Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

எந்த மண்டலங்களில் நாளை முதல் பேருந்து போக்குவரத்து அனுமதி?

மாநிலத்தில்‌ பொது பேருந்து போக்குவரத்தை ஜூன் 1ம் தேதி முதல்‌ நடைமுறைப்படுத்த, 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதில் எந்த இடங்களில் அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த மண்டலங்களில் நாளை முதல் பேருந்து போக்குவரத்து அனுமதி?

Sunday May 31, 2020 , 2 min Read

மே 31ம் தேதியுடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுபெறும் நேரத்தில் தமிழக அரசு, கொரோனா வைரஸ்‌ தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர்‌ மேலாண்மைச்‌ சட்டத்தின்‌ கீழும்‌, மத்திய உள்‌துறை அமைச்சகத்தின்‌ அறிவிக்கையின்‌ அடிப்படையிலும்‌, 

தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் மாதம் 30ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஏற்கனவே நடைமுறையில்‌ உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும்‌, சில தளர்வுகளுடனும்‌ நீட்டிப்பு செய்யப்படுகிறது, என அறிவித்துள்ளது.

ஜூன் 1ம் தேதி முதல் குறிப்பிடப்பட்டுள்ள மண்டலங்களில் மட்டும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை அனுமதித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

bus

பொது பேருந்து போக்குவரத்து :


மாநிலத்தில்‌ பொது பேருந்து போக்குவரத்தை ஜூன் 1ம் தேதி முதல்‌ நடைமுறைப்படுத்தும்‌ பொருட்டு, மாநிலம்‌ கீழ்கண்ட 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது . அந்த 8 மண்டலங்களின் விவரம் இதோ:

மண்டலங்கள்
  • மண்டலம்‌ VII-ல்‌ உள்ள காஞ்சிபுரம்‌, திருவள்ளூர்‌, செங்கல்பட்டு மாவட்டங்கள்‌ மறறும்‌ மண்டலம்‌ VIII-ல் உள்ள சென்னை காவல்‌ எல்லைக்குட்பட்ட பகுதிகள்‌ தவிர்த்து, அனைத்து மண்டலங்களுக்குள்‌, 50 விழுக்காடு பேருந்துகள்‌ மட்டும்‌ இயக்கப்படும்‌.


  • மண்டலம்‌ VII மற்றும்‌ மண்டலம்‌ VIII-க்கு உட்பட்ட பகுதிகளில்‌ பொது போக்குவரத்து பேருந்துகளின்‌ இயக்கத்திற்கு தடை தொடர்கிறது.


  • அங்கீகரிக்கப்பட்ட தடங்களில்‌ தனியார்‌ பேருந்துகளும்‌ (Stage Carriers) இயக்க அனுமதிக்கப்படுகிறது.


  • பேருந்துகளில்‌ உள்ள மொத்த இருக்கைகளில்‌, 60 விழுக்காடு இருக்கைகளில்‌ மட்டும்‌ பயணிகள்‌ அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்‌.


  • மண்டலத்திற்குள்‌ பயணிக்கும்‌ பயணிகளுக்கு இ-பாஸ்‌ தேவையில்லை என்ற நிலையில்‌, பொது போக்குவரத்து பேருந்துகளில்‌ பயனிக்கவும்‌ இ-பாஸ்‌ அவசியமில்லை.


  • அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு தவிர, மண்டலங்களுக்கு (இடையேயும்‌, மாநிலங்களுக்கிடையேயுமான பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கான தடை தொடர்கிறது.


  • அரசால்‌ தனியாக வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி பொது போக்குவரத்திற்கான பேருந்துகள்‌ இயக்கப்படும்‌.


இ-பாஸ்‌ முறை :


  • அனைத்து வகையான வாகனங்களும்‌ மேற்கண்ட அட்டவணையில்‌ உள்ள மண்டலத்திற்குள்‌ இயங்க அனுமதிக்கப்படுகிறது. அவைகளுக்கு இ-பாஸ்‌ தேவையில்லை.


  • வெளி மாநிலங்களுக்குச் சென்று வரவும்‌, வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரவும்‌, மணடலங்களுக்கிடையே சென்று வரவும்‌, இ-பாஸ்‌ முறை தொடர்ந்து நடைமுறையில்‌ இருக்கும்‌.


தகவல்: டிஐபிஆர்