ஐபிஓ வெளியிட்ட Nykaa: ரூ.2,396 கோடி முதலீடு திரட்டல்!
ஒரு பங்கின் விலை ரூ.1,125 என்ற அளவில் விற்பனை!
அழகுசாதனங்கள் உள்ளிட்ட ஃபேஷன் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் 'நைகா' (Nykaa). நைகாவின் தலைமை நிறுவனமான FSN E-Commerce Ventures இன்று ஐபிஓ வெளியிட்டது. ஐபிஓ வெளியிடுவதாக அறிவித்தபோதே முதலீட்டாளர்கள் மத்தியில் நைகாவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு இன்று பலன் கிடைத்துள்ளது. ஆம், இன்றைய ஐபிஓ விற்பனையில் ஆன்கர் இன்வெஸ்டர்ஸ் இடமிருந்து ரூ.2,396 கோடி திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது நைகா நிறுவனம்.
ஃபல்குனி நாயர் என்பவரால் 2012ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நைகா நிறுவனம், பெண்களுக்கான அழகுசாதனப் பொருட்களுடன் ஆரோக்கியப் பொருட்களையும் ஆன்லைன் சந்தை மூலமாக விற்பனை செய்து வருகிறது. தொடர்ந்து இந்தத் துறையில் நல்ல முன்னேற்றத்தை கண்டுவருகிறது.
நிகர இழப்புடன் 2020 நிதியாண்டில் ரூ.16.34 கோடியாக இருந்த நைகாவின் நிகர லாபம், 2021 நிதியாண்டில் ரூ.61.94 கோடி என்ற அளவில் நிகர லாபம் ஈட்டியுள்ளது. அதேபோல் அதன் வருவாய் 2020 நிதியாண்டில் ரூ.1,768 கோடியிலிருந்து நிதியாண்டில் ரூ.2,441 கோடியாக உயர்ந்துள்ளது.
இப்படியான நிலையில் தான் நைகா, இன்றைய ஐபிஓவில் ஒரு பங்கு ரூ.1,125 என்ற அளவில் முதலீட்டாளர்களுக்கு விற்றது. நவம்பர் 1ம் தேதி வரை ஐபிஓ விற்கப்பட இருக்கிறது. ஐபிஓ மூலம் கிடைக்கும் வருமானத்தை புதிய சில்லறை விற்பனைக் கடைகளை அமைக்கவும், புதிய கிடங்குகளை நிறுவவும் திட்டமிட்டுள்ளது.
கூடுதலாக, நிறுவனம் IPO மூலம் கிடைக்கும் வருமானத்தை சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. Nykaa Cosmetics, Nykaa Naturals மற்றும் Kay Beauty போன்ற தங்கள் நிறுவனத்தின் கீழ் இயங்கும் 13 பிராண்டுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தபோவதாகவும் நைகா அறிவித்துள்ளது.
ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத் கூறுகையில்,
“நைகா ஒரு நல்ல பயணத்தை மேற்கொண்டுள்ளது! ஆரம்பக் கட்டத்தில், பெரும்பாலான ஸ்டார்ட்அப்கள் இதைப் பற்றி சிந்திக்காதபோது, அவர்கள் நிறுவன செயல்முறைகளை அமைத்து, தரப்படுத்தப்பட்ட நெறிமுறைகளை அமைத்தனர் என்பதே அதற்கு முக்கியமாகும். உதாரணமாக, சப்ளையர்களுடன் பிரத்தியேகமாக (ஹுடா போன்ற) இணைந்ததன் மூலம் அவர்கள் தங்கள் சரக்கு நிர்வாகத்தை ஒழுங்காகப் பெற்றுள்ளனர்," என்று ஐபிஓவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.