Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

விரைவு காமர்ஸ் பிசினஸ் ‘Ola Dash' மூடப்படுவதாக அறிவித்தது Ola!

ஓலா நிறுவனம் தனது ஓலா டேஷ் சேவையை நிறுத்துவதாகவும், ஓலா எலெக்ட்ரிக்கில் கவனம் செலுத்தும் வகையில் பயன்படுத்திய கார்கள் வர்த்தகத்தை மாற்றி அமைப்பவதாகவும் அறிவித்துள்ளது.

விரைவு காமர்ஸ் பிசினஸ் ‘Ola Dash' மூடப்படுவதாக அறிவித்தது Ola!

Saturday June 25, 2022 , 1 min Read

பகிர்வு போக்குவரத்து நிறுவனமான ஒலா, தனது விரைவு காமர்ஸ் சேவையான ’Ola Dash' –ஐ மூடுவதாக அறிவித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு ஓலா எலெக்ட்ரிக்கிற்கு வலு சேர்க்கும் சந்தை உத்தியாக துவக்கப்பட்ட பயன்படுத்திய கார்கள் பிரிவான ஓலா கார்ஸை மாற்றி அமைப்பதாகவும் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம், ஓலா நிறுவனம், 20 நகரங்களில் 500 டார்க் ஸ்டோர்கள் கொண்டதாக 'ஓலா டேஷ்' சேவையை விரிவாக்கம் செய்வதாக அறிவித்தது.

இந்நிலையில், தெளிவான நோக்குடன் தனது முன்னுரிமைகளை ஆய்வு செய்து, விரைவு காமர்ஸ் வர்த்தகத்தை மூட தீர்மானித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓலா கார்ஸின் உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம் ஆகியவை, ஓலா எலெக்ட்ரிக் விற்பனை, சேவைக்காக பயன்படுத்திக் கொள்ளப்படும் என அறிவித்துள்ளது.
ஓலா

நிறுவனம் தனது பயண அழைப்பு வர்த்தகம், மாதாந்திர அடிப்படையில் அதிக ஜிஎம்வி மதிப்பை அளிப்பதாகவும், ஓலா எலெக்ட்ரிக் இந்தியாவின் மிகப்பெரிய மின்வாகன நிறுவனமாக உருவாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

எலெக்ட்ரிக் கார்கள், செல் உற்பத்தி, நிதிச்சேவைகள் போன்ற புதிய பகுதிகளில் முதலீட்டை அதிகரிக்க இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து சேவைகள், மின்வாகன பிரிவில் கவனம் செலுத்தும் பின்னணியில் இது அமைந்துள்ளது.

இந்த நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் ரூ.500 கோடி வருவாயை கடந்த ஓலா எலெட்ரிக், இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு பில்லியன் ரூபாய் மதிப்பை அடைய இருப்பதாகவும், இரண்டாவது மின்ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம், நிறுவனம், இந்தியாவின் முதல் நியோவங்கியான அவைல் பைனான்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தும் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. போக்குவரத்து சார்ந்த நிதிச்சேவைகளை உருவாக்கும் இலக்கின் கீழ் இந்த கையகப்படுத்தலை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில்: பலக் அகர்வால் | தமிழில்: சைபர் சிம்மன்