புதிய கல்விக் கொள்கையில் இருப்பவை என்ன?

நாட்டின் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி முறையில் பெரும் மாற்றத்திற்கு வழிவகுக்கும் ‘தேசியக் கல்வி கொள்கை’ 2020-க்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

29th Jul 2020
 • +0
Share on
close
 • +0
Share on
close
Share on
close

நாட்டின் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி முறையில் பெரும் மாற்றத்திற்கு வழிவகுக்கும் ‘புதிய கல்வி கொள்கை’ 2020-க்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. அதன் முதல் நடவடிக்கையாக, ‘மனிதவள மேம்பாடு அமைச்சகம்’ (HRD Ministry) என்று இருந்ததை ‘கல்வி அமைச்சகம்’ (Education Ministry) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையில் உள்ள புதிய மாற்றங்கள் மற்றும் அம்சங்கள் குறித்து மத்திய அமைச்சர்கள் ப்ரகாஷ் ஜாவடேகர் மற்றும் ரமேஷ் போக்ரியால் இன்று செய்தியாளர்களிடம் விளக்கிப் பேசினார்கள்.

கல்வி கொள்கை

புதிய கல்விக் கொள்கையில் கொண்டு வரப்படும் புதிய மாற்றங்கள்:


 • 2030க்குள் பள்ளிக் கல்வியில் 100 சதவீத ஒட்டுமொத்த சேர்க்கை வீதத்துடன் மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை ஒரே மாதிரியான கல்வி முறையை அறிமுகப்படுத்தப்படும். இது அனைவருக்கும் கல்வி என்பது உறுதி செய்யப்படும்.
 • பள்ளிக்குச் செல்லாத 2 கோடி குழந்தைகளை, மீண்டும் கல்வி நீரோட்டத்திற்குக் கொண்டுவர தேசிய கல்வித் கொள்கை 2020 உதவும்.


பள்ளிக்கூடப் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் சீர்திருத்தங்கள்

 • 8 வயது வரையிலான குழந்தைகளுக்கு முன் குழந்தைப்பருவ கவனிப்பு மற்றும் கல்விக்கான தேசியப் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் கட்டமைப்பை (National Curricular and Pedagogical Framework for Early Childhood Care and Education - NCPFECCE) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) உருவாக்கும். 
 • தற்போதுள்ள 10 + 2 பாடத்திட்ட முறை மாற்றப்பட்டு, முறையே 3-8, 8-11, 11-14 மற்றும் 14-18 வயதுக்கேற்ற 5 + 3 + 3 + 4 ஆண்டு பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தப்படும்.  
 • அடிப்படை எழுத்தறிவு மற்றும் கணக்கறிவுடன், கடுமையான பிரிவினை இல்லாத பாடமுறை, பாடத்திட்டம் சாரா அம்சங்கள், பள்ளி அளவிலேயே தொழிற்கல்வி பயிற்றுவித்தலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
 • கல்லூரிகளுக்கு தரம் வாரியாக தன்னாட்சி வழங்குவதன் மூலம் 15 ஆண்டுகளில் இணைவு முறை படிப்படியாக அகற்றப்படும்.
 • அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் 2025-க்குள் 3-ஆம் நிலை வரை அனைவரும் பயில ஏதுவாக, உலகளாவிய அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் அறிவு பெறுவதற்கான திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுகள் தயாராக வேண்டும். 
 • தேசிய புத்தக மேம்பாட்டுக் கொள்கை ஒன்றும் வகுக்கப்பட வேண்டும். 


பன்மொழி மற்றும் மொழியின் ஆற்றல்

 • குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு வரையிலும், ஆனால் 8-ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் முன்னுரிமை அடிப்படையிலும் , தாய்மொழி/ உள்ளூர் மொழி/ பிராந்திய மொழி , பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என கொள்கை வலியுறுத்துகிறது.
 • இந்தியாவின் இதர செம்மொழிகள் மற்றும் இலக்கியங்களும் விருப்பப் பாடங்களாக இருக்கும். எந்த மாணவர் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படமாட்டாது.


மதிப்பீட்டு மற்றும் இதர சீர்திருத்தங்கள்


 • மதிப்பீட்டு முறையில், மதிப்பெண் அட்டை, கற்றல் விளைவுகளை அடைய ஏதுவாக, மாணவர்களின் முன்னேற்றத்தைக் கண்காணித்தல் உள்ளிட்ட 360 டிகிரி ஒட்டுமொத்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
 • புதிய கல்வி கொள்கை 2020 , சுருக்கமான மதிப்பீட்டிலிருந்து , வழக்கமான , முறையான மதிப்பீட்டுக்கு மாறுவதை எதிர்நோக்குகிறது. இது ஆய்வுகள், விமர்சன சிந்தனை, கருத்தியல் தெளிவு போன்ற உயர் திறன்களுக்கு ஏற்ற வகையில் ,திறன் அடிப்படையிலான, கற்றல் மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கிறது.
 • எம்.பில். படிப்பு நிறுத்தப்படுகிறது.
 • சட்டம், மருத்துவப் படிப்புகளைத் தவிர்த்து உயர்கல்விக்கான அமைப்புகளை ஒழுங்குபடுத்த வாரியம் அமைக்கப்படும்.
 • தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்குஒரே நுழைவுத் தேர்வு வைக்கப்படும். இது விருப்பத் தேர்வு மட்டுமே, கட்டாயமல்ல.
 • பொறியியல் போன்ற உயர்கல்வி படிப்புகளில் மாணவர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு மீண்டும் படிக்கலாம்.


சமமான மற்றும் உள்ளடக்கிய கல்வி

 • புதிய கல்வி கொள்கை 2020, எந்தக் குழந்தையும் பிறந்த சூழ்நிலை காரணமாகவோ அல்லது பின்புலம் காரணமாகவோ ,கற்பதுடன் சிறந்து விளங்கும், எந்த வாய்ப்பையும் இழந்துவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 • பாலினம், சமூக-கலாச்சாரம், புவியியல் அடையாளங்கள், உடல் குறைபாடுகள் உள்பட சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கிய குழுக்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
 • பின்தங்கிய பகுதிகள் மற்றும் குழுக்களுக்காக பாலின உள்ளடக்க நிதி, சிறப்புக் கல்வி மண்டலங்கள் அமைப்பதும் இதில் அடங்கும். உடல் குறைபாடு உள்ள குழந்தைகள், வழக்கமான பள்ளிப்படிப்பை அடிப்படையிலிருந்து உயர் கல்வி வரை முழுமையாக மேற்கொள்ள இது வழிவகுக்கும்.
 • முழுமையான உடல் குறைபாட்டுப் பயிற்சி, ஆதார மையங்கள், வசதிகள், உதவிகரமான கருவிகள், பொருத்தமான தொழில்நுட்ப அடிப்படையிலான  உபகரணங்கள், அவர்களது தேவைக்குப் பொருத்தமான இதர பொறிமுறை ஆதரவு ஆகியவற்றுடன் கல்வி கற்பிப்போரின் உதவியும் இதில் இருக்கும்.


வலுவான ஆசிரியர் சேர்க்கை மற்றும் தொழில் பாதை

 • ஆசிரியர்கள், வலுவான, வெளிப்படையான நடைமுறைகளின் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.
 • தகுதி அடிப்படையிலும், பல ஆதார, கால அளவிலான செயல்திறன் மதிப்பீடு, கல்வியியல் நிர்வாகிகள் அல்லது ஆசிரிய கற்பிப்பாளர்களாக உயரும் வகையிலான முன்னேற்ற வழிமுறைகளின்படியும், பதவி உயர்வு இருக்கும்.


ஒழுங்குமுறை

 • மருத்துவ மற்றும் சட்டப் படிப்புகளைத் தவிர ஒட்டுமொத்த உயர் கல்விக்கும் ஒரே முதன்மை அமைப்பாக இந்திய உயர் கல்வி ஆணையம் அமைக்கப்படும். இந்திய உயர் கல்வி ஆணையம் நான்கு பிரிவுகளைக் கொண்டிருக்கும்.
 • தொழில்நுட்பத்தின் உதவியுடன் முகமில்லா இடையீடு மூலமாக செயல்படும் இந்திய உயர் கல்வி ஆணையம், விதிகள் மற்றும் தரங்களைப் பின்பற்றாத உயர்கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்.
 • ஒழுங்குமுறை, அங்கீகாரம் மற்றும் கல்வித் தரத்தில் அரசு மற்றும் தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் ஒரே மாதிரியான விதிகளின் கீழ் நிர்வகிக்கப்படும்.


நெறிமுறைப்படுத்தப்பட்ட நிறுவனக் கட்டமைப்பு

 • உயர்தரக் கற்றல், ஆய்வு மற்றும் சமூகத் தொடர்பை வழங்கும் மிகப்பெரிய, நல்ல வளங்களையுடய, துடிப்பான பல்துறை நிறுவனங்களாக உயர்கல்வி நிறுவனங்கள் மாற்றியமைக்கப்படும்.
 • ஆய்வில் அதிக கவனம் செலுத்தும் பல்கலைக்கழகங்கள், கற்பித்தலில் அதிக கவனம் செலுத்தும் பல்கலைக்கழங்கள் மற்றும் தன்னாட்சி பெற்ற பட்டம் வழங்கும் கல்லூரிகள் என பல்கலைக்கழகத்துக்கான விளக்கம் பல்வேறு கல்வி நிறுவனங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
 • கல்லூரிகளுக்கான இணைப்பு அனுமதி 15 வருடங்களில் காலாவதி ஆகும் மற்றும் கல்லூரிகளுக்கு தன்னாட்சியை கட்டம் கட்டமாக படிப்படியாக வழங்குவதற்காக பல படிநிலைகளைக் கொண்ட ஒரு அமைப்பு உருவாக்கப்படும். சில காலத்துக்கு பிறகு, ஒவ்வொரு கல்லூரியையும் தன்னாட்சியுடைய பட்டங்களை வழங்கும் கல்லூரியாகவோ அல்லது ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகவோ மேம்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.


பள்ளி நிர்வாகம்

 • பள்ளிகள் வளாகங்களாகவோ, தொகுப்புகளாகவோ அமைக்கப்படும். உள்கட்டமைப்பு, கல்வி நூலகங்கள், வலுவான தொழில்முறை ஆசிரியர் சமூகம் உள்ளிட்ட அனைத்து வளங்களும் கிடைப்பதை உறுதி செய்யும் விதத்தில், நிர்வாகத்தின் அடிப்படை அலகாக அது இருக்கும்.


கல்விக்கு நிதியுதவி

 • கல்வித் துறையில் பொதுமுதலீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை விரைவில் எட்ட மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து பணியாற்றும்.


2.5 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகள், 6600 வட்டங்கள், 6000 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், 676 மாவட்டங்கள் ஆகியவற்றில் இருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான ஆலோசனைகளைப் பெற்று முன்னெப்போதும் இல்லாத அளவிலான ஆலோசனை செயல்முறையுடன் தேசிய கல்விக் கொள்கை 2020 வடிவமைக்கப்பட்டுள்ளது.


தகவல் உதவி: பிஐபி

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding Course, where you also get a chance to pitch your business plan to top investors. Click here to know more.

 • +0
Share on
close
 • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India