ஓரிரு ஊழியர்களுக்கு கொரோனா இருந்தால் அலுவலகத்தை மூடத் தேவையில்லை: மத்திய சுகாதாரத் துறை!

பணியிடங்களின் பாதுகாப்பு தொடர்பாக முழுமையான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

21st May 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நான்காம்கட்ட பொதுமுடக்கம் அமலில் இருக்கும் நிலையில் ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி அலுவலகங்கள், குறைவான ஊழியர்களுடன் செயல்படலாம் என்று அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பணியிடங்களின் பாதுகாப்பு தொடர்பாக முழுமையான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

office

ஒரு அலுவலகத்தில் ஒன்றிரண்டு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால் அந்த அலுவலகம் செயல்படும் மொத்த கட்டிடத்தையும் மூடி சீல் வைக்கவேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்டப் பகுதியை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்திய பின்னர் பணியைத் தொடரலாம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“ஒரு அலுவலகத்தில் ஒன்று அல்லது இரண்டு பேருக்கு நோய்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டால், கடந்த 48 மணி நேரத்தில் தொற்று ஏற்பட்ட நோயாளி, சென்று வந்த பகுதிகளை மட்டும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தவேண்டும். அலுவலகம் செயல்படும் ஒட்டுமொத்த கட்டிடத்தையோ அல்லது அதன் மற்ற பகுதிகளையோ மூடி சீல் வைக்கவேண்டிய அவசியமில்லை. அரசாங்கத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி அந்தக் குறிப்பிட்ட பகுதியை மட்டும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தவேண்டும்,” என்று சுகாதாரத் துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் 48 மணி நேரம் வரை ஒட்டுமொத்த கட்டிடத்தையும் மூடி சீல் வைத்துவிட்டு கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தியப் பிறகு செயல்படத் தொடங்கலாம் என்று இந்த வழிகாட்டுதல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.


ஒருவேளை ஊழியர் ஒருவருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி ஏதேனும் தென்பட்டால் அவர் அலுவலகத்திற்கு வருவதைத் தவிர்த்துவிடவேண்டும். மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டு நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டால் அலுவலக அதிகாரிகளிடம் தெரிவிக்கவேண்டும்.


கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் அலுவலக ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊழியர்கள் நெருக்கமாக அமர்ந்து பணிபுரியக்கூடிய பணியிடங்களில் ஒரு சிலருக்கு கோவிட்-19 அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் மற்றவர்களுடன் தொடர்பு இல்லாதவாறு தனியான பகுதிக்கு மாற்றப்படவேண்டும். மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அரசு சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும் வரை அவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்கவேண்டும்.

பணியிடங்கள் அதிக காற்றோட்டம் இல்லாமல் ஊழியர்கள் நெருக்கமாக பணிபுரியவேண்டிய சூழலில் தொற்று பலருக்கு விரைவாகப் பரவ வாய்ப்புள்ளது. இதைத் தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் வலுயுறுத்தப் பட்டுள்ளது.

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding and Startup Course. Learn from India's top investors and entrepreneurs. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close