#covid19 #master #Bitcoin: 2021ல் ட்ரென்ட் ஆகி அதிக ரீடிவீட், லைக்குகளை அள்ளிய கோல்டன் டிவீட்டுகள் இதோ!
2021ம் ஆண்டில் இந்திய அளவில் அதிகம் பகிரப்பட்ட மற்றும் லைக்குகளைப் பெற்ற டிவீட்டுகளை 2021ம் ஆண்டின் கோல்டன் டிவீட்ஸ் என வரிசைப் படுத்தியுள்ளது டிவிட்டர்.
ரீடிவீட் செய்யப்பட்ட எண்ணிக்கை மற்றும் பெற்ற லைக்குகளின் அடிப்படையில் 2021ம் ஆண்டின் ’Golden Tweets of 2021' (கோல்டன் டிவீட்டுகளை) வரிசைப் படுத்தப்படுத்தியுள்ளது டிவிட்டர். இவை 2021ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து நவம்பர் மாதம் 15ம் தேதி வரை பகிரப்பட்டவை மற்றும் பதியப்பட்டவை மட்டுமே.
2021ம் ஆண்டின் அதிகம் ரீடிவீட் செய்யப்பட்ட டிவீட்:
அதன்படி, அதிகம் ரீடிவீட் செய்யப்பட்ட டிவீட் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் பதிவு செய்தது ஆகும். இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக இருந்தபோது, உலகம் முழுவதும் இருந்து உதவிக்கரங்கள் நீண்டன. அப்போது, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ், பிரதமர் நிவாரண நிதிக்கு நிதி கொடுத்தார்.
அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு இருந்தார். அதில்,
“இந்தியாவில் இருக்கும் சூழ்நிலையை மனதில் கொண்டு என்னால் முடிந்த பங்களிப்பை பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளேன். இந்த நிதியை இந்திய மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் ஆக்ஸிஜனை வாங்கிக் கொள்ளுங்கள்.”
என்னுடன் ஐபிஎல் தொடரில் விளையாடும் சக வீரர்கள் மற்றும் இந்தியாவின் மனபான்மையை கண்டறிந்த உலக மக்களும் தங்களால் முடிந்த உதவியை செய்யலாம். என்னால் முடிந்தது 50000 அமெரிக்க டாலர். (இந்திய மதிப்பில் 37,36,590 ரூபாய்). இது ஒரு தொடக்கம் தான்.
நமது உணர்ச்சிகளுக்கு உயிர் கொடுத்து மக்களின் வாழ்வில் ஒளி சேர்ப்போம். எனது பங்களிப்பு பெரிய திட்டங்களை செயல்படுத்த எந்த அளவிற்கு உதவும் எனத் தெரியவில்லை. இருந்தாலும் சிலரது வாழ்வில் ஒரு சின்ன மாற்றமாக இது இருக்கும் என நம்புகிறேன், என அவர் தெரிவித்திருந்தார்.
மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த டிவீட்டானது, அதிகம் பேரால் டிவீட் செய்யப்பட்டது. இந்தாண்டு அதிகம் மற்றவர்களால் மேற்கோள் காட்டப்பட்ட டிவீட்டும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
2. அதிக லைக்குகளைப் பெற்ற டிவீட்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோலி, நடிகை அனுஷ்கா தம்பதிக்கு இந்தாண்டு ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. அதனை டிவிட்டர் வாயிலாக தனது ரசிகர்களுக்கு அவர் தெரியப் படுத்தினார். இந்தப் பதிவுக்கு விராட் கோலி மற்றும் அனுஷ்காவின் ரசிகர்கள் லைக் மழை பொழிந்து விட்டனர்.
இதனால் இந்தாண்டு அதிக லைக்குகளைப் பெற்ற டிவீட்டாக கௌரவம் பெற்றுள்ளது விராட்டின் அந்தப் பதிவு. 5,39,500 லைக்குகளை இந்தப் பதிவு பெற்றுள்ளது.
கடந்தாண்டு விராட் தனது மனைவி அனுஷ்கா கர்ப்பமாக இருப்பதை டிவிட்டர் வாயிலாக ரசிகர்களுக்கு அறிவித்தார். அந்த டிவீட் கடந்தாண்டின் அதிகம் லைக்குகளைப் பெற்ற டிவீட்டாக கொண்டாடப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.
3. அதிகம் டிவீட் செய்யப்பட்ட அரசின் டிவீட்:
கொரோனா தடுப்பூசியின் முக்கியத்தை மக்களுக்கு எடுத்துக் கூறி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி, தான் கொரோனா முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டார்.
கூடவே மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களின் பணியைப் பாராட்டியும், கொரோனா இல்லாத இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்று சேர்வோம் எனவும் அந்தப் பதிவில் பிரதமர் கூறியிருந்தார். இந்தப் பதிவு 2,25,800 லைக்குகளைப் பெற்றது.
அடுத்ததாக, பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்ற போது, அதனைப் பாராட்டி பிரதமர் மோடி வெளியிட்ட டிவீட் ஆகும். 2,97,900 லைக்குகளை இந்தப் பதிவு பெற்றது.
தொழில்துறை சார்ந்த டாப் டிவீட்டுகள்
அதிகம் ரீடிவீட் செய்யப்பட்ட டிவீட்:
இந்தாண்டு அக்டோபரில் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் குழுமம் கைப்பற்றியதைத் தொடர்ந்து, டாடா சன்ஸ் குழுமத் தலைவர் ரத்தன் டாடா, அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜேஆர்டி டாடாவின் பழைய புகைப்படத்தை பகிர்ந்து தனது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த டிவீட் அதிகம் ரீடிவீட் செய்யப்பட்டது. இந்த வருடத்தில் தொழில் துறையில் அதிகம் லைக்குகளைப் பெற்றதும் இந்த டிவீட் தான். 40,400 லைக்குகளை இந்த டிவீட் பெற்றது.
பொழுதுபோக்கு சார்ந்த டாப் டிவீட்டுகள்:
நடிகர் விஜய்யின் ’பீஸ்ட்’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், இந்தாண்டு பொழுதுபோக்கு என்ற பிரிவில் அதிக முறை டிவீட் செய்யப்பட்ட டிவீட் ஆகும். 3,43,800 லைக்குகளைப் பெற்று, இந்தாண்டு பொழுதுபோக்கு சம்பந்தமான டிவீட்டுகளில் அதிக லைக்குகளைப் பெற்ற டிவீட் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
விளையாட்டு சார்ந்த டாப் டிவீட்டுகள்:
ஐபிஎல்-ல் சென்னை அணியின் தலைவரான தோனியின் ஆட்டத்தைப் பாராட்டி, இந்திய அணியின் தலைவரான விராட் கோலி வெளியிட்ட டிவீட் தான் இந்தாண்டின் அதிகம் ரீடிவீட் செய்யப்பட்ட விளையாட்டு சம்பந்தமான டிவீட் ஆகும்.
"அரசன் திரும்ப வந்துவிட்டார். ஆட்டத்தில் மிகச்சிறந்த ஃபினிஷர். இன்று மீண்டும் ஒருமுறை நான் என்னுடைய இருக்கையில் இருந்து துள்ளிக்குதித்தேன் தோனி," என அந்தப் பதிவில் விராட் தெரிவித்திருந்தார்.
இந்தாண்டு அதிக லைக்குகளைப் பெற்ற விளையாட்டுத்துறை சம்பந்தப்பட்ட டிவீட்டும் இது தான். 529800 லைக்குகளை இந்த டிவீட் பெற்றுள்ளது.
அதிகம் பகிரப்பட்ட ஹேஷ்டெக்குகள்:
இந்தாண்டு பதிவுகளில் அதிகம் பகிரப்பட்ட ஹேஷ்டேக்குகளையும் டிவிட்டர் வகைப்படுத்தியுள்ளது. அதன் விபரமாவது:
#Covid19
இந்தாண்டு ஆரம்பத்தில் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கமும் ஆரம்பமாகி விட்டது. எனவே டிவிட்டர் மூலமாக மக்கள் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்தனர், உதவிகளைத் தேடினர், பெற்றுக் கொண்டனர். குறிப்பாக இரண்டாவது அலையில் ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை வந்தபோது, சமயோஜிதமாக செயல்பட்டு டிவிட்டர் வாயிலாக பல்வேறு நல்ல விசயங்கள் நடைபெற்றன. கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு தொடர்பாகவும் பல டிவீட்டுகள் பகிரப்பட்டன. அப்போது #Covid19 என்ற ஹேஷ்டேக் அதிகம் பயன்படுத்தப்பட்டது.
#FarmersProtest
2020ம் ஆண்டில் தொடங்கிய விவசாயிகள் போராட்டம் 2021லும் தொடர்ந்தது. அரசியல்வாதிகள், பிரபலங்கள், நெட்டிசன்கள் மற்றும் போராட்ட களத்தில் இருந்தவர்கள், டிவிட்டரில் தங்களது கருத்துக்களை இந்த ஹேஷ்டேக் மூலம் பகிர்ந்து கொண்டனர்.
#TeamIndia
இந்தியாவைப் பொறுத்தவரை இந்தாண்டு விளையாட்டுக்கு முக்கியத்துவம் பெற்ற ஆண்டாக அமைந்தது. கப்பாவில் இந்திய கிரிக்கெட் அணி வரலாற்று வெற்றி பெற்றது, ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக்கில் இந்திய அணி வீரர்களின் பங்களிப்பு மற்றும் வெற்றி, தோல்விகள் இந்த ஹேஷ்டேக் மூலம் பகிரப்பட்டது.
#Tokyo2020
ஒலிம்பிக்கில் ஏழு மெடல்களையும், பாரா ஒலிம்பிக்கில் 19 மெடல்களையும் இந்தியா பெற்றது. இது தொடர்பான டிவீட்டுகள் #Tokyo2020 எனப் பதிவு செய்யப்பட்டது.
#IPL2021
கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவையும், எதிர்பார்ப்பையும் பெற்ற ஐபிஎல் போட்டியின் போது இந்த ஹேஷ்டேக் அதிகம் பகிரப்பட்டது.
#IndVEng
இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் ஏற்ற இறக்கங்களுடன் இந்திய அணியின் பங்களிப்பை இந்த ஹேஷ்டேக் மூலம் ரசிகர்கள் பகிர்ந்து கொண்டனர்.
#Diwali
இந்தியாவில் அதிக மக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. அப்போது ஷாப்பிங் மற்றும் வாழ்த்துகளுக்காக இந்த ஹேஷ்டேக் அதிகம் பயன்படுத்தப்பட்டது.
#Master
நடிகர் விஜய் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம் மாஸ்டர். 2020லேயே அதிகம் பேசப்பட்ட இந்த படம் 2021ம் ஆண்டு ரிலீசானது. அப்போது விஜய் மீதான தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி பல்வேறு டிவீட்டுகளை ரசிகர்கள் வெளியிட்டனர்.
#Bitcoin
இந்தாண்டு கிரிப்டோகரன்சி மர்றும் டிஜிட்டல் அசட் பற்றி அதிகம் டிவிட்டரில் பேசப்பட்டது. அப்போது இந்த ஹேஷ்டேக் பகிரப்பட்டது.
#PermissionToDance
தென்கொரிய பாய் பேண்ட் பிடிஎஸ் குரூப்பின் பாடலை வரவேற்கும் வகையில் இந்த ஹேஷ்டேக் அதிகம் பகிரப்பட்டது.
இவைதவிர, நாட்டு நடப்புகள் உள்ளிட்ட மற்ற சில பிரிவுகளில் அதிகம் பகிரப்பட்ட ஹேஷ்டேக்குகளையும் டிவிட்டர் பகிர்துள்ளது.
அதன்படி, தற்போதைய நிகழ்வுகளில் (Current Affairs) அதிகம் பகிரப்பட்ட ஹேஷ்டேக்குகள்:
#Covid19
#Afghanistan
#CGL19marks
#IndianArmy
#Uttarakhand
கலாச்சார ரீதியாக அதிகம் பகிரப்பட்ட ஹேஷ்டேக்குகள்:
#Diwali
#EidMubarak
#RepublicDay
#IndependenceDay
#InternationalWomensDay
டிஜிட்டல் சொத்துக்கள் (Digital Assets) பிரிவில் அதிகம் பகிரப்பட்ட ஹேஷ்டெக்குகள்:
#Bitcoin
#BSC
#Crypto
#NFT
#DeFi
2021ல் அதிகம் பகிரப்பட்ட எமோஜிக்கள் இவைதான்:
🙏
😂
🔥
😍
👍
😊
👇
🤣
😎
😭