எதிர்காலத்திற்கு தற்சார்பு நிறுவனங்களையும் புதுமைகளையும் ஊக்குவிக்கவேண்டும்,” என்று பிரெக்சிட் வாக்கெடுப்பின்போது சுனக் குறிப்பிட்டார்.

சுனக் அரசியலில் பிரவேசிப்பதற்கு முன்பு உலகளாவிய முதலீட்டு நிறுவனத்தின் இணை நிறுவனராக செயல்பட்டார். பிரிட்டனில் உள்ள சிறு வணிகங்களுக்கான முதலீட்டில் முக்கியக் கவனம் செலுத்தினார்.


பிரெக்சிட் மூலம் பிரிட்டனில் செயல்படும் சிறு வணிகங்கள் செழிக்கும் என்று ரிஷி சுனக் திடமாக நம்புகிறார். ஏனெனில் பெரும்பாலான பிரிட்டன் வணிகங்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் தொடர்பில்லை என்றபோதும் ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களுக்கு அவை கட்டுப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.


இந்திய வம்சாவளி எம்பி-க்களான அலோக் சர்மா, சுயேல்லா பிராவெர்மன் ஆகியோரும் பிரிட்டன் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.


தகவல்: பிடிஐ

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding and Startup Course. Learn from India's top investors and entrepreneurs. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India