மின்சாரம் இல்லை; ஒழுகும் கூரை வீடு; ‘பரியேறும் பெருமாள்' தங்கராசுவுக்கு உதவிய கலெக்டர்!

By malaiarasu ece|12th Feb 2021
பரிதாப நிலையில் ‘பரியேறும் பெருமாள்' திரைப்பட நடிகர் தங்கராசு!
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

’பரியேறும் பெருமாள் படத்துக்கு அடுத்து எந்த படத்திலும் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மேலும் 65 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் தற்போது நாட்டுப்புற கலைகளில் நடிப்பதையும் நிப்பாட்டிவிட்டார்...'


பரியேறும் பெருமாள்: தமிழ் சினிமா வரலாற்றில் சிறப்பான திரைப்படங்களில் ஒன்று. இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்து மாரி செல்வராஜ் இயக்கிய இத்திரைப்படம், தமிழகத்தில் பேசும் பொருளாக மாறியது. படத்தின் கதை தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கேள்வி கேட்கும் அளவுக்கு படத்தின் கதை தமிழ் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் படத்தில் கவனிக்கப்பட்ட நடிகராக அறியப்பட்டவர் ஹீரோவுக்கு தந்தையாக நடித்த நாட்டுப்புறக் கலைஞர் தங்கராசு.


அப்படத்தில் பெண் வேடம் ஏற்று அவர் நடித்த நடிப்பு பலரின் உணர்வுகளைத் தொட்டிருந்தது. இத்தனைக்கும் அவருக்கு அது முதல் படம். படத்தில் நாட்டுப்புறக் கலைஞராக நடித்த தங்கராசு, நிஜத்திலும் நாட்டுப்புற கலைஞர்தான்.

தங்கராசு

சொந்த ஊர் நெல்லை வண்ணாரபேட்டை. படத்தை போலவே நிஜத்திலும் பெண் வேடம் இட்டு சுற்றுவட்டார கிராமத்தில் நாட்டுப்புற நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இவரின் திறமையை அறிந்து பரியேறும் பெருமாள் படத்தில் மாரி செல்வராஜ் வாய்ப்பு வழங்கினார். அதற்கேற்ப,

படத்திலும் கலை நயம் மிக்க நடிப்பை வெளிப்படுத்தி தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தார். அந்த படத்தின் மூலம் நிறைய பாராட்டுகளை சம்பாதித்த தங்கராசுவின் நிஜ வாழ்க்கை அவ்வளவு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.

40 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை மட்டுமே நம்பி காலம் தள்ளிவரும் தங்கராசுவின் வாழ்க்கை இன்று வரையிலும் இருளில் தான் உள்ளது.


ஆம், குடிசை வீட்டில் தான் அவரின் வாழ்க்கை. அதுவும், மின் இணைப்பு கூட இல்லாமல், சிறிய மண்ணெண்ணெய் விளக்கு மட்டுமே இருக்கிறது அவரின் வீட்டில். கடந்த மாதம் பெய்த மழை அந்த குடிசையில் ஓட்டையை ஏற்படுத்திச் சென்றுள்ளது. இதனால் தற்போது அதில் வாசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


இவ்வளவு கஷ்டமான வாழ்க்கைக்கு மத்தியிலும் தங்கராசு, தனது மகளை நன்கு படிக்க வைத்து வருகிறார். தன் தொழிலில் வருமானத்தை கொண்டு, மகளை அஞ்சல் வழியில் எம்.ஏ. படித்துக் கொண்டிருக்கிறார்.


இதற்கிடையே, பரியேறும் பெருமாள் படத்துக்கு அடுத்து எந்த படத்திலும் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மேலும் 65 வயதுக்கு மேல் ஆகி விட்டதால் தற்போது நாட்டுப்புற கலைகளில் நடிப்பதையும் நிப்பாட்டிவிட்டார். தற்போது எலுமிச்சை, பணைக்கிழங்கு என தன்னுடைய கிராமத்தில் கிடைக்கும் சிலவற்றை விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்.

தங்கராசு

கலெக்டர் விஷ்ணுவிடம் இருந்து தற்காலிக பணி ஆணை பெறு தங்கராசு மகள்

சில தினங்களுக்கு தங்கராசுவின் நிலை குறித்து மீடியாக்களில் செய்தி வெளியானது. அவரின் நிலை அனைவரையும் கலங்கச் செய்தது. இந்த நிலையில்தான் தங்கராசுவின் ஏழ்மை நிலை குறித்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நெல்லை கலெக்டர் விஷ்ணுவின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.


அவரின் நிலை குறித்து தாசில்தார் ஒருவரை அனுப்பி ஆய்வு செய்த கலெக்டர், அவருக்கு உதவ முன்வந்தார். அதன்படி, தனது அலுவலகத்திலேயே,

தங்கராசுவின் மகளுக்கு தற்காலிகப் பணி வழங்கிய கலெக்டர் விஷ்ணு. குடிசை மாற்று வாரியத்தின் மூலம் விரைவில் தங்கராசுவுக்கு வீடு கட்டி தர ஏற்பாடு செய்யப்படும் என்றும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

கலெக்டரின் இந்த உதவிக்கு தற்போது மக்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. திரையுலகினரிடம் இருந்து பெரிய உதவிகள் எதுவும் கிடைக்காத நிலையில் கலெக்டரின் இந்த உதவி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் தங்கராசு.

”தற்போது சிறு சிறு கூலி வேலைகள் செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். மேலும் இரண்டு படங்களில் சிறிய வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. எனது நிலையை அறிந்த கலெக்டர் எனது மகளுக்கு தேர்தல் பிரிவில் தற்காலிக பணி கொடுத்துள்ளார். மேலும் எனது நிலை அறிந்து பலர் நேரில் வந்து பண உதவிகளையும் செய்து வருகின்றனர். என்னைப் போல மற்ற நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் உதவ வேண்டும்," என தங்கராசு கோரிக்கை விடுத்துள்ளார்.