நாடு முழுதும் பிளாஸ்டிக் நன்கொடை மையங்கள் அமைத்த சிஇஒ!

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான இவர், பிளாஸ்டிக் ஒழிப்பில் தீவிரமாக இருக்கிறார்.

12th Mar 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜீஷன் கான் நாடு முழுவதும் பிளாஸ்டிக் நன்கொடை மையங்களை அமைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். ஜீஷன் ‘பியாண்ட் ஸ்மார்ட் குரூப்பின்' தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.  சுற்றுச்சூழலுக்காக செயலாற்றிய ஜிஷனின் முயற்சிக்காக, அவர் பல முறை கௌரவிக்கப்பட்டுள்ளார்.

1

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் குறித்து உலக அளவில் ஒரு விவாதம் நடைபெற்று வரும் நிலையில், அடி மட்டத்தில் அவர்களின் சிறந்த முயற்சிகள் மூலம் இந்த முறையில் மாற்றங்களைக் கொண்டு வரும் பலர் உள்ளனர். அவர்களில் ஒருவர் ஜீஷன் கான்.


பல நகரங்களில் பிளாஸ்டிக் நன்கொடை மையங்களை அமைத்து வருகிறார் இவர். இந்த நன்கொடை மையங்களின் கீழ் பிளாஸ்டிக் கழிவுகளை கையாள்வதன் மூலம் மற்ற சமூக பணிகளில் மக்கள் பங்கேற்பதும் அதிகரித்து வருகிறது.


ஜீஷன்; பிளாஸ்டிக்கை பொடியாக்கும் ஒரு இயந்திரத்தை 2012ல் அமைத்தார், அது நன்றாக வேலை செய்தது. இந்த இயந்திரம் மூலம் சுமார் 20 ஆயிரம் கிலோ பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்பட்டது. ஜீஷன் இப்போது மற்ற நகரங்களில் பிளாஸ்டிக் நன்கொடை மையங்களை அமைத்து வருகிறார்.


கடந்த ஆண்டு 150வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஜீஷன் முதல் பிளாஸ்டிக் நன்கொடை மையத்தை நிறுவினார். இதைப் பற்றி அவர் கூறுவது,

“ஒரு பிளாஸ்டிக் நன்கொடை மையத்தை அமைப்பது என்பது தனித்துவமான யோசனை. நீங்கள் கோவில்களுக்குச் சென்று நன்கொடை அளித்து அந்த பணம் சமூகப் பணிக்காக பயன்படுத்தப்படுவது போல நாங்கள் பிளாஸ்டிக்கை நன்கொடையாக எடுத்துக் கொண்டு இந்த சமூகத்தில் சேவை செய்ய விரும்புகிறோம். இதேபோல், நாங்கள் பிளாஸ்டிக் தானம் செய்யுமாறு மக்களிடமும் கேட்டுக்கொள்கிறோம்."
2

பிளாஸ்டிக் நன்கொடை மையத்தில் நன்கொடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்பட்டு விற்கப்படுகிறது, இதற்காக ஜீஷன் சமூகப் பணிகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தை செலவிடுகிறார். போபால் நகராட்சியுடன் இணைந்து போபால் நகரில் ஜீஷன் 'வேஸ்ட் டு ஆர்ட்' என்பதை நிறுவினார். இதன் மூலம் ஜீஷன் 500 கிலோ பிளாஸ்டிக் சேகரித்துள்ளார்.

3

மத்தியப் பிரதேச அரசு விருது வழங்கியதோடு, போபாலின் துப்புரவுத் தூதராகவும் ஜீஷன் அறிவிக்கப்பட்டார். ஜீஷனின் முயற்சிக்காக அவருக்கு ஐக்கிய நாடுகள் சபை இந்திய தலைமைத்துவ விருதை வழங்கியுள்ளது. இந்த விருதை ஐக்கிய நாடுகள் சபையின் தூதரும் பாலிவுட் நடிகையுமான தியா மிர்சா கையால் ஜீஷன் பெற்றார். ஜீஷனுக்கு மத்திய சுற்றுச்சூழல் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் 'சுற்றுச்சூழல் நட்பு விருதும்' அளித்துள்ளார். 

“எங்களுக்கு கிடைத்துள்ள இந்த விருதுகள் மூலம் நாங்கள் அடிமட்டத்தில் வேலை செய்கிறோம் என்று நம்புகிறோம்,” என்கிறார் ஜீஷன்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அவருடன் இணைப்பதன் மூலமும், பிளக்கிங் மற்றும் கிளீனப் திட்டங்களை ஏற்பாடு செய்வதன் மூலமும் ஜீஷன் அவ்வப்போது பெரிய திட்டங்களை ஏற்பாடு செய்கிறார்.  ஸ்வச் பாரத் திட்டத்தில் இந்தோர் முதலிடத்தை பிடிப்பதற்கு ஜிஷனின் முயற்சி பெரிதும் உதவியது.

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding and Startup Course. Learn from India's top investors and entrepreneurs. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close