தமிழகத்தில் ஏப்ரல் 10 முதல் புதிய ஊரடங்கு கட்டுபாடுகள்: அனுமதி மற்றும் தடைகள் என்ன?

By YS TEAM TAMIL|8th Apr 2021
கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில், தமிழக அரசு, ஏப்ரல் 10ம் தேதி முதல் 30ம் தேதி ஏப்ரல் வரை புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Clap Icon0 claps
 • +0
  Clap Icon
Share on
close
Clap Icon0 claps
 • +0
  Clap Icon
Share on
close
Share on
close

இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிமாக பரவி வருகிறது. பிரதமர் மோடியும் நேற்று முதலமைச்சர்களுடன் பேசுகையில் இதுகுறித்து விவாதித்துள்ளார்.


தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதனால் பல இடங்களில் கூட்டம் காரணமாக கொரோனா பரவல் அண்மை நாட்களாக அதிகரித்தது.

தமிழகம் லாக்டவுன்

இதனை கருத்தில் கொண்டு, மக்களின் நலன் கருதி, நோய் தொற்றை கட்டுப்படுத்த ஏற்கனவே அமலில் இருக்கும் கட்டுப்பாடுகளோடு மேலும் சில கட்டுப்பாடுகளை தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் ஏற்கனவே அமலில் உள்ள பொது ஊரடங்கு உத்தரவில் நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடன் கூடிய கீழ்கண்ட கட்டுப்பாடுகள் ஏப்ரல் 10ம் தேதி முதல் 30ம் தேதி ஏப்ரல் வரை நீட்டித்து தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இந்த புதிய ஊரடங்குக் கட்டுப்பாடுகள் ஏப்ரல் 10ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வந்துள்ளது.


புதிய கட்டுப்பாடுகளில் தடைகள் மற்றும் அனுமதி என்ன:

 • திருமண நிகழ்வுகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்கலாம்.
 • தமிழகத்தில் நாளை முதல் திருவிழாக்களுக்கு தடை.
 • சினிமா தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி.
 • இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
 • பொழுது போக்கு இடங்களான பூங்கா, வணிக வளாகங்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி.
 • கல்வி, சமுதாய, பொழுதுபோக்கு கலாச்சார நிகழ்வுகளில், உள் அரங்குகளில் 200 நபருக்கு மட்டும் அனுமதி.
 • வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் நடைமுறை தொடரும்.
 • அனைத்து வழிபாட்டு தலங்களிலும் இரவு 8 மணிவரை மட்டுமே அனுமதி.
 • சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைகளில் சில்லறை வியாபாரத்திற்கு தடை விதிப்பு.
 • பேருந்து இருக்கைகளில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி.
 • உணவகங்கள் தேநீர் கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
 • ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர்களுக்கு மட்டுமே அனுமதி.