Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

போன், லேப்டாப், ரிமோட்கள், மீதுள்ள 99.9% பாக்டீரியா, வைரஸ்களை அழிக்கும் புதிய ஸ்ப்ரே!

Bacto-V என்ற பெயரில் இரண்டு புதுமையான தொற்றுநீக்கல் பொருட்களை அறிமுகம் செய்யதுள்ளது கவின்கேர்.

போன், லேப்டாப், ரிமோட்கள், மீதுள்ள 99.9% பாக்டீரியா, வைரஸ்களை அழிக்கும் புதிய ஸ்ப்ரே!

Saturday May 02, 2020 , 2 min Read

கொரோனா வைரஸ் (கோவிட்-19 தொற்றுப் பரவலானது உலகெங்கிலும்  மக்களின் வாழ்க்கையை பல்வேறு நிலைகளில் பாதித்திருக்கிறது. இந்த உயிர்கொல்லி வைரஸ் பரவலை குறைக்கவேண்டும் என்ற ஒருமுகப்படுத்தப்பட்ட நோக்கத்தோடு செயல் நடவடிக்கையில் இறங்கியுள்ளது கவின்கேர் நிறுவனம்.


பாக்டோ –V (Bacto-V) என்ற பெயரில் இரண்டு புதுமையான தொற்றுநீக்கல் பொருட்களை அறிமுகம் செய்யதுள்ளது கவின்கேர். பாக்டோ-V என்ற பெயரானது பாக்டீரியா முதல் வைரஸ்கள் வரை (Bacteria to Viruses) என்பதன் சுருக்கமாகும்.

பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் போன்றவற்றை 99.9% கொன்று அழிக்கக்கூடிய திறன் கொண்டதாக பாக்டோ-V தயாரிக்கப்பட்டிருக்கிறது.
பாக்டோ

கவின்கேர் நிறுவனத்தின் பர்சனல் கேர் மற்றும் அலையன்சஸ் பிரிவின் தலைமை செயலாக்க அதிகாரியும், இயக்குனருமான வெங்கடேஷ் விஜயராகவன், இந்த புதிய பிராண்டு அறிமுகம் குறித்து பேசுகையில்,

“இந்திய மக்களின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் காக்கக்கூடிய புதுமைகளை உருவாக்குவது கவின்கேர் நிறுவனத்தின் முன்னுரிமையாக இருக்கிறது. கோவிட்-19 தொற்றுப்பரவல் மிக மோசமாக இருந்துவரும் இச்சூழலில் கொரோனாவை எதிர்த்த போராட்டத்தில் பாக்டோ-V அறிமுகம் அதனை இன்னும் அதிக அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது,” என்றார்.

பாக்டோ-V பிராண்டின் கீழ் உபகரணங்கள் தொற்றுநீக்கி (Gadget Disinfectant) மற்றும் மல்ட்டி சர்ஃபேஸ் டிஸ்ஃஇன்ஃபெக்டன்ட் (Surface Disinfectant) என்ற இரண்டு தயாரிப்புப் பொருட்களை கவின்கேர் அறிமுகம் செய்துள்ளது.


அறிவியல் நிபுணர்கள் அடங்கிய குழுவால் தனிச்சிறப்புடன் உருவாக்கப்பட்டிருக்கும் இவைகள் பாதுகாப்பானவை மற்றும் திறன்மிக்கவை என்று நுண்ணுயிரியல் ரீதியாக பரிசோதித்து உறுதி செய்யப்பட்டிருக்கின்றன, என்கிறார்.


இவர்களின் பிரதான முதன்மை தயாரிப்பான பாக்டோ-V உபகரண தொற்றுநீக்கியானது (Gadget Disinfectant), உபகரணங்களைத் தூய்மையாக்கும் வகைப்பிரிவில் இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் அறிமுகமாகும்.


பாக்டோ-V கேட்ஜெட் டிஸ்ஃஇன்ஃபெக்டன்ட் என்ன செய்யும்?


உபகரணங்களின் மேற்பரப்புகள் பொதுவாகவே வேறு எந்த மேற்பரப்புகளையும் விட அதிக அழுக்கானவை, அசுத்தமானவை. இன்றைய ஸ்மார்ட் உலகில் உபகரணங்கள் அதிலும் மிக முக்கியமாக மொபைல் போன்கள், பணியிடங்களிலிருந்து, குளியல் அறை வரை, கிச்சன்களிலிருந்து கடைகள் வரை மனிதர்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம் சேர்ந்தே பயணிக்கின்றன.


இந்த மொபைல் போன்களுக்கும் கூடுதலாக, நாளின் பெரும்பாலான பகுதியை குடும்பத்தில் உள்ள அனைவருமே ஏதாவது உபகரணங்கள் மற்றும் கருவிகளை தொடர்ந்து தொட்டுக்கொண்டு இருக்கிறோம்.


இவை குடும்பத்தினருக்கு தொற்றுநோய் பரவலுக்கான ஆதார அமைவிடமாக அமைந்திருக்கிறது. இந்தச் சூழலில், உபகரணங்கள் மீதுள்ள தொற்றை நீக்க பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாக்டோ-V (Gadget Disinfectant) ஸ்ப்ரே சிறந்த தீர்வாகும் என்றார்.

மொபைல் போன், லேப்டாப், டிவி ரிமோட்கள், கேமிங் சாதனங்கள், பொம்மைகள் மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீதான பாக்டீரியா/வைரஸ் தொற்றை இந்த பாக்டோ-வி அழிக்கும் வல்லமை படைத்தது, என்றார்.

பாக்டீரியா மற்றும் வைரஸ் நீண்ட மணி நேரம் தங்கி உயிர்வாழக்கூடிய; உலோகம், கண்ணாடி, கதவு குமிழ்கள், கைப்பிடிகள் மற்றும் கார் போன்ற வாகனங்களின் உட்புறங்கள் போன்றவற்றின் மேற்பரப்புகள் நோய்த்தொற்றுகளை விளைவிக்கக் கூடும்.


தற்போது சந்தையில் உள்ள திரவங்களால் மேற்பரப்பை தூய்மை மட்டுமே செய்யமுடியும், ஆனால் பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்த்து போரிட இது உதவுவதில்லை. அதனால் தொற்றுநீக்கிகளை நாம் பயன்படுத்துவது அவசியமாகும்.

பாக்டோ- V, சர்ஃபேஸ் டிஸ்ஃஇன்ஃபெக்டன்ட் எந்தவொரு கடினமான மேற்பரப்பின் மீதும் இருக்கின்ற பாக்டீரியா மற்றும் வைரஸ் 99.9% உடனடியாக அழித்துவிடும், என்று கவின்கேர் தெரிவித்துள்ளது.

கோவிட்- 19க்கு எதிரான போரில் கவின்கேர் ஏற்கனவே சானிடைசர்களை அறிமுகம் செய்துள்ள நிலையில், பாக்டோ-V அறிமுகம் பயனுள்ளதாக இருக்கும்.


நாடு முழுவதும் வினியோக வலையமைப்பு மற்றும் ஆன்லைன் வர்த்தகம், மூலம் எல்லா குடும்பங்களுக்கும் பாக்டோ-V உரிய நேரத்திற்குள் சென்றடைவதை உறுதிசெய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.


பாக்டோ-V கேட்ஜெட் டிஸ்ஃஇன்ஃபெக்டன்ட் மற்றும் பாக்டோ-V மல்ட்டி சர்ஃபேஸ் டிஸ்ஃஇன்ஃபெக்டன்ட் ஆகிய இத்தயாரிப்புகள் பலசரக்கு மளிகைக் கடைகள், சூப்பர் மார்க்கெட் மற்றும் ஆன்லைன் மின்-வர்த்தக தளங்கள் உட்பட பல்வேறு தளங்கள் வழியாக நுகர்வோர்களுக்கு கிடைக்கப்பெறும்.


பாக்டோ-V மல்ட்டி சர்ஃபேஸ் டிஸ்ஃஇன்ஃபெக்டன்ட் ஸ்பிரே, 180 மி.லி. ரூ.120 என்ற விலையிலும் 250 மி.லி. பேக் ரூ.165 என்ற விலையிலும் கிடைக்கிறது. பாக்டோ-V கேட்ஜெட் டிஸ்ஃஇன்ஃபெக்டன்ட் 100 மி.லி. பேக் ரூ.249 என்ற விலையில் கிடைக்கிறது.