கரீனா, வித்யா பாலன் பயன்படுத்தும் பிராண்ட்: 5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் Lovetobag

By YS TEAM TAMIL|15th Oct 2020
ஆடம்பர கைவினைத் தயாரிப்புகளை குறைந்த விலையில் வழங்கும் Lovetobag பிராண்ட் கொரோனா பெருந்தொற்று சூழலிலும் டிஜிட்டல் மூலம் விற்பனையில் கவனம் செலுத்தி ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் 20 லட்ச ரூபாய் விற்பனையை எட்டியுள்ளது.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

ஆயுஷி கனோஜ் குப்தா Lovetobag நிறுவனர். இவருக்கு சிறு வயது முதலே வடிவமைப்பு மற்றும் கைவினைக் கலை மீது ஈடுபாடு அதிகம். இவரது அம்மா ஆடை துறையில் பணிபுரிந்ததால் துணி வகைகள் இவருக்கு மிகவும் நெருக்கமானவை.  


இதனால் ஆயுஷி டெல்லி தேசிய ஃபேஷன் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து தங்கப் பதக்கத்துடன் பட்டம் வென்றதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. பட்டப்படிப்பு முடித்ததும் இந்திய ஏற்றுமதி ஆக்சசரீஸ் துறையில் இரண்டாண்டுகளுக்கு மேல் பணியாற்றினார். இதில் மதிப்பு கூட்டப்பட்ட ஆக்சசரீஸ் பிராண்ட் உருவாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஆராயப்படாமல் இருப்பதை உணர்ந்தார். அதாவது சர்வதேச தரத்திலான இந்திய பிராண்ட் சந்தை அதிகம் ஆராயப்படவில்லை என்பதை உணர்ந்தார்.


இந்தியா தனித்தேவைக்கேற்ற எம்பிராயிடரிகளை Alexader McQueen, Balmain, Dior, Mary Katranzou போன்ற ஆடம்பர பிராண்டுகளுக்கு விநியோகிக்கிறது.

“உலகத் தரம் வாய்ந்த ஆக்சசரீஸ் பிராண்டுகளுக்கு இந்தியா உற்பத்தி மையமாகத் திகழ்ந்தாலும் இந்தத் திறனைக் கொண்டு எப்படி உள்நாட்டு பிராண்டை உருவாக்குவது?” என்று ஆயூஷிக்கு வியப்பு ஏற்பட்டது.

2011-ம் ஆண்டு இவர் Lovetobag நிறுவினார். 2015-ம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த இந்த பிராண்ட் Lakme Fashion Week, Lotus Makeup India Fashion Week போன்றவற்றிலும் Harper’s Bazaar, Grazia Vogue, Cosmopolitan போன்றவற்றிலும் இடம்பெற்றது.


ஐஸ்வர்யா ராய் பச்சன், சோனம் கபூர், ஷில்பா ஷெட்டி, கரீனா கபூர், வித்யா பாலன், கரிஷ்மா கபூர், மலைகா அரோரா போன்ற பாலிவுட் பிரபலங்கள் இடையே Lovetobag பிரபலமானது. இவர்கள் பல நிகழ்வுகளில் இந்த பிராண்ட் தயாரிப்புடன் வருவதைப் பார்க்கமுடிந்தது.

“இந்திய கைவினத்திறனுடன்கூடிய நவீன வடிவமைப்பிற்கு மரியாதை செலுத்தும் விதத்தில் Lovetobag உருவாக்கினேன்,” என்று ஹெர்ஸ்டோரி இடம் தெரிவித்தார் ஆயூஷ்.
1

திருப்புமுனை

பெரும்பாலான ஸ்டார்ட் அப்கள் போன்றே தேவைகளுக்கான தீர்வாகவே Lovetobag உருவானது.

ஆயுஷி கடைசியாக இம்பல்ஸ் இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பணியாற்றியபோது பைகள், ஸ்கார்ஃப், நகைகள் போன்றவற்றின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருந்தார். இவை Ted Baker, Karen Millen, Debenhams Designs போன்ற ஃபேஷன் பிராண்டுகளுக்கானவை.

“இவர்களிடம் சிறப்பாக விற்பனையாகும் பொருட்கள் இந்திய கைவினைத் திறன் கொண்டவை என்பதை கவனித்தேன்,” என்றார்.

ஒருமுறை ஆயூஷியின் நண்பர் ஒருவர் லண்டனில் இருந்து லெதர் பவுச் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் 'மேட் இன் இந்தியா’ என பொறிக்கப்பட்டிருந்தது. இதுவே அவரது எண்ண ஓட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது.


தனது சகோதரியின் திருமணத்தின்போது இந்தத் தொழில்முனைவருக்கு ஆடைகளுக்கு பொருத்தமான பவுச் கிடைக்கவில்லை. “இந்திய பிராண்டுகள், பொதுவான தயாரிப்புகளையே தொடர்ந்து உருவாக்கி வருகின்றன. மதிப்பு கூட்டப்பட்ட இந்திய ஆக்சசரி பிராண்டுகள் தொடர்பான சந்தை ஆராயப்படாமல் இருந்தது,” என்றார்.


Sozenkari இவரது அம்மாவின் ஸ்டோர். இங்கு மீதமிருந்த எம்பிராயடரி கொண்டு ஆயூஷி பவுச் உருவாக்கினார். பிறகு அதே டிசைனில் 500 பவுச் விற்பனை செய்தார்.

“அப்போதுதான் என்னுடைய தனித்துவமான ஸ்டைல் குறித்து புரிந்துகொண்டேன்,” என்றார்.

Lovetobag குழுவில் உள்ளூர் கைவினைஞர்கள் உட்பட 40 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

ஒரு பெண் தொழில்முனைவராக பல்வேறு சவால்களைக் கடந்து வந்துள்ளதாக தெரிவிக்கிறார் ஆயுஷி.

“பெண் தலைமையில் இயங்கும் ஃபேஷன் வணிகம் என்றதும் அதுதொடர்பான கற்பிதங்கள் இருக்கவே செய்தன. இது வெறும் ஆர்வம் காரணமாக தொடங்கிய வணிகமல்ல என்பதையும் லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் வணிகம் என்பதையும் விற்பனையாளர்களுக்கு புரியவைப்பது ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது,” என்றார்.

ஆயுஷி எல்லா காலத்திற்கும் பொருத்தமான, ஆடம்பரமான, பழங்கால, பாரம்பரிய வடிவமைப்புகளில் கவனம் செலுத்துகிறார்.


ஆயுஷி தனக்கு ஆர்வம் இருக்கும் பகுதியைக் கண்டறிந்ததும் அது தொடர்பான ஆய்வில் ஈடுபடத் தொடங்கினார். அதற்கான மூலப்பொருட்களை வாங்கினார். சோதனை கட்டம் முடிந்த பின்னர் பேக் உற்பத்தி தொடங்கியது.

"முதல் சாம்பிள் உருவானது உணர்வுப்பூர்வமான அனுபவமாக அமைந்தது. ஒவ்வொரு டிசைனும் இறுதிபடுத்தப்படுவதற்கு முன்பு 10 முறை மாற்றியமைக்கப்பட்டன,” என்றார். 

ஆயுஷி தொடர்ந்து பிரீமியம் துணி வகைகளை ஆராய்ந்து வருகிறார். வழக்கமான பருவகாலம் சார்ந்த தொகுப்புகளான Spring Summer, Autumn Winter மட்டுமின்றி Lovetobag தனித்தேவைக்கேற்ற பைகளையும் தயாரிக்கிறது. இந்த பைகள் ஸ்பெஷாலிட்டி பிரீமியம் எம்பிராயிடரி பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.

3

இதன் தனித்துவமான அம்சங்கள் குறித்து ஆயுஷி விவரிக்கையில் பைகளின் நீடிப்புத்தன்மைக்காக வட்டமான விளிம்புகள் கொண்ட பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்டார். இந்த பிராண்டின் நுணுக்கமான எம்பிராயிடரிகளில் ஸ்பெஷாலிட்டி பிரிசிஷன் கட் ஜப்பானிய மணிகள் பயன்படுத்தப்படுவதால் ஒவ்வொரு தயாரிப்பும் நீடித்து நிலைக்கிறது.

எம்பிராயடரி பேனல்கள் ஒரு சில செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தயாரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. வாடிக்கையாளர்களின் தனித்தேவைக்கேற்ற தயாரிப்புகளை வழங்கும் மாதிரியில் Lovetobag செயல்படுகிறது.

குறைந்த விலையில் ஆடம்பரம்

Lovetobag ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கேப்ஸ்யூல் தொகுப்புகளையும் வெளியிடுகிறது. “ஒட்டுமொத்த சேமிப்பு அளவைக் குறைத்து வாடிக்கையாளர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க இது உதவுகிறது,” என்று ஆயுஷி விவரித்தார்.


Zuri Zora, Nesrin & Amoli போன்றவை இந்த பிராண்டின் சமீபத்திய கேப்ஸ்யூஸ் தொகுப்பு ஆகும்.

நேரடியாக வலைதளம் மூலம் விற்பனை செய்வதுடன் டெல்லியின் ஷாபுர்ஜாத் பகுதியில் உள்ள பிரபல ஸ்டோர் மூலமாகவும் இந்த பிராண்டின் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. Perniaspopupshop, Aza, Ensemble, Ogaan போன்ற இந்திய ஸ்டோர்களுடனும் 35-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிராண்டுகளுடனும் Lovetobag பி2பி பார்ட்னர்ஷிப்பிலும் இணைந்துள்ளது.


இந்த பிராண்ட் மிகப்பெரிய அளவில் கார்ப்பரேட் மற்றும் திருமண பரிசுகள் சம்பந்தப்பட்ட தயாரிப்புகளுடன் மேலும் விரிவடைந்துள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான ஏற்றுமதி ஆர்டர்களையும் பெற்று வருகிறது.

ஆடம்பர கைவினை தயாரிப்புகளை குறைந்த விலையில் வழங்கவேண்டும் என்பதே இந்த பிராண்டின் முக்கிய நோக்கம். Lovetobag வழங்கும் ரிடர்ன் கிஃப்ட் மற்றும் கார்ப்பரேட் கிஃப்ட் தயாரிப்புகளின் விலை 1,000 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. Pret வகைகள் 2,900 ரூபாய் முதல் 4,900 ரூபாய் வரை கிடைக்கிறது. இதன் Couture தயாரிப்புகள் 5,900 ரூபாய் முதல் 10,500 ரூபாய் வரை கிடைக்கிறது.
4

வருவாய்

அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களைச் சென்றடையும் நோக்கத்துடன் Lovetobag நாட்டில் நடைபெற்ற 26 கண்காட்சிகளில் பங்கேற்றது. இந்த பிராண்ட் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்றது. ஒவ்வொரு நிகழ்வின் மூலமும் 5,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை வருவாய் ஈட்டப்பட்டது.


சந்தையில் நிலவும் தேவைகளை மெல்ல புரிந்துகொண்டதாக ஆயுஷி தெரிவிக்கிறார். அதன் பிறகு முதல்கட்டமாக வாடிக்கையாளர்களைப் பெற மிகப்பெரிய ஆடம்பர டிசைனர் ஸ்டோர்கள் மற்றும் வலைதளங்கள் மூலம் இந்த பிராண்ட் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடத் தொடங்கியது. ஆஃப்லைனில் இருந்து ஆன்லைனிற்கு மாறும் போக்கு அதிகரிப்பதை உணர்ந்த இந்த பிராண்ட் 2016-ம் ஆண்டில் வலைதளத்தை அமைத்தது.


Lovetobag வலைதளத்தை மாதத்திற்கு 30,000 பேர் பார்வையிடுகின்றனர். சமூக வலைதளங்களில் 75,000 ஃபாலோயர்கள் உள்ளனர். சமூக வலைதளங்கள் மூலமாகவும் வாட்ஸ் அப் மூலமாகவும் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவது குறித்து இந்த பிராண்ட் ஆராய்ந்தது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக உற்பத்தி செயல்பாடுகள் சவால் நிறைந்ததாக மாறியது. பெரும்பாலான சந்தைகள் மூடப்பட்டது. விநியோகம் குறைந்தது. எனினும் வணிகத்தை சிறப்பாகத் தொடர டிஜிட்டல் மீடியாவில் தொடர்ந்து கவனம் செலுத்தியது. நாடு முழுவதும் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்பட்டதும் Lovetobag சமூக மார்க்கெட்டிங் உத்திகள் மூலம் 20 லட்சத்திற்கும் அதிகமாக விற்பனை செய்தது.

5 லட்ச ரூபாய் முதலீட்டுடன் சுயநிதியில் தொடங்கப்பட்ட Lovetobag முதல் ஆண்டில் இருந்தே லாபகரமாக செயல்பட்டு வருகிறது.

“கடந்த மூன்றாண்டுகளில் எங்கள் வருவாய் ஆண்டுதோறும் 50 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருகிறது,” என்றார் ஆயுஷி.

இந்த பிராண்ட் அடுத்த மூன்றாண்டுகளில் 5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளது.

ஆடம்பர பைகள் சந்தை மற்றும் வருங்கால திட்டம்

இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் பைகள் மற்றும் ஆக்சசரி துறை 3,337 மில்லியன் டாலரை எட்டும் என ஸ்டாடிஸ்டா மதிப்பிடுகிறது. 2020 மற்றும் 2024 ஆண்டுகளிடையே 13.6 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்துடன் வருவாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024-ம் ஆண்டு சந்தை அளவு 5,566 மில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.


Beau Monde, Duet Luxuty, The Right Sided போன்ற இந்திய பிராண்டுகளுடன் Lovetobag போட்டியிடுகிறது. இருப்பினும் தனது பிராண்ட் தனித்துவமான தயாரிப்புகளை வழங்குவதாக ஆயுஷி தெரிவிக்கிறார். ”எந்த காலத்திற்கும் பொருந்தக்கூடிய எங்களது தயாரிப்புகள் இந்திய மற்றும் மேற்கத்திய ஆடை வகைகளுடன் பொருத்தமாக இருக்கும்,” என்றார்.

“ஒவ்வொரு தயாரிப்பும் பயன்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லப்படவேண்டும் என்று விரும்புகிறோம். ஒவ்வொரு Lovetobag ஆக்சசரி உடனும் உணர்வுப்பூர்வமான இணைப்பு ஏற்படுத்தப்படவேண்டும் என்றும் ஒவ்வொரு தயாரிப்பையும் கொள்முதலாகக் கருதாமல் முதலீடாகக் கருதவேண்டும் என்றும் விரும்புகிறோம்,” என்றார் ஆயூஷி.

நிறுவனம் வளர்ச்சியடைந்து உலகின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த நுகர்வோர்களைச் சென்றடைய இதுவே சரியான தருணம் என்று ஆயுஷி கருதுகிறார். முதலீடு மட்டுமல்லாது நிபுணத்துவத்தையும் பகிர்ந்துகொள்ளக்கூடிய பார்ட்னர்களை ஏற்கத் தயாராக உள்ளார்.


ஆங்கில கட்டுரையாளர்: தெபோலினா பிஸ்வாஸ் | தமிழில்: ஸ்ரீவித்யா

Get access to select LIVE keynotes and exhibits at TechSparks 2020. In the 11th edition of TechSparks, we bring you best from the startup world to help you scale & succeed. Register now! #TechSparksFromHome