தனியார் கிரிப்டோகரன்சிக்கு தடையா? புதிய சட்டம் இயற்றும் மத்திய அரசு!

புதிய கிரிப்ட்டோகரன்சியை வெளியிடும் ரிசர்வ் வங்கி!
2 CLAPS
0

இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சியை வெளியிட அனுமதிக்கும் அதே வேளையில், நாட்டில் உள்ள அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளையும் தடை செய்யும் புதிய மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறது. ஏற்கனவே சில தினங்கள் முன் பிரதமர் மோடி டிஜிட்டல் நாணயங்கள் குறித்து பேசிய நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் பட்டியலிடப்பட்ட இருக்கிறது.

வரும் நவம்பர் 29-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த புதிய மசோதா கொண்டு வரப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரிப்ட்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சி ஒழுங்குமுறை மசோதா 2021 என்ற பெயரில் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த மசோதா,

“இதன்படி, பரிவர்த்தனைகளுக்கு கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்துவதை தடை செய்யும் எனத் தெரிகிறது. மேலும் தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கு மாற்றாக புதிய கிரிப்ட்டோகரன்சியை மத்திய ரிசர்வ் வங்கியே வெளியிடும்," என தகவல் வெளியாகியுள்ளது.

இது உண்மையாகும் பட்சத்தில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக டிஜிட்டல் கரன்சி உருவாகும். கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சி மசோதா, 2021 குறித்து மக்களவை செய்திக்குறிப்பில்,

“இந்திய ரிசர்வ் வங்கியால் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயத்தை உருவாக்குவதற்கான எளிதான கட்டமைப்பை உருவாக்குதல் மட்டுமில்லாமல் இந்த மசோதா இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளையும் தடை செய்ய முயல்கிறது, இருப்பினும், கிரிப்டோகரன்சியின் அடிப்படை தொழில்நுட்பத்தையும் அதன் பயன்பாடுகளையும் மேம்படுத்த சில விதிவிலக்குகளை இது அனுமதிக்கிறது," என விவரிக்கிறது.

கிரிப்டோகரன்சி உலகில் பல முன்னேற்றங்களுக்கு மத்தியில் வளர்ந்து வருகிறது. ஒருபுறம், நாட்டில் உள்ள ஏராளமான கிரிப்டோகரன்சி பரிமாற்றங்கள் பாலிவுட் நட்சத்திரங்களின் விளம்பரங்கள் மூலம் இந்த டிஜிட்டல் நாணயங்களை தீவிரமாக ஊக்குவித்து வருகின்றன. அதே நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ஒரு உயர்மட்டக் கூட்டத்தை அரசாங்கம் நடத்தியது.

கூட்டத்தில் கிரிப்டோ பரிமாற்றங்கள் தனியார் விளம்பரம்கள் குறித்து அதிகமாக விவாதிக்கப்பட்டதாகக் கூரப்படுகிறது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கிரிப்டோ பரிமாற்றங்கள் இந்த விளம்பரங்களை ஒளிபரப்புவதை நிறுத்தி சில சுய-ஒழுங்குமுறை வழிமுறைகளின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டன.

முன்னதாக, இந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசு, கிரிப்டோகரன்சிகளை சட்டப்பூர்வ டென்டர் அல்லது நாணயமாக கருதவில்லை என்றும், சட்டவிரோத நடவடிக்கைகள் அல்லது கட்டண முறையின் ஒரு பகுதிக்கு நிதியளிப்பதில் இந்த கிரிப்டோ-சொத்துக்களைப் பயன்படுத்துவதை அகற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது.

29ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அமர்வில் கிரிப்டோகரன்சிகள் மசோதா 26 மசோதாக்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது. இதேபோல், மூன்று பண்ணை சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவும் இந்த 26 மசோதாக்களில் அடங்கும். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29-ம் தேதி தொடங்கி டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest

Updates from around the world