‘200 பேர் பணி நீக்கம்’ - ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஓலா நிறுவனம்!

By YS TEAM TAMIL
January 14, 2023, Updated on : Sat Jan 14 2023 04:31:32 GMT+0000
‘200 பேர் பணி நீக்கம்’ - ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஓலா நிறுவனம்!
2023ம் ஆண்டு தொடங்கி சில நாட்கள் மட்டுமே ஆன நிலையில், ஓலா நிறுவனம் 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

ஓலா நிறுவனம் 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


2022ம் ஆண்டின் இறுதிக்கட்டத்தில் திடீரென ஏற்பட்ட பண வீக்கமும், அமெரிக்க பங்குச்சந்தையில் ஏற்பட்ட தடுமாற்றம் காரணமாக இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கடும் சரிவுகளை சந்தித்தன. இதனால் இந்தியாவைச் சேர்ந்த நிறைய நிறுவனங்கள் புதிய முதலீடுகளைப் பெற முடியாத நிலை உருவாகிதால் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் துவங்கின.


அதேபோல், அமேசான், மெட்டா, ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான பணியாளர்களை பணி நீக்கம் செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

OLA

தற்போது 2023ம் ஆண்டின் தொடக்கத்தில் ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக ஓலா நிறுவனம் தனது ஓலா கேப், ஓலா எலெக்ட்ரிக், ஓலா பைனான்சியல் சர்வீஸ் ஆகிய நிறுவனங்களில் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புக் குழுக்களில் பணியாற்றி வந்த 200 பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுகுறித்து ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,

"செயல்திறனை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து மறுசீரமைப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும், தற்போது தேவையற்ற பணிகளும் உள்ளன. எங்கள் முக்கிய முன்னுரிமைப் பகுதிகளில் பொறியியல் மற்றும் வடிவமைப்பில் அனுபவமிக்க, தேர்ந்த பணியாளர்கள் புதிதாக பணியமர்த்தப்படுவார்கள்,” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வார தொடக்கத்தில், ஓலா சமீபத்தில் வாங்கிய Avail Finance செயலியை மூடிவிட்டு OlaMoney உடன் ஒருங்கிணைத்து வருவதாக அறிவித்திருந்தது. சமீபத்திய காலங்களில், நிறுவனம் தொடர்ச்சியான விரிவாக்கத் திட்டங்களை அறிவித்து வருகிறது.


கடந்த வியாழக்கிழமை ஓலாவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில்

"டிசம்பர் 2022ம் ஆண்டு கணக்கின் படி, எங்களிடம் 100 அனுபவ மையங்கள் உள்ளன. மேலும், 100 மையங்களை ஜனவரி 26 ஆம் தேதிக்குள் இந்தியா முழுவதும் திறக்க உள்ளோம்,” என பதிவிட்டிருந்தார்.

இந்த மாத தொடக்கத்தில், வரும் வாரங்களில் 10,000 எலெக்ட்ரிக் கார்களைக் கொண்டு ஓலா கேப் நிறுவனத்தில் எலெக்ட்ரிக் கேப் சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக நிறுவனம் அறிவித்திருந்தது.


அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களைக் கொண்டு, சவாரிக்கு 100 சதவீத உத்தரவாதம், ரொக்கமில்லா பரிவர்த்தனை ஆகியவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.