பெண் தொழில் முனைவர்களை ஊக்குவிக்க நிதி ஆயோக் உடன் கைகோர்த்தது Flipkart

- +0
- +0
இந்தியாவில் பெண் தொழில்முனைவோர்களை மேம்படுத்தி ஊக்கப்படுத்தும் விதமாக முன்னணி இணையவழி நிறுவனமாக ஃபிளிப்கார்ட் உடன் நிதி ஆயோக் கைகோர்த்துள்ளது.
மகளிருக்கான தொழில் முனைவோர் தளத்தை மேம்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. மகளிர் தொழில்முனைவோர் தளம் (WEP) என்பது ஒரு ஒருங்கிணைந்த அணுகல் போர்டல் ஆகும். இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெண்களை ஒன்றிணைத்து அவர்களின் தொழில் முனைவோர் அபிலாஷைகளை உணர வைக்கிறது.
ஃபிளிப்கார்ட் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
பெண்கள் தொழில்முனைவோர் நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் மற்றும் வழிகாட்டிகளின் வழியில்லாமல் தவித்து வருகின்றனர். வேலை மற்றும் குடும்பம் இரண்டையும் சமமாக நடத்தவேண்டும் உள்ளிட்ட பொதுவான பிரச்னைகளை பெண்கள் எதிர்கொள்கின்றனர். இதனால் தான், பெண்கள் இணைந்து அல்லது ஒரு குழுவாக பயணிக்கும்போது, அவர்களுக்கு மேற்கண்ட சவால்களை எதிர்கொள்வது எளிதாகிறது.
அவர்களால் அதில் சிறப்பாக செயல்படவும் முடிகிறது. வழிகாட்டிகள் மற்றும் நிபுணர்களிடம் இருந்து அனுபவங்கள் பகிரப்படும்போது, ஆர்வமுள்ள பெண் தொழில்முனைவோருக்கு அது மேலும் உத்வேகத்தைக் கொடுக்கும்.
இந்த (WEP) தளமானது தொழில்முனைவோருக்கு இடையிலான பேச்சுவார்த்தை, தொடர்பு மற்றும் ஈடுபாட்டை அதிகரிக்க உதவும். இது தொழில்முனைவோரின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய அறிவு பகிர்வு மையமாகவும் அமையும்.

நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த்,
“தொழில்முனைவோருக்கான டிஜிட்டல்தளமாக WEP இருக்கும். வெறும் தகவல் மற்றும் ஆதரவு மட்டுமில்லாமல், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும் வகையிலும் இது இருக்கும். மக்களின் குரல்களைக் கேட்பதற்கான ஒரு மன்றமாக சேவை செய்வது - மக்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு கொள்கைகளையும் திட்டங்களையும் தெரிவிக்க இது உதவும்,” என்று தெரிவித்துள்ளார்.
ஃபிளிப்கார்ட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,
“ஃபிளிப்கார்ட்டில், நாங்கள் செய்யும் எல்லாவற்றின் மையத்திலும் தொழில்நுட்பமும் கண்டுபிடிப்புகளும் உள்ளன. ஒரு உள்நாட்டு நிறுவனமாக, உள்ளூர் இந்திய வணிகங்கள், எம்.எஸ்.எம்.இ மற்றும் ஸ்டார்ட்-அப்’களுடனான எங்கள் நிலையான மற்றும் தீவிரமான ஈடுபாடு அவர்களின் சவால்களையும் தேவைகளையும் நன்கு புரிந்துகொள்ள எங்களுக்கு உதவியது,” என்றார்.
பெண்கள் தொழில்முனைவோருக்கான இந்த தளம் அவர்களின் வளர்ச்சி, லட்சியத்தையும், பெண்கள் தலைமையிலான வணிகங்களை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கியப் பங்கைக் கொண்டுள்ளது, மேலும் அவர்களின் வெற்றிக்கான பயணத்தை செயல்படுத்துவதில் நிதி ஆயோக்குடன் கூட்டுசேர்வது எங்களுக்கு கிடைத்த பாக்கியம், என்று தெரிவித்துள்ளார்.
- பெண்கள்-முன்னேற்றம்
- Flipkart
- பெண் தொழில்முனைவோர்கள்
- ஃபிளிப்கார்ட்
- நிதி ஆயோக்
- தொழில்முனைவோர்கள்
- Niti Aayog
- NITI Ayog
- +0
- +0