அத்தியாவசியமற்றப் பொருட்களை ஆன்லைனில் டெலிவரி செய்ய அனுமதி!

லாக்டவுன் 4.0 தளர்வுகளின் படி, சிகப்பு மண்டலங்களிலும் அத்தியாவசியமற்ற பொருட்களை விநியோகம் செய்ய மின் வணிக நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

18th May 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இதுவரை மூன்று கட்டங்களாக பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் மே 31-ம் தேதி வரை நான்காம் கட்டமாக பொதுமுடக்கம் அமலில் உள்ளது.

இந்த லாக்டவுன் 4.0 இல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் (containment zones) அல்லாத அனைத்து இடங்களிலும் அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமின்றி அத்தியாவசியமற்ற பொருட்களையும் மின்வணிக நிறுவனங்கள் விநியோகம் செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அனுமதி சிகப்பு மண்டலங்களுக்கும் பொருந்தும்.
Coronavirus - Grocery Delivery

மூன்றாம் கட்ட பொதுமுடக்கத்தின்போது அத்தியாவசியமற்ற பொருட்களை பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் மட்டுமே விநியோகம் செய்ய மின் வணிக தளங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால் ரெட் மண்டலங்களில் காய்கறி, மளிகைப் பொருட்கள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் மட்டுமே ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யும் நிலை இருந்தது. அதில் தற்போது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆன்லைன் விற்பனைக்கான கட்டுப்பாடுகள் தொடர்கிறது. இங்கு அத்தியாவசிய நடவடிக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இந்தப் பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவசர மருத்துவச் சிகிச்சை, அத்தியாவசியப் பொருட்களுக்கான போக்குவரத்து போன்றவை மட்டுமே அனுமதிக்கப்படும்.


மிகப்பெரிய மின் வணிக நிறுவனமான அமேசான், கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. இந்தியாவில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த மின் வணிக ஜாம்பவான் தற்சமயம் மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்ததால் கடுமையாகப் பாதிக்கபட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அனுமதியானது இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு உற்சாகமளிக்கும் செய்தியாகும்.

அதேபோல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர அனைத்து மண்டலங்களிலும் சலூன் கடைகளைத் திறப்பது குறித்து மாநில அரசாங்கங்களே தீர்மானிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் மால்களில் உள்ள சலூன்களுக்கு இந்த அனுமதி பொருந்தாது. மூன்றாம் கட்ட பொதுமுடக்கத்தின் போது பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் உள்ள சலூன் கடைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருந்தது.


தகவல் உதவி: பிஐபி

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding and Startup Course. Learn from India's top investors and entrepreneurs. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close