300 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது Netflix

கடந்த மாதம் 150 பேர் பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, இது Netflix செய்யும் இரண்டாவது சுற்று வேலைநீக்கம் ஆகும்
0 CLAPS
0

மாபெரும் ஓடிடி தளமான Netflixசெலவுக் குறைப்பு நடவடிக்கையாக 300 ஊழியர்களை அதாவது தனது சுமார் 4 சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. 

கடந்த மாதம் 150 பேர் பணிநீக்கம் செய்யப்பட்ட பிறகு, இது இரண்டாவது சுற்று வேலைநீக்கம் ஆகும். Netflix தனது முதல் காலாண்டு வருவாயை அறிவித்த பிறகு வந்துள்ள அறிவிப்பு இதுவாகும். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் நிறுவனம தனது கணிசமான சந்தாதாரர்களை இழந்ததன் காரணமாகவே இந்த வேலைநீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

"நாங்கள் வணிகத்தில் தொடர்ந்து குறிப்பிடத்தக்க அளவில் முதலீடு செய்தாலும், எங்கள் மெதுவான வருவாய் வளர்ச்சிக்கு ஏற்ப எங்களின் செலவுகள் அதிகரிக்கும் வகையில் இந்த மாற்றங்களைச் செய்துள்ளோம்," என்று Netflix ஒரு அறிக்கையில் அறிவித்துள்ளது, என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வேலை இழப்புகள் அதன் அமெரிக்க பணியாளர்களை பெருமளவில் பாதித்துள்ளன.

அடுத்த காலாண்டு வருவாய் மதிப்பீட்டில், அதன் நிகர சந்தாதாரர் இழப்புகள் 10x அளவிற்கு இருக்கும் என Netflix எதிர்பார்ப்பதாக, அபாயகரமான அறிவிப்பையும் வெளியிட்டது. 

நெட்ஃபிக்ஸ் Q1 இல் 2,00,000 சந்தாதாரர்களை இழந்த பிறகு, Q2 இல் மேலும் இரண்டு மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் தளத்தை விட்டு வெளியேறுவார்கள் என நிறுவனம் எதிர்பார்க்கிறது.

Netflix இந்த இழப்புகளைப் பற்றி பீதியடையவில்லை, ஆனால் வருவாயின் மந்தநிலையை அடுத்து, தனது புதிய வணிக மாதிரிகள் மற்றும் அளவீடுகளை கண்டுபிடித்து பின்பற்ற செயல்பாடுகளில் சில மாற்றங்களைக் கொண்டுவர நினைப்பது இயல்பானது.

வருவாய் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, நெட்ஃபிக்ஸ் இரு முனை அணுகுமுறையைப் எதிர்நோக்குகிறது. 

முதலாவது, அதன் வரலாற்றில் முதன்முறையாக ஓடிடி தளாத்தில் விளம்பரங்களை அறிமுகப்படுத்துவது. இரண்டாவது, தற்போது ஒரு பயனர் கணக்கில் கடவுச்சொல்லை வைத்திருக்கும் அனைத்து கூடுதல் பயனர்களும் கட்டணம் செலுத்தும் வகையில் கொண்டு வர இருக்கிறது நெட்ஃபிளிக்ஸ்.

செய்தி தொகுப்பு: இந்துஜா ரகுனாதன்

Latest

Updates from around the world