Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ஒரே பை மற்றவைக்கு ’பை பை’

ஒரே கைப்பையில் லேப்டாப், சாவி, போன், க்ரெடிட் கார்ட், தண்ணீர் பாட்டில், அழகுப் பொருட்கள், கண்ணாடி, அத்துடன் ஒரு ரகசிய அறை கொண்ட ஆல் இன் ஆல் ஹேண்ட்பேக் தயாரிக்கும் நிறுவனம் தொடங்கியுள்ள டிஜிட்டல் மார்க்கெட்டர்.

ஒரே பை மற்றவைக்கு ’பை பை’

Thursday February 06, 2020 , 5 min Read

தொழில்முனைவதற்கு முன்பு யஷாஸ் அலூர், பெங்களூருவை மையமாகக் கொண்ட டென்ட்ஸூ வெப்சட்னீ என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். மேலும் புதிதாக சேர்ந்த ஒரு பெண் பணியாளருக்கு நிறுவனம் ஒரு மடிக்கணினியும் அதை எடுத்து செல்வதற்கான பையும் கொடுத்ததைக் கவனித்துள்ளார்.


அடுத்த நாள் அந்த பணியாளர், கையில் ஒரு கைப்பை, முதுகில் மடிக்கணினிக்கான பை மற்றும் மதிய உணவு பை என மூன்று பைகளை சுமந்து வருவதையும் பார்த்துள்ளார்.

"அவ்வாறு மூன்று பைகளை சுமந்து வருவது அவரது உடைக்கு ஏற்றவாறு இல்லை," என்று தான் கருதியதாக கூறுகிறார் அலூர்.

அந்த பணியாளர் மட்டுமன்றி அலுவலகத்தில் மற்ற பெண்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட பைகளை தினமும் சுமந்து வருவதை அறிந்தார். அப்பொழுதான் அந்த யோசனை அவரது மனதில் உதித்தது.


அனைத்திற்கும் ஒரே பை. மற்றவைக்கு பை பை !! 


மடிக்கணினி, தொலைபேசி, தண்ணீர் பாட்டில், சாவி, சார்ஜர், பணப்பை என அனைத்திற்கும் ஏற்றவாறு ஒரு கைப்பை அமைந்தால் எவ்வாறு இருக்கும்? அனைத்தையும் ஒரே பையில் அடக்க முடிந்தால், மற்ற பைகளுக்கு வேலை இல்லையே.

"இந்த யோசனை தோன்றியவுடன், பை தைப்பதற்கான துணி உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களிடம் பேசத் துவங்கினேன். இந்த யோசனை சாத்தியமா என்று ஆராயத் துவங்கினேன். ஒரு பக்கம் இந்த வேலைகள் நடந்தாலும், மறுபக்கம் எனது முழுநேர வேலையை விடவில்லை," என்கிறார் யஷாஸ்.

இவ்வாறு யோசனை வந்தவுடன் களத்தில் இறங்க மற்றொரு காரணம், இதற்கு முன்பே தொழில்முனையும் வேட்கையில், ’பட்டன்ஸ் அன் திரெட்ஸ்’ என்ற நிறுவனத்தை வேறு ஒரு பங்குதாரரோடு இணைந்து யஷாஸ் துவங்கியுள்ளார். அதன் பின்பு தான் டென்ட்ஸூ வெப்சட்னீயில் இணைந்துள்ளார்.

yashas
"முன்பு நான் துவங்கிய பட்டன்ஸ் அன் திரெட்ஸ், எனக்கு துணி விற்பனையாளர்கள் மற்றும் ஆன்லைன் விற்பனையில் அறிமுகம் தந்தது. பின்னர் பணியாற்றிய டென்ட்ஸூ வெப்சட்னீ, எனக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் அனுபவம் தந்தது," என்கிறார் யஷாஸ்.

வீகன் தோலை சைனாவில் இருந்து இறக்குமதி செய்யும் விற்பனையாளர் ஒருவரிடம் பேசியபிறகு, யஷாஸ் இரண்டு வடிவங்களில் பெண்களுக்கான கைப்பைகள் தயாரிக்க முடிவு செய்தார். 13" மற்றும் 15".  


இந்த இரண்டு அளவுகளில் 90%  மடிக்கணினிகள் அடங்கிவிடும். மேலும் அந்த கைப்பைகள் பார்க்க பகட்டாக இருப்பது போல நாங்கள் வடிவமைத்தோம்," என்கிறார் அவர்.  

எதிர்பாராத இடத்தில்  இருந்து அலூருக்கு நிதி உதவி கிடைத்தது. அவர் வேலை செய்த டென்ட்ஸூ வெப்சட்னியின் முதலாளி அவருக்கு 8 லட்சம் முதலீடாக கொடுத்துள்ளார் (இன்று வரை அவர் முதலீட்டாளராகவே உள்ளார்). முதலீட்டில் பெரும் பங்கு, தேவையானப் பொருட்கள் வாங்குவதில் செலவாகியுள்ளது. மற்றவை நிறுவனதிற்கு விளம்பரம் செய்ய செலவு செய்துள்ளார் யஷாஸ்.  

நவம்பர் 2017ல் தனது வேலையை விடுத்து, ஜனவரி 2018ல் ’எவர்ப்ரெட்'Everpret' என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளார். நிறுவனத்தின் வலைத்தளம் மூலம், அவரது டிசைனர் கைப்பைகளை மெட்ரோ நகரங்களில் உள்ள பெண்களுக்கு விற்கத்துவங்கியுள்ளார். 

பொருள் தயாரிப்பு யுத்தி

யஷாஸ் தனது கைப்பைகளுக்கு "எவர்ப்ரெட் வர்க் டாட்ஸ்" என்று பெயரிட்டார். அதில் வேலை செல்லும் சமயம் தேவைப்படும் அனைத்தையும் வைப்பதற்கான இடம் இருக்கிறது. 


ஒவ்வொரு கைப்பையிலும் மடிக்கணினி வைப்பதற்கான தனி இடம், நோட்டுகள் வைக்க ஒரு இடம், சாவிகளை மாட்ட ஒரு கொத்து, அலைபேசி, கடன் அட்டைகள் வைக்க ஒரு இடம், தண்ணீர் பாட்டில் வைக்க கழற்றி மாட்டும் வகையில் ஒரு பிடிப்பான்,  அழகு சாதனப் பொருட்கள் வைக்க ஒரு இடம், கண் கண்ணாடிகள் வைக்க ஒரு இடம், மேலும் மற்ற தொழில்நுட்பச் சாதனங்கள் வைக்க ஒரு இடம், இவை மட்டுமின்றி ரகசிய அறை ஒன்றும் கைப்பையில் உள்ளது. 

"ஒவ்வொரு டோட்டும் உயர்தர பாக்ஸ் தோல் (மிருகத்தோல் போன்ற ஒரு பொருள்), நீடித்து உழைக்கும் நைலான் தையல் மற்றும் தங்க முலாம் பூசியது போன்ற வடிவம் கொண்ட பொருட்கள் கொண்டு தயாராகின்றன," என்கிறார் யஷாஸ் .

தனது பொருளுக்கான விலையை மூன்று காரணிகள் கொண்டு முடிவு செய்துள்ளார் யஷாஸ். கைப்பைகளை தயாரிக்க ஆகும் செலவு, போட்டியாளர்கள் விற்கும் விலை, வாடிக்கையாளர்கள் செலவிடும் தன்மை.


யஷாஸ் எவர்ப்ரெட்டை அனைவருக்கும் உகந்த விலையில் அதே சமயம் உயர்ந்த தரத்தில் விற்பனை செய்ய நினைத்தார். 

"பொதுவாக வீகன் அல்லது ஃபாக்ஸ் தோலினால் செய்த கைப்பைகள் மற்ற விற்பனையாளர்களால் ரூபாய் 2200 விற்கப்படுகிறது. ஆனால் எங்கள் தரம் மற்றும் கைப்பையில் உள்ள மற்ற வசதிகளை மனதில் வைத்து, ரூபாய் 4,200க்கு விற்பனை செய்கிறோம்," என்கிறார் யஷாஸ். 

ரூபாய் 4,200 என்ற விலை அதிகமாக தோன்றலாம், ஆனால் விலையை நிர்ணயம் செய்யும் முன்பு கள ஆய்வு செய்துள்ளார் யஷாஸ். வேலையில் சேர்ந்துள்ள அல்லது வளர்ந்த நிலையில் இருந்த 250 பெண்களிடம் கேள்விகள் கேட்டு பதில் பெற்றுள்ளார்.


எங்கள் வாடிக்கையாளர்கள் 24 முதல் 36 வயது வரை உள்ள பெண்கள் தான்.  அப்படியானவர்கள் அவர்கள் வேலையின் துவக்கக் காலத்தில் 30,000 ரூபாய் சம்பளமாக பெறுவார்கள் என்று தீர்மானித்தோம். எவர்ப்ரெட் துவங்கும் முன்னரே, களஆய்வு செய்து  அந்த வயது வரம்பில் உள்ள பெண்கள் 4,200 செலவு செய்யத் தயாராக உள்ளதை கண்டறிந்தோம். காரணம் இது அவர்களுக்கு தரமானப் பொருளுக்கான ஒரு முறை முதலீடாகும்," என விளக்குகிறார் யஷாஸ்.

கடினமான கட்டங்கள்

எவர்ப்ரெட் துவங்கிய நாட்களில் யஷாசுக்கு உதவ ஆள் இல்லை. அவரது பெற்றோர்  பொருட்களைக் குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப உதவி செய்துள்ளனர். 

"எனது குடும்பத்தில் வேறு எவரும் தொழில்முனைந்த அனுபவம் கொண்டிருக்கவில்லை. நான் தான் முதல் ஆள் என்றாலும், எனது பெற்றோர் எனக்கு உறுதுணையாக நின்றனர். எனது யோசனைக்கு உதவிகள் செய்தனர்," என்கிறார் அவர்.

எவர்ப்ரெட் விற்பனை அதிகரித்தவுடன், சந்தை தேவைகளைப் பூர்த்தி செய்வதில் யஷாசுக்கு சிக்கல் வந்தது. இவருக்கு மூலப்பொருட்கள் விற்பனை செய்து வந்த டெல்லி விற்பனையாளரால், எவர்ப்ரெட்க்கு தேவை பட்ட தரத்தில் மூலப்பொருட்களை தர இயலவில்லை. 


"கைப்பை தைக்கும் துணியின் தரம் குறைவாக இருந்ததில் சிக்கல் எழுந்தது, மேலும் டெல்லி விற்பனையாளர் இறக்குமதி செய்த தோலின் விலை அதிகமாக இருந்தது. மேலும் தேவைக்கு ஏற்ப பொருட்களும் இல்லை. முதல் வருட தேவையில் வெறும் பாதி அளவு மட்டுமே எங்களால் ஈடுகட்ட முடிந்தது" என்கிறார் யஷாஸ்.

சில கைப்பைகளின் தரம் குறைவாக இருந்துள்ளது. இதனால் உற்பத்தியாளருக்கு பணம் கொடுத்திருந்தாலும், அந்த பைகளை இவர்களால் விற்க முடியவில்லை.  இதன் காரணமாக மேலும் பணம் முதலீடு செய்து புதிய பைகளை வாங்க நேர்ந்துள்ளது. நேரத்தில் பொருளைக் கொடுப்பதிலும் சிக்கல் எழுந்துள்ளது. இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து வணிகத்தில் பணச்சிக்கலை உருவாக்கியது," என்றார்.

இந்த நிலையை கடக்க என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று யஷாஸ் யோசித்துள்ளார். அப்பொழுது பொருட்கள் வாங்கும் வழியை ஆராய்ந்து அதில் மாற்றங்கள் செய்தால் பணம் மிச்சம் ஆகும் என்று கண்டறிந்துள்ளார். இதனால் நேரடியாக சைனாவில் உள்ள உற்பத்தியாளரோடு பணியாற்ற முடிவு செய்து சைனா சென்றுள்ளார். 

An Everpret designer handbag

அங்கு சென்று அவர்களை சந்தித்து, அவர்கள் எவர்ப்ரெட்க்கு கைப்பைகள் தயாரிக்க முடியுமா என்று பேசி, இறுதியில் ஒப்பந்தம் ஒன்றையும் கையெழுத்திட்டு முடிவு செய்துள்ளார்.


தற்போது 30 பேர் கொண்ட குழு யஷாஸ் வடிவமைத்துள்ள கைப்பைகளை தயாரிக்க நேரடியாக இந்திய மக்களுக்கு யஷாஸ் அவற்றை விற்கிறார். 


நேரடியாக வாடிக்கையாளருக்கு விற்பனை செய்வதால் இடைத்தரகர்களை எவர்ப்ரெட் நம்புவதில்லை. தற்பொழுது வலைத்தளம் மூலமே பொருட்களை விற்பனை செய்துவரும் எவர்ப்ரெட் முழுதாக டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை தனது விற்பனை மற்றும் வளர்ச்சிக்கு நம்புகிறது.  ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் கூகிள் மூலம் தனது வலைத்தளத்திற்கு வரவுகள் கொண்டு வந்து விற்பனையை நிகழ்த்துகிறது.

"வாடிக்கையாளருக்கு நேரடியாக விற்பது என்பது விற்பனையின் துவக்க நிலைதான். மேலும் சில விற்பனை யுத்திகளை ஆராய்ந்து வருகிறோம். கடைகளில் விற்பனையை 2020ல் நோக்கமாகக் கொண்டுள்ளோம்."

ஆர்டர் கொடுத்த 2 அல்லது 4 நாட்களில் கைப்பை உங்கள் கைகளில் இருக்கும் என்கிறார் யஷாஸ். பொருளைக் கொண்டு சேர்க்கும் பணியை பெட்எக்ஸ், டெல்ஹிவரி மற்றும் சிலரிடம் ஒப்படைத்துள்ளது எவர்ப்ரெட்.


சென்ற வருடம் 3.5 கோடி மதிப்புள்ள வணிகம் நிகழ்ந்துள்ளது. அதிகபட்ச விற்பனை சென்னை மும்பை டெல்லி பெங்களூரு ஆகிய நகரங்களில் நடக்கிறது. மேலும் அந்த நகரங்களில் சிறிய விற்பனை நிலையங்கள் மூலம் மேலும் விற்பனையை அதிகரிக்க திட்டம் உள்ளதாகவும், அதன் மூலம் எவர்ப்ரெட் மேலும் விளம்பரம் கொடுக்கும் யோசனையும் உள்ளது என்கிறார் யஷாஸ். 


தற்பொழுது எவர்ப்ரெட் அதன் ஆரம்பநிலையில் உள்ளது. மற்ற போட்டியாளர்கள் இதன் விற்பனை மற்றும் தயாரிப்பு உத்தியை கவனிக்க சிறிது காலம் எடுக்கும் என்கிறார்.  கைப்பைகள் மட்டுமல்லாது காலணிகள், பாக்பேக்ஸ், ஸ்லிங் பைகள் ஆகியவற்றிலும் கவனம் செலுத்த உள்ளதாக கூறுகிறார் அவர். 


வலைதள முகவரி: Everpret


தமிழில்: கெளதம் தவமணி