TikTok செயலிக்கு தடை இல்லை? உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

TikTok செயலி மீதான தடை குறித்து வரும் 24ம் தேதிக்குள் சென்னை உயர்நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என்றும் அப்படி தவறும் பட்சத்தில் தடை தளர்ந்ததாக கருதப்படும் என்று தெரிவித்துள்ளது

TikTok செயலிக்கு தடை இல்லை? உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

Monday April 22, 2019,

2 min Read

டிக் டாக் செயலிக்கு உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று உச்ச நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்த டிக் டாக் தடைக்கான மேல் விசாரணையில், TikTok செயலி மீதான தடை குறித்து வரும் 24ம் தேதிக்குள் சென்னை உயர்நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என்று அப்படி தவறும் பட்சத்தில் தடை தளர்ந்ததாக கருதப்படும் என்று தெரிவித்துள்ளது

சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலி பதின்பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. 15 நொடி அளவிலான வீடியோக்களை இசை பின்னணியுடன் எளிதாக உருவாக்க வழி செய்யும் இந்த செயலி, இந்திய இளசுகள் மத்தியிலும் வெகு வேகமாக பிரபலமாகியிருக்கிறது.

எனினும் இந்த செயலி ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து பலரும் கவலை தெரிவித்து வந்தனர். குறிப்பாக இந்த செயலி ஆபாச வீடியோக்களை உருவாக்கி பகிர வழி செய்வதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதனால் இளம் உள்ளங்கள் பாதிக்கப்படும் எனும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இது தொடர்பான மனு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, கடந்த 3 ம் தேதி, இந்த செயலிக்கு தடை விதித்தது. இது தொடர்பாக அரசுக்கும் உத்தரவிட்டது. மேலும், இந்த வீடியோக்களை வெளியிடக்கூடாது என ஊடகங்களுக்கு தடை விதித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து பைட்டான்ஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. தனது மேடையில் மூன்றாம் தரப்பினரால் பகிரப்படும் வீடியோக்களுக்கு தாங்கள் பொறுப்பு அல்ல என்று நிறுவனம் வாதிட்டது. மற்ற சமூக ஊடகங்கள் போலவே தாங்களும் செயல்படுவதாகவும், இந்த தடை பாரபட்சமானது என்றும் நிறுவனம் வாதிட்டது.

எனினும் உச்சநீதிமன்றம்; சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,

TikTok செயலி மீதான தடை குறித்து வரும் 24ம் தேதிக்குள் சென்னை உயர்நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என்று அப்படி தவறும் பட்சத்தில் தடை தளர்ந்ததாக கருதப்படும் என்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனிடையே டிக்டாக் செயலியை பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்குமாறு கூகுள் மற்றும் ஆப்பிள் ஆகிய நிறுவனங்களுக்கு கடந்த வாரம் அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து டிக்டாக் செயலியை டவுன்லோடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே டவுன்லோடு செய்தவர்கள் மட்டும் தற்போது தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.