ஹோட்டலில் வருவாய் இல்லை, கண்ணீர் விட்ட முதியவர்– குவிந்த வாடிக்கையாளர்கள்!

By YS TEAM TAMIL|10th Oct 2020
டெல்லியில் ‘பாபா கா தாபா’ என்கிற உணவகத்தை நடத்தி வரும் 80 வயது காந்தா பிரசாத் வருவாய் இல்லை என கண்ணீர் விடும் வீடியோ இணையத்தில் வைரலாகி பலர் உதவி வருகின்றனர்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

கொரோனா வைரஸ் சிறு வணிகங்கள் முதல் மிகப்பெரியளவில் செயல்படும் நிறுவனங்களின் செயல்பாடுகள் வரை முடக்கியுள்ளது. இயற்கை சீற்றம் கடும் சேதத்தை ஏற்படுத்துவது போன்றே இந்த பெருந்தொற்று மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுள்ளது.


ஒப்பீட்டளவில் இந்த பெருந்தொற்று இயற்கை சீற்றத்தைக் காட்டிலும் கொடியது எனலாம். இதன் தாக்கமும் பாதிப்புகளும் நாட்கள், வாரங்கள், மாதங்கள் என நீண்டுகொண்டே போகிறது.


பலரும் பல வகையில் இந்தச் சூழலை சமாளிக்கப் போராடி வரும் நிலையில் டெல்லியில் சிறு தாபா ஒன்றை நடத்தி வரும் வயதான தம்பதி வருவாயில்லாமல் தவிப்பதை அழுகையுடன் வெளிப்படுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.

1

டெல்லியில் காந்தா பிரசாத் என்கிற 80 வயது முதியவர் மால்வியா நகரில் தனது மனைவியுடன் 'பாபா கா தாபா’ என்கிற பெயரில் சிறு உணவகத்தை நடத்தி வருகிறார். தம்பதி இருவரும் கடின உழைப்பாளிகள். சுவையான உணவு வகைகளைத் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர். ஒரு பிளேட் 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்து வந்தனர். இந்த வருவாயைக் கொண்டே இவர்கள் காலம் தள்ளி வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்றால் சாப்பிட வாடிக்கையாளர்கள் வராமல் வருமானம் இன்றி தவித்துள்ளனர். இவரது நிலையை அழுகையுடன் விவரிக்கும் வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

விளையாட்டு வீரர் ஆர் அஸ்வினும் இந்த வீடியோவைப் பகிர்ந்து நாம் உதவ முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அந்த வீடியோவில் காந்தா பிரசாத் வாடிக்கையாளர்கள் வராததால் வருவாய் இல்லை என்று கூறி 10 ரூபாய் மட்டுமே சம்பாதித்துள்ளதாகக் கூறி கண்ணீர் விடுகிறார்.

யூட்யூப், ட்விட்டர் என இவர்களது புகைப்படங்களும் வீடியோவும் வைரலானது. பலர் இவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் இங்கு சென்று உணவருந்தத் தொடங்கியுள்ளனர். மெல்ல கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.


காந்தா பிரசாத் சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்டு உதவ முன்வந்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறார். இந்தத் தகவலை அறிந்த ஜொமேட்டோ நிறுவனம் முதியவர்களை தங்களுடன் இணைத்துக்கொண்டுள்ளது.


இணையத்தின் சக்தியை விவரிக்கும் மற்றொரு சம்பவம் இது. சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வகாக பயன்படுத்தமுடியும் என்பதை இது போன்ற எத்தனையோ சம்பவங்கள் தொடர்ந்து உணர்த்தி வருகின்றன.

Get access to select LIVE keynotes and exhibits at TechSparks 2020. In the 11th edition of TechSparks, we bring you best from the startup world to help you scale & succeed. Join now! #TechSparksFromHome

Latest

Updates from around the world