Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

NewsReach- டிஜிட்டல் உள்ளடக்க மீடியா நிறுவனங்களுக்கு 1 கோடி ரூபாய் வரை நிதி ஆதரவு!

சிறியளவிலும் நடுத்தர அளவிலும் செயல்படும் டிஜிட்டல் உள்ளடக்க மீடியா நிறுவனங்ளுக்கு ஆதரவளிக்கும் வகையில் லோக்கல் நியூஸ் கம்யூனிட்டி புரோக்கிராம் என்கிற திட்டத்தைத் தொடங்கியிருக்கிறது News Reach.

NewsReach- டிஜிட்டல் உள்ளடக்க மீடியா நிறுவனங்களுக்கு 1 கோடி ரூபாய் வரை நிதி ஆதரவு!

Saturday June 25, 2022 , 2 min Read

எத்தனையோ டிஜிட்டல் உள்ளடக்க மீடியா நிறுவனங்கள் உள்ளூர் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. உள்ளூர் மக்கள் தகவல்களைத் தெரிந்துகொள்ள அவர்களது வட்டார மொழியிலேயே உள்ளடக்கங்களை இவை உருவாக்கி வழங்கி வருகின்றன.

இவ்வாறு சிறியளவிலும் நடுத்தர அளவிலும் செயல்படும் டிஜிட்டல் உள்ளடக்க மீடியா நிறுவனங்ளுக்கு ஆதரவளிக்கும் வகையில் லோக்கல் நியூஸ் கம்யூனிட்டி புரோக்கிராம் (Local News Community Programme) என்கிற திட்டத்தைத் தொடங்கியிருக்கிறது News Reach.

உள்ளூர் மொழிகளில் உள்ளடக்கங்களை உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்காக 1 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கியிருக்கிறது. உள்ளூர் செய்தி வெளியீட்டாளர்களை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம்.
1

News Reach நிறுவனம் 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போதிருந்து சிறியளவிலும் நடுத்தர அளவில் செயல்பட்டு வரும் டிஜிட்டல் உள்ளடக்க மீடியா நிறுவனங்களை ஊக்குவித்து வருகிறது.

கடந்த இரண்டாண்டுகளில் News Reach 2000-க்கும் மேற்பட்ட செய்தி வெளியீட்டாளர்களுடனும் 3000-க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்களுடனும் பணியாற்றியுள்ளது.

மேலும், News Reach உள்ளடக்க சந்தைப்பகுதியையும் உருவாக்கியிருக்கிறது. இதில், பத்திரிக்கையாளர்கள் தங்கள் உள்ளடக்கங்களை நேரடியாக பதிவிடலாம். அல்லது இதன் மூலம் மீடியா நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்கலாம்.

தற்போது இத்திட்டத்தின் முதல்கட்டமாக 10 லட்ச ரூபாய் வரை ஆதரவு அளிக்கப்பட உள்ளது. இதேபோல், 10 கம்யூனிட்டி புரோக்கிராம் ஏற்பாடு செய்து 24 மாத காலம் வரை மேற்கொள்ளப்பட உள்ளது.

முதல்கட்ட திட்டத்தில் குஜராத் மொழியில் செயல்படும் உள்ளூர் மீடியா நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கப்பட உள்ளது. ஜூலை 5ம் தேதி வரை இதற்கான விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும்.

இதில், 10 மீடியா நிறுவனங்கள் தேர்வு செயப்படும். தேர்வு செய்யப்பட்டவர்கள் பற்றிய அறிவிப்பு ஜூலை 10-ம் தேதி வெளியாக உள்ளது. இவர்களுக்கு 15 நாட்கள் பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்யப்படுகிறது.

“தரமான பத்திரிக்கைகள் சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால், பெரும்பாலான வெளியீட்டாளர்கள் தங்களை நிலைப்படுத்திக்கொள்ளத் தொடர்ந்து போராடி வருகின்றனர். எங்கள் முன்னெடுப்பு பத்திரிக்கையாளர்களுக்கு புதிய பாதையை வகுத்துக் கொடுக்கும் என நம்புகிறோம்,” என்கிறார் NewsReach நிறுவனர் தர்ஷன் ஷா.

முதல் கட்டத்தை தொடர்ந்து மற்ற பிராந்திய மொழி டிஜிட்டல் செய்தி நிறுவனங்களுக்கும் நிதியுதவி அளிக்க உள்ளது NewsReach.

தமிழில் தொகுப்பு: ஸ்ரீவித்யா