Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

டாடா குழுமத்தின் மிகப்பெரிய தனிப்பட்ட பங்குதாரர் ‘பல்லோன்ஜி மிஸ்திரி’ மறைவு!

ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் தலைவர் பல்லோன்ஜி மிஸ்திரி இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 93. மிஸ்திரியின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்ததாக அவரது நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டாடா குழுமத்தின் மிகப்பெரிய தனிப்பட்ட பங்குதாரர் ‘பல்லோன்ஜி மிஸ்திரி’ மறைவு!

Tuesday June 28, 2022 , 3 min Read

ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் தலைவர் பல்லோன்ஜி மிஸ்திரி இன்று காலமானார். அவருக்கு வயது 93. மிஸ்திரியின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்ததாக அவரது நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யார் இந்த பல்லோன்ஜி மிஸ்திரி?

டாடா குழும வட்டத்தில் 'பாண்டம் ஆஃப் தி பாம்பே ஹவுஸ்' (Phantom of the Bombay house) என்று அழைக்கப்படும் மிஸ்திரி, இந்தியத் தொழில்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2016ல் பத்ம பூஷன் விருது பெற்றார்.

தனது தனிப்பட்ட பங்குகள் மூலமாக டாடா சாம்ராஜ்யத்தில் அதிகாரம் மிக்கவராக வலம் வந்தவர் பல்லோன்ஜி. இவர் டாடா சன்ஸ் நிறுவனத்தில் 18.4 சதவீத பங்குகளுடன் மிகப்பெரிய தனிநபர் பங்குதாரராக இருந்து வந்தார். இவர் இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவராக இருந்தவர்.

mish

மிஸ்திரியின் பங்களிப்பு:

ஷபூர்ஜி பல்லோன்ஜியின் கட்டுமான நிறுவனம் நாடு முழுவதும் பல்வேறு அடையாளங்களை உருவாக்கியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி, தி இம்பீரியல், தாஜ்மஹால் பேலஸ் மற்றும் ஓபராய் ஹோட்டல் ஆகியவற்றுடன், ஓமன் சுல்தானுக்காக அரண்மனை வளாகத்தையும் கட்டியுள்ளனர்.

156 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவரது ஷபூர்ஜி பல்லோன்ஜி கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட் நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்டுள்ளது.

ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் தலைவரான இவர், ஷபூர்ஜி பல்லோன்ஜி கன்ஸ்ட்ரக்ஷன் லிமிடெட், ஃபோர்ப்ஸ் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் யுரேகா ஃபோர்ப்ஸ் லிமிடெட் ஆகியவற்றைக் நிர்வாகித்து வந்துள்ளார்.

மேலும், அசோசியேட்டட் சிமென்ட் நிறுவனங்களின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர். முன்னதாக ஏப்ரல் மாதம், ஷபூர்ஜி பல்லோன்ஜி மிஸ்திரி மற்றும் ஆறு இயக்குனர்கள் யுரேகா ஃபோர்ப்ஸ் குழுவில் இருந்து ராஜினாமா செய்தனர்.

ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலின்படி, மிஸ்திரி 15 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 125வது பணக்காரர் இடம் பெற்றிருந்தார்.

பல்லோன்ஜி மிஸ்திரியின் வாழ்க்கை பாதை:

  • மிஸ்திரி 1929ல் இந்தியாவில் ஒரு ஜோராஸ்ட்ரியன் வீட்டில் பிறந்தார்.

  • 1947ல், 18 வயதில், அவர் தனது குடும்பத்தின் கட்டுமானத் தொழிலில் சேர்ந்தார். 1865 ஆம் ஆண்டு அவரது தாத்தாவால் தொடங்கப்பட்ட இந்த வணிகம் டாடா குழுமத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தது.

  • படிப்படியாக, அவரது நிறுவனம் மத்திய கிழக்கில் தனது வணிகத்தை விரிவுபடுத்தியது மற்றும் 1972ல் ஓமன் சுல்தானுக்காக அல் ஆலம் அரண்மனையின் கட்டுமானத்தை நிறைவு செய்தது.

  • 2003ல், அவர் பட்சி பெரின் துபாஷை மணந்தார். அன்றிலிருந்து அவர் அயர்லாந்து குடிமகனாக இருந்து வருகிறார்.

  • 2011 ஆம் ஆண்டில், அவரது மகன் சைரஸ் மிஸ்திரி டாடா குழுமத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மிஸ்திரி தனது மூத்த மகனான ஷபூரை ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுவின் தலைவராக நியமித்தார்.

  • ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் படி, அவரது நிகர மதிப்பு $28.9 பில்லியனாக இருந்தது. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 41வது இடத்தில் இருந்தார்.

டாடாவுக்கும் மிஸ்திரிக்குமான உறவு:

டாடா சன்ஸ் நிறுவனத்தில் மிஸ்ட்ரிஸின் பங்குகளைத் தவிர, டாடாஸ் மற்றும் மிஸ்ட்ரிஸ் ஆகிய இரண்டு குடும்பங்களின் உறவுகளும் மிக பலமாகவே இருந்து வந்தது.

மிஸ்திரியின் இளைய மகன், சைரஸ் மிஸ்திரி, நவம்பர் 2011 முதல் அக்டோபர் 2016 வரை டாடா சன்ஸ் தலைவராகப் பணியாற்றினார். மிஸ்திரிகளின் கட்டுப்பாட்டில் இருந்த டாடா சன்ஸ் என்ற ஹோல்டிங் நிறுவனத்தை சைரஸ் முறையற்ற முறையில் அகற்றி தனியார் மயமாக்க முயன்றதால் சட்டப்போராட்டம் வெடித்தது. இதனால் டாடா மற்றும் மிஸ்திரி குடும்பத்திற்கு இடையே விரிசல் விழுந்தது.

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT) தொடரப்பட்ட வழக்கில் டாடா குழுமம் வெற்றி பெற்றது, ஆனால், மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இந்த உத்தரவை மாற்றியது மற்றும் சைரஸை மீண்டும் தலைவராக நியமிக்குமாறு குழுவை கேட்டுக் கொண்டது. அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த டாடா நிர்வாகம், அதில் வெற்றி கண்டது. மேலும் சைரஸ் மிஸ்திரி மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மிஸ்திரி குடும்பத்தினருக்கு ரத்தன் டாடா எழுதியதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கடிதத்தில்

“அன்புள்ள பல்லன், கடந்த ஆண்டுகளில் நீங்கள் எனக்கு அளித்த ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் செய்யும் பங்களிப்பை நான் அங்கீகரித்து மதிக்கிறேன், மேலும் வரும் ஆண்டுகளில் நாங்கள் இணைந்து பணியாற்றுவதால் உங்கள் நம்பிக்கையை நான் தொடர்ந்து அனுபவிக்க முடியும் என்று நம்புகிறேன்... எங்கள் பொதுவான உடன்பாடும் பரஸ்பர நம்பிக்கையும் தவறான புரிதல் இல்லாமல் உண்மையான மற்றும் நீடித்த உறவை வளர்க்கும். மேலும், சிறந்த நலனுக்காக டாடா சன்ஸ் ஒரு நிறுவனமாக, நாங்கள் ஒன்றாக நிற்பதும் வலிமையான விஷயமாக இருக்கும். முடிவில், உங்களையோ அல்லது உங்கள் குடும்பத்தையோ புண்படுத்தும் வகையில் நான் ஒருபோதும் உணர்வுப்பூர்வமாக எதையும் செய்ய மாட்டேன் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்,” என தெரிவித்திருந்தார்.

மிஸ்திரிக்கு ஷபூர் மிஸ்திரி மற்றும் சைரஸ் மிஸ்திரி ஆகிய இரண்டு மகன்களும், லைலா மற்றும் ஆலு என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். ஆலு ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் டாடாவை மணந்தார். அவர் 2003ல் தனது இந்திய குடியுரிமையை கைவிட்டு ஐரிஷ் குடிமகனாக ஆனார், மேலும், டப்ளினில் பிறந்த பாட் "பாட்சி" பெரின் துபாஷை மணந்தார்.

தொகுப்பு - கனிமொழி