நிர்பயா வழக்கு: 4 குற்றவாளிகள் தூக்குத் தண்டனையை தனியே நிறைவேற்றக் கோரிய மனு விசாரணை ஒத்திவைப்பு!

இவ்வழக்கில் அரசு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளி வைத்ததோடு, குற்றவாளிகள் தரப்பில் பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

13th Feb 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

நிர்பயா வழக்கில் பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில், நான்கு குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையை தனித்தனியே நிறைவேற்றுவது தொடர்பான மத்திய அரசு மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளி வைத்துள்ளது. குற்றவாளிகள் தரப்பில் பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.


நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன் மற்றும் ஏ.எஸ்.போபன்னா அடங்கிய பெஞ்ச், குற்றவாளி பவன் குமார் குப்தா சார்பில் ஆஜராக மூத்த வழக்கறிஞர் அஞ்சனா பிராகஷை நியமித்துள்ளது.

Supreme Court of India

Image: Live Law

குற்றவாளி சார்பில் ஆஜராவதற்கான வழக்கறிஞரை தேர்வு செய்ய பொருத்தமான வழக்கறிஞர்கள் பட்டியலை அளிக்குமாறு மாவட்ட சட்ட சேவை ஆணையத்திற்கு கீழ் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, வெள்ளிக்கிழமை பகல் 2 மணி வரை விசாரணையை தள்ளி வைப்பதாக உச்சநீதிமன்ற பெஞ்ச் தெரிவித்துள்ளது.

குற்றவாளிகளுக்கான கடைசி சட்ட வாய்ப்பான சீராய்வு மனுவை குப்தா தாக்கல் செய்யாமல் இருக்கிறார். தூக்குத் தண்டனைக்கு எதிராக கருணை மனு தாக்கல் செய்யும் வாய்ப்பும் அவருக்கு இருக்கிறது.


குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், வினய் சர்மாவின் கருணை மனுக்களை ஏற்கனவே குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டார். இதனால் இவர்கள் இருவரையும் தனித்தனியே தூக்கிலிட அனுமதிக்குமாறு அரசு விசாரணை நீதிமன்றத்தை நாடியது. அக்ஷய் குமார் சிங்கின் தீர்வை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்திருக்கிறார்.


2012ம் ஆண்டு தெற்கு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி 6 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இரண்டு வார மருத்துவப் போராட்டங்களுக்குப் பின்னர் உயிரிழந்தார் அந்த மாணவி. இந்த வழக்கில் நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India