ஐபிஓ வெளியிட்டிற்கு தயார் - பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக மாறிய ஓலா!
எலெக்ட்ரிக் ஸ்ட்டர் மற்றும் பேட்டரி தயாரிப்பாளரான பவிஷ் அகர்வால் தலைமையிலான ஓலா எலக்ட்ரிக், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பொது நிறுவனமாக மாறவுள்ளது..
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் பேட்டரி தயாரிப்பு நிறுவனமான ஓலா எலக்ட்ரிக், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பொது நிறுவனமாக மாறவுள்ளது.
ஓலாவின் மின்சார வாகன உற்பத்திப் பிரிவான ஓலா எலெக்ட்ரிக், ஐபிஓ வெளியிட்டிற்கு முன்னதாக தனியார் நிறுவனத்தில் இருந்து பொது நிறுவன பட்டியலுக்கு மாற்றியுள்ளது. ஏற்கனவே ஒழுங்குமுறை தாக்கல்களின் படி, 2017ம் ஆண்டு நிறுவனம் அதன் பெயரை ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் என்பதிலிருந்து ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் என மாற்றியுள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பொதுப் பட்டியலைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களில் கிட்டத்தட்ட 35% சந்தைப் பங்கை ஓலா நிறுவனம் வைத்துள்ளது. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரியில் மிகப்பெரிய இரு சக்கர வாகனத் தொழிற்சாலையை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
ஓலா எலக்ட்ரிக் தனது 5 GWh திறன் கொண்ட லித்தியம் செல் உற்பத்தி ஆலையை இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கியுள்ளது.
அக்டோபரில் டெமாஸ்கண்ட் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான சமபங்கு மற்றும் கடன் சுற்று நிதியில் நிறுவனம் ரூ.3,200 கோடியை திரட்டியது. இதனை ஜிகா ஃபாக்டரின் விரிவாக்கத்திற்கு செலவிட திட்டமிட்டு வருவதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பவிஷ் அகர்வால் தெரிவித்திருந்தார். இந்த ஜிகா பேட்டரியானது 4 சக்கர வாகனம் மற்றும் அதற்கான உதிரி பாகங்களை ஒரே இடத்தில் உற்பத்தி செய்யும் விதமாக அமைக்கப்படவுள்ளது.

செப்டம்பர் 2023 நிலவரப்படி, $5.4 பில்லியனாக மதிப்பிடப்பட்ட
நிறுவனம், FY22ல் ரூ.784.15 கோடி இழப்பை அறிவித்தது, அதன் ஒருங்கிணைந்த வருமானம் ஆண்டுக்கு ஆண்டு 4.2 சதவீதம் அதிகரித்து ரூ.456.26 கோடியாக இருந்தது. 2022 நிதியாண்டில் கிட்டத்தட்ட 1.5 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டதன் மூலம் வருவாய் உயர இ-ஸ்கூட்டர்கள் உதவின.சந்தை ஆராய்ச்சி மற்றும் தரவு தளமான Tracxn இன் படி, ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 36.6% பங்குகளுடன் அகர்வால் பெரும்பான்மை பங்குதாரராக உள்ளார், அதைத் தொடர்ந்து SoftBank 23.6 சதவீத பங்குகளையும், டைகர் குளோபல் 6.29 சதவீத பங்குகளையும் கொண்டுள்ளது.