பதிப்புகளில்
நியூஸ் வியூஸ்

NEET admit card 2019: நீட் தேர்வு ஹால் டிக்கெட் ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?

இந்த வருடம் 15 லட்சத்து 19 ஆயிரம் மாணவர்கள் இந்திய அளவிலும், தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். அதிகாரப்பூர்வ லின்கில் சென்று மாணவர்கள் நீட் ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்...!

YS TEAM TAMIL
15th Apr 2019
Add to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share

இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளில் சேர நீட் பொதுத்தேர்வு மே மாதம் 5ம்தேதி நாடெங்கும் நடைப்பெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட் இன்று முதல் ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி எனப்படும் NTA, நீட் தேர்வுக்கான (NEET) ஹால் டிக்கெட்டை இன்று வெளியிட்டது. இதன் அதிகாரப்பூர்வ தளமான ntaneet.nic.in  தளத்தில் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

போன வருடம் 13 லட்சம் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், இந்த வருடம் 15 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள்.

நாடு முழுதும் நீட் தேர்வு 154 நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் நடைப்பெறும். தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், மதுரை, கரூர், நாமக்கல், நாகர்கோவில், சேலம், தஞ்சை, திருவள்ளூர், திருச்சி உள்ளிட்ட 14 ஊர்களில் நீட் தேர்வு மையங்கள் உள்ளது.

How to download your NEET 2019 admit card: எப்படி ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய சுலபமான 5 வழிகள்

  1. அதிகாரப்பூர்வ தளமான ntaneet.nic.in  விசிட் செய்யவும்.
  2. அங்கு இருக்கும் ‘download admit card’ என்பதை க்ளிக் செய்யவும்.
  3. புதிய பக்கம் திறக்கும். அங்கு பதிவு எண்ணைக் கொண்டு லாக் இன் செய்து கொள்ளவும்.
  4. உங்களுடைய ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
  5. விண்ணப்பதாரர்கள் அதனை டவுன்லோடு செய்து, பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி ஹால் டிக்கெட் இல்லாமல், விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆகையால், கட்டாயம் ஹால் டிக்கெட் ப்ரிண்ட் அவுட் காப்பியை றக்காமல் எடுத்துச் செல்லவும்.

நீங்கள் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யும் அதே நேரத்தில் அதன் காப்பி ஒன்று, விண்ணப்பதாரர்களின் மெயில் ஐ.டி-க்கும் அனுப்பி வைக்கப்படும்.

NEET அதிகாரப்பூர்வ தளம்: NEET candidate log inAdd to
Shares
3
Comments
Share This
Add to
Shares
3
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக