Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

நீங்கள் வெளிநாடுவாழ் இந்தியரா? உங்களுக்குத் தேவையான பொருட்களை கொண்டு சேர்க்கிறார் சேத்தனா!

சேத்தனா சோமவரப்பு, ராஜேஷ் கவினி தம்பதி நிறுவியுள்ள ’ஃபார்வர்ட் பார்சல்’ ஸ்டார்ட் அப் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் எளிதாக ஷாப்பிங் செய்ய உதவுகிறது.

நீங்கள் வெளிநாடுவாழ் இந்தியரா? உங்களுக்குத் தேவையான பொருட்களை கொண்டு சேர்க்கிறார் சேத்தனா!

Saturday December 05, 2020 , 3 min Read

சேத்தனா சோமவரப்பு வெளிநாடு வாழ் இந்தியர். கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக யூகே-வில் வசித்து வருகிறார். இந்திய பொருட்களை நியாயமான விலையில் வாங்குவதில் இவர் கடும் சிரமங்களை சந்தித்துள்ளார். இதனால் இந்தியாவிலிருந்து இனிப்பு வகைகள், ஊறுகாய், எத்னிக் உடைகள் போன்றவற்றை கவனமாக வாங்கி போதிய இருப்பு வைத்திருப்பார்.


வழக்கமாகவே வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாக பாரம்பரிய பொருட்களைப் பெறுவார்கள். குறைந்த விலையில் இவற்றைப் பெறுவதற்கான ஒரே வழி இதுதான். ஆனால் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் இதுபோன்று அடிக்கடி உதவி கேட்பது சேத்தனாவிற்கு தர்மசங்கடமாக இருந்துள்ளது.


இவரது பெற்றோரும் வயதானவர்கள் என்பதால் அவர்களாலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யமுடியமால் போனது.

“ஊறுகாய் போன்ற இந்திய தயாரிப்புகள் எனக்குத் தேவைப்பட்டது. ஆனால் இவை கிடைக்காமல் கஷ்டப்பட்டேன். எனக்கென ஒரு குடும்பம் வந்த பிறகு சிறு வயதில் நான் அனுபவித்தவை என் மகளுக்குக் கிடைக்கவில்லை என வருந்தினேன். ஒருகட்டத்தில் உதவி கேட்டு மற்றவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கக்கூடாது என்றும் தீர்மானித்தேன்,” என்றார்.

தீபாவளி, தசரா போன்ற பண்டிகை நாட்களில் சேத்தனா தனது மகளுக்கு அழகாக அலங்காரம் செய்து பார்க்க விரும்புவார். ஆனால் லெஹங்கா போன்ற எத்னிக் ஆடைகள் இந்தியாவில் கிடைக்கும் விலையுடன் ஒப்பிடுகையில் யூகே-வில் ஐந்து மடங்கு அதிக விலைக்கே விற்பனை செய்யப்பட்டன. இவ்வளவு அதிக விலை கொடுத்து வாங்குவதிலும் அவருக்கு விருப்பம் இல்லை.


2017-ம் ஆண்டு சேத்தனா இந்தியா திரும்பிய பின்னர் இவர் சந்தித்ததுபோன்றே வெளிநாடு வாழ் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணத் தீர்மானித்தார். சர்வதேச அளவில் பேக்கேஜ்களை அனுப்பும் சேவையைத் தொடங்கினார்.


ஃபார்வர்ட் பார்சல் (Forward Parcel) 2018-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. கிடங்கு அமைப்பது, வலைதளம் உருவாக்குவது போன்ற முக்கிய நடவடிக்கைகளுக்கு ஓராண்டு செலவிட்ட பிறகு 2019-ம் ஆண்டு இந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.


சேத்தனாவின் கணவர் ராஜேஷ் கவினி இணை நிறுவனராக இணைந்துகொண்டார். வெளிநாடுகளில் வசித்து வரும் இவர்களது நண்பர்கள் பலருக்கும் இவர் சந்தித்த பிரச்சனைகள் தொடர்ந்து நிலவியதால், சந்தை தேவைகளை இவர்களால் சிறப்பாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

2

நிறுவனத்தின் செயல்பாடுகள்

ஃபார்வர்ட் பார்சல் சேவையைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புவோர் முதலில் அதன் வலைதளத்தில் பதிவு செய்யவேண்டும். அதன் பிறகு வாடிக்கையாளர்களுக்கு இந்திய முகவரியும் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணும் கொடுக்கப்படும். இதைப் பயன்படுத்தி உள்நாட்டில் ஷாப்பிங் செய்துகொள்ளலாம்.


வாடிக்கையாளர்களின் சார்பாக இந்த ஸ்டார்ட் அப் பேக்கேஜ்களைப் பெற்றுக்கொள்ளும். வாடிக்கையாளர்கள் ஆன்லைன் டேஷ்போர்ட் மூலம் பேக்கேஜ் எங்குள்ளது என்கிற விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். இதுமட்டுமின்றி பேக்கேஜின் தோராயமான எடையும் தெரிவிக்கப்படும். வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் முழுமையாக வாங்கி முடிக்கும் வரை அவர்கள் வாங்கிய பொருட்கள் ஸ்டோர் செய்யப்படும்.


வாடிக்கையாளர் பர்சேஸ் செய்து முடித்ததும், ஃபார்வர்ட் பார்சல் அனைத்து பொருட்களையும் ஒரே பாக்ஸில் பேக் செய்கிறது. தேவையில்லாத பேக்கேஜ்களை அகற்றிவிட்டு, தேவையானவற்றை கூடுதலாக பேக் செய்து இந்த ஸ்டார்ட் அப் ஒழுங்குபடுத்துகிறது. அதன் பிறகு உலகின் வெவ்வேறு மூலைகளில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஐந்து நாட்களில் டெலிவர் செய்துவிடுகிறது.


வெவ்வேறு சந்தைப்பகுதிகளில் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக வாங்கி பெற்றுக்கொள்வதைக் காட்டிலும் இவர்களது தளத்தின் மூலம் ஷாப்பிங் செய்வதால் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 70 சதவீதம் அளவிற்கு சேமிக்கமுடியும் என்கிறார் சேத்தனா.


கஸ்டம்ஸ் பணிகள் நிறைவடைந்த பிறகு இறுதியான எடை, ஷிப்பிங் கட்டணம், ட்ராக்கிங் போன்ற தகவல்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். 10 கிலோ எடையுள்ள பேக்கேஜிற்கு கிட்டத்தட்ட 6,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

3

சந்தித்த சவால்கள்

சேத்தனா, ஜி நாராயணம்மா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றவர். 2005-ம் ஆண்டு டீ மாண்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் மல்டிமீடியா கம்யூனிகேஷன்ஸ் பொறியியல் பிரிவில் முதுகலைப் பட்டப்படிப்பில் சேர்வதற்காக யூகே மாற்றலானார்.


சேத்தனா டிஜிட்டல் மார்க்கெட்டிங் பகுதியில் அனுபவமிக்கவர். அவரது கணவர் ராஜேஷ் சேமிப்பு கிடங்கு மற்றும் செயல்பாடுகளில் அனுபவமிக்கவர். இவர்கள் இருவரும் தங்களது அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் கொண்டு வணிகத்தை சிறப்பாக நிர்வகித்து வருகின்றனர். ராஜேஷ் இதற்கு முன்பு யூகே-வில் நெஸ்லே நிறுவனத்திலும் இந்தியாவில் அமேசான் நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார்.


சேத்தனா ஆரம்பத்தில் 'இண்டியன்ஸ் இன் லண்டன்’ போன்ற ஆன்லைன் குழுக்களையும் சமூக வலைதளங்களில் உள்ள இதுபோன்ற பக்கங்களையும் அணுகினார். அங்கிருந்து பரிந்துரைகள் மூலம் இவரது வணிகம் மெல்ல விரிவடையத் தொடங்கியது.


இந்த வணிகம் குறித்து தெரிந்துகொண்ட பலர், இவரது சேவையைப் பாராட்டியுள்ளனர். 6,000-க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும் 85 சதவீதம் பேர் மீண்டும் இந்த ஸ்டார்ட் அப்பின் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்வதாகவும் சேத்தனா தெரிவிக்கிறார்.


வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் அல்லாத பிற நாட்டினரும் இந்தத் தளத்தில் ஆர்வம் காட்டுவதைப் பார்க்கமுடிகிறது. 1,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் இவர்களது சேவையைப் பெற பதிவு செய்துள்ளனர்.


எனினும் சேத்தனா இதற்கு முன்பு இந்தியாவில் பணிபுரிந்ததில்லை என்பதால் பல்வேறு சவால்களை இருவரும் சந்தித்துள்ளனர். WE HUB இன்குபேஷன் திட்டத்தில் இரண்டாவது குழுவில் தேர்வானது வழிகாட்டல், வாடிக்கையாளர் மேலாண்மை ஆகியவற்றை அணுகவும் ஆர்வமுள்ள முதலீட்டாளர்களுடன் இணையவும் உதவியதாக சேத்தனா தெரிவிக்கிறார்.


பெருந்தொற்று காலத்திற்கிடையே இந்த ஸ்டார்ட் அப்பின் சேவைக்கான தேவை அதிகரித்தது. தீபாவளி சமயத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் விற்பனை அதிகபட்ச அளவை எட்டியுள்ளது.

கொரோனா பெருந்தொற்று சூழல் மாறி இயல்பு வாழ்க்கை திரும்பிய பிறகும் மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ள நண்பர்களிடமும் உறவினர்களிடமும் உதவி கேட்பதற்கு பதிலாக இந்தத் தளத்தை அணுகவேண்டும் என்பதே சேத்தனாவின் விருப்பமாக உள்ளது.

ஆங்கில கட்டுரையாளர்: டென்சின் நார்சம் | தமிழில்: ஸ்ரீவித்யா