Disappearing mode, View once, Multi device: வாட்ஸ்அப்’பில் வரவிருக்கும் புதிய வசதிகள்!

உறுதி செய்த மார்க் ஜுக்கர்பெர்க்!
3 CLAPS
0

ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் வாட்ஸ்அப்பில் வரும் மூன்று புதிய அம்சங்களை உறுதிப்படுத்தியுள்ளார். வாட்ஸ்அப் தொடர்பான அனைத்து அப்டேட்ஸ் மற்றும் தகவல்களைக் கண்காணித்து வரும் WaBetaInfo வலைத்தளம் அடுத்து, வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் அம்சங்கள் குறித்து வாட்ஸ்அப் தலைமை நிர்வாக அதிகாரி ஆன வில் கேத்கார்ட் மற்றும் ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி ஆன மார்க் ஜுக்கர்பெர்க்கை அணுகி விவாதித்துள்ளது. இதில் தான் மார்க் புதிய அம்சங்களை குறித்து பேசியுள்ளார்.

அந்த மூன்று அம்சங்கள் முறையே, Disappearing mode, View once மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்படும் Multi device ஆதரவு ஆகியவைகள் ஆகும். ஏற்கனவே கடந்த ஆண்டு Disappearing mode அம்சத்தினை அறிமுகம் செய்திருந்தது வாட்ஸ்அப். இந்த வசதியின் மூலம் ஏழு நாட்களுக்குப் பிறகு சாட்டில் இருந்து மெசேஜ்கள் தானாக மறைந்துவிடுவதை உறுதி செய்திருந்தது.

இதன் அடுத்தகட்டமாக தற்போது அனைத்து சாட்களிலும் disappearing messages-ஐ இயக்கும் disappearing mode-ஐ உருவாக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த வசதி வரும் பட்சத்தில் இது உங்கள் முழு வாட்ஸ்அப் அனுபவத்தையும் இடைக்காலமாக மாற்றும். எப்படி என்றால் எல்லா சாட்களிலும் disappearing messages ஆப்ஷனை எடுக்க விரும்பும் பட்சத்தில் ஒவ்வொன்றாக செய்வதற்கு பதிலாக disappearing mode-ஐ தேர்ந்தெடுக்கலாம்.

இதற்கடுத்த வசதி View once எனப்படும் ஒருமுறை மட்டும் பார்ப்பது. அதாவது நீங்கள் அனுப்பும் செய்திகளை பெறும் நபர் ஒரு முறை பார்த்த பின் அது தானாகவே மறைந்துவிடும்.

இந்த அம்சம் நடைமுறைக்கும் வரும் பட்சத்தில் பெறுநர் உங்கள் புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவர் சாட்டில் இருந்து மறைவதற்கு முன்பு ஒரு முறை பார்க்க முடியும். ஆனால் இந்த அம்சத்தில் உள்ள ஒரு குறை, அனுப்பும் செய்திகளை ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியும் என்பதே.

மூன்றாவது அம்சம் Multi device. மிக நீண்ட காலமாகவே இந்த வசதி எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதற்கேற்ப இந்த வசதி சில மாதங்களாக சோதனைக்கு உட்பட்டு வருகிறது. இதனால் விரைவில் அதாவது அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பப்ளிக் பீட்டாவில் இந்த வசதி வெளிவரும் என்ற தகவலை இந்த உரையாடலில் மார்க் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மல்டி டிவைஸ் வசதியை பயன்படுத்தி நான்கு சாதனங்களை இணைக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Latest

Updates from around the world