வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நற்செய்தி - இனி இந்த நாடுகளில் எல்லாம் UPI பேமெண்ட் செய்யலாம்!

By Kani Mozhi
January 13, 2023, Updated on : Fri Jan 13 2023 12:05:22 GMT+0000
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நற்செய்தி - இனி இந்த நாடுகளில் எல்லாம் UPI பேமெண்ட் செய்யலாம்!
வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) இப்போது தங்கள் சர்வதேச மொபைல் எண் மூலமாக ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தை (யுபிஐ) அணுகக்கூடிய வசதி ஏராளமான நாடுகளுக்கு வந்துவிட்டது தெரியுமா?... அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்...
 • +0
  Clap Icon
Share on
close
 • +0
  Clap Icon
Share on
close
Share on
close

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) இப்போது தங்கள் சர்வதேச மொபைல் எண் மூலமாக ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தை (யுபிஐ) அணுகக்கூடிய வசதி ஏராளமான நாடுகளுக்கு வந்துவிட்டது தெரியுமா?

அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்...

வெளி நாடுகளில் UPI பேமெண்ட் வசதி!

இந்தியாவைப் பொறுத்தவரை UPI பேமெண்ட் முறை சின்ன சின்ன நகரங்களில் ஆரம்பித்து கிராமங்கள் வரை பரந்து விரிந்து இருக்கிறது. 10 ரூபாய் ஆனாலும் சரி, 10 ஆயிரம் ரூபாய் ஆனாலும் சரி QR Code-ஐ ஸ்கேன் செய்து பணத்தை செலுத்திவிடலாம். இந்த வசதி இப்போது இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளிலும் விரிவடைந்துள்ளது.

UPI

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) இப்போது தங்கள் சர்வதேச மொபைல் எண்களை பயன்படுத்தி UPI Payment அணுகக்கூடிய வசதி அறிமுகப்படுத்தப்படுத்தியுள்ளது. இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) பத்து நாடுகளில் உள்ள என்ஆர்ஐகள் தங்களுடைய சர்வதேச மொபைல் எண்களைப் பயன்படுத்தி UPI சேவைகளை அணுகுவதற்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட உள்ளது.

வழிகாட்டுதல்களின்படி, குறிப்பிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மொபைல் எண்கள் மற்றும் NRE/NRO கணக்கு உள்ளவர்கள் விரைவில் UPI கட்டணச் சேவைகளைப் பயன்படுத்த முடியும். நாட்டில் பயன்படுத்தும் மொபைல் எண்ணைக் கொண்டு UPI கணக்கை ஆக்டிவேட் செய்து கொள்ள முடியும். எந்தவொரு பயன்பாட்டிற்கும் UPI ஐடி பயன்பாட்டிற்குச் சரியான இந்திய மொபைல் எண் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Google Pay அல்லது Paytm போன்ற ஆப்களில் UPI-யைப் பயன்படுத்த வங்கிக் கணக்கை இணைக்கும் போது, இந்திய எண்ணில் இருந்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலமாக உறுதி செய்யப்பட்ட தகவல் அனுப்பப்படும்.

எனவே, இந்தியாவில் இருந்து UPI பேமெண்ட் செயல்படும் நாட்டிற்குச் செல்வோர் இந்திய சர்வதேச எண்ணை ஆக்டிவ் செய்து வைத்திருக்க வேண்டும்.

NRE/NRO கணக்கு வைத்திருப்பவர்களுக்கான சர்வதேச எண்களின் UPI ஆனது ஏப்ரல் 30, 2023க்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் UPI பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும்.

upi

எந்தெந்த நாடுகளில் UPI செயல்படும்:

தற்போதைய உள்நாட்டு நாட்டின் குறியீட்டுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள நாடுகளின் குறியீட்டைக் கொண்ட மொபைல் எண்களில் இருந்து UPI பரிவர்த்தனை தொடங்கப்படுபதாக NPCI அறிவித்துள்ளது.

 • சிங்கப்பூர் (Singapore: +65)
 • ஆஸ்திரேலியா (Australia: +61)
 • கனடா (Canada: +1)
 • ஹாங்காங் (Hong Kong: +852)
 • ஓமன் (Oman: +968)
 • கத்தார் (Qatar: +974)
 • அமெரிக்கா (USA: +1)
 • சவூதி அரேபியா (Saudi Arabia: +966)
 • ஐக்கிய அரபு நாடுகள் (United Arab Emirates: +971)
 • ஐரோப்பா (United Kingdom: +44)

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:

UPI அமைப்பின் உறுப்பினர் வங்கிகள் பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு சர்வதேச மொபைல் எண்களைக் கொண்ட NRE/NRO கணக்குகளுக்கு UPI சேவைகளை வழங்க முடியும்.

”சர்வதேச மொபைல் எண்களைக் கொண்ட NRE/NRO வங்கிக் கணக்குகளுக்கு யூபிஐ அணுகலைப் பெற தற்போதுள்ள ஃபெமா விதிமுறைகளின்படி, மட்டுமே அனுமதிக்கப்படுகிறது மற்றும் அவ்வப்போது இந்திய ரிசர்வ் வங்கியின் சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறைத் துறைகள் வழங்கும் வழிகாட்டுதல்கள்/அறிவுறுத்தல்களுக்கு இணங்குகின்றன," என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

தற்போதுள்ள UPI வழிகாட்டுதல்களின்படி, அனைத்து ஆன்போர்டிங்/பரிவர்த்தனை நிலை சோதனைகளும் அத்தகைய கணக்குகளுக்குப் பொருந்தும் என்றும் NPCI கூறியது.