’வாவ்’ வாசல்

துளசிச் செடிகளாக மாறும் தேசியகொடிகள்: சுதந்திர தினத்திற்காக ஸ்டார்ட் அப்பின் புது முயற்சி!

விதைகள் பதிக்கப்பட்டு தேசியக் கொடிகளை பயன்படுத்தியபின் மண்ணில் விதைத்தால் அது துளசிச்செடியாக வளர்ந்துவிடும்.

YS TEAM TAMIL
15th Aug 2019
9+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

73வது சுதந்தின தினத்தை கொண்டாட நாடே ஆவலாகக் காத்திருக்கிறது. கொண்டாட்ட தினம் நெருங்கிவிட்டதால், கடைகளிலும், போக்குவரத்து சிக்னல்களிலும் விற்கப்படும் மூவர்ணக் கொடியினை மக்கள் ஆர்வமாக வாங்குவதை பார்க்க முடிகிறது. இதில், கவலைக்குரிய விஷயம் என்னவெனில் பெரும்பாலான தயாரிப்புக் கூடங்களில் தேசியக் கொடிகள் பிளாஸ்டிக் தாள்களை கொண்டு தயாரிக்கப்படுகின்றன.


ஆனாலும், பிளாஸ்டிக் நமது சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைக்குவிக்கும் அச்சுறுத்தும் அரக்கனாக மாறிவருகின்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே! பிளாஸ்டிக்குக்கு மாற்றாக மக்கள் பல இகோ- ப்ரெண்ட்லி தயாரிப்புகளை கண்டுபிடித்தாலும், மக்களை அத்தயாரிப்புகளை பயன்படுத்த வைப்பது அத்தனை எளிதல்ல. ஏனெனில், இத்தயாரிப்புகளுக்கு பொதுவாக அதிக விலையே நிர்ணயிக்கப்படுகின்றன.

ஆனால், இந்த சுதந்திரத் தினத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வர பெங்களூரைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ‘சீட் பேப்பர் இந்தியா’ விதைத் தாள்களிலிருந்து தேசியக் கொடிகளை தயாரிக்கும் பசுமை வழியினை தேர்ந்தெடுத்துள்ளது.
plantable flags

இந்த முயற்சி குறித்து சீட் பேப்பர் இந்தியாவின் நிறுவனர் ரோஷன் ரே, என்டிடிவியுடன் கூறியதாவது:

“ஒவ்வொரு நிகழ்ச்சி அல்லது விழாக்களின் முடிவில் லாரி நிறைய கழிவுகள் உருவாகின்றன. உதாரணமாக, சுதந்திர தினத்திற்கு முன்பாக, சிறுவர்கள் போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் பஸ் நிறுத்தங்களில் கொடிகளை விற்பனை செய்வதைக் காண்பீர்கள். ஆனால் சுதந்திர தினத்திற்குப் பிறகு, அதே கொடிகள் சாலைகளில் கவனிக்கப்படாமல் கிடப்பதையும் காணலாம். 2017ம் ஆண்டில் எவ்வளவு கழிவுகள் உருவாக்கப்பட்டு சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்கின்றது என்பதை பற்றிய சிந்தனை எழுந்ததில், கழிவுகளை தாவரங்களாக மாற்றும் முயற்சியில் இறங்க முடிவெடுத்தேன்,” என்றுள்ளார்.

பருத்தி இழைகளைக் கொண்டு கையால் தயாரிக்கப்படும் காகிதத்தில் துளசி விதைகள் பதிக்கப்பட்டு தேசிய கொடிகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், கொடிகளுக்கு சாயமிடுதலும் ஆர்கானிக் முறையில் செய்யப்படுகிறது. இளஞ்சிவப்பு நிறத்தை பெற மஞ்சள் தூளுடன் ஃபுட் கலரை சேர்த்தும், பச்சை வண்ணத்திற்கு கீரையினையும், அசோக சக்கரத்தின் நீல நிறத்திற்காக ஃப்ளூபெர்ரியினையும் பயன்படுத்தி உள்ளனர். இந்த தாவரமாகக்கூடிய ஒரு கொடியின் விலை ரூ.5 முதல் ரூ.12க்குள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

“கொடிகளின் உற்பத்தி என்பது ஐந்து படிநிலை செயல்முறையை உட்படுத்தியதாகும். முதலில் கழிவு ஆடைகளை சேகரிக்கப்பட்டு பின் அவை ஒரு கந்தல்துணி வெட்டும் இயந்திரம் மூலம் பொருத்தமான வடிவங்கள் மற்றும் அளவுகளில் வெட்டப்படுகின்றன. பிறகு, இந்தத் துண்டுகள் இயந்திரத்தைப் பயன்படுத்தி கழுவப்பட்டு நன்கு கூழ்மமாக்கப்படும்,” என்கிறார் ரோஷன்.

plantable flags 1

கூழ்மம் தயாரானதும், அது ஒரு தொட்டியில் ஊற்றப்பட்டு நன்கு கலக்கப்படுகிறது. பின், பெரும் மரத்தொட்டியில் ஊற்றப்பட்டு துளசி விதைகள் சேர்க்கப்படுகின்றது. தயாராகிய விதை காகிதங்கள் இயற்கை சாயமிடுதலுக்கு உட்படுத்தப்படுகிறது. சாயமிடுதல் படிநிலை நிறைவடைய ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை எடுத்துகொள்கிறது.


இது பின்னர் தேவைக்கேற்ப குறிப்பிட்ட வடிவங்கள் மற்றும் அளவுகளாக வெட்டப்படுகிறது. இருப்பினும், சீட் பேப்பர் இந்தியா, சூழல் நலன் கருதி தயாரிக்கும் முதல் தயாரிப்பு இதுவல்ல. தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் படி, இந்த ஆண்டு குடியரசு தினத்தின்போது, விதை காகித இந்தியா நிறுவனம் சத்ய சாய் அனாதை இல்ல அறக்கட்டளையுடன் இணைந்து விதைக் கொடிகள் மற்றும் விதைப் பந்துகளை தயாரித்துள்ளன. மேலே குறிப்பிடப்பட்ட அதே செயல்பாட்டில் தேசியக்கொடிகள் தயாரிக்கப்பட்ட நிலையில், விதை பந்துகள் தேக்கு மரம், சாமந்தி, சூரியகாந்தி, துளசி மற்றும் வேப்பம் ஆகியவற்றின் விதைகளால் தயாரிக்கப் பட்டுள்ளது.


ஆங்கில கட்டுரையாளர்: மேகா ரெட்டி | தமிழில் : ஜெயஸ்ரீ9+ Shares
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags