பதிப்புகளில்
நியூஸ் வியூஸ்

இனி ’கூகுள் பே’ செயலி மூலம் டிஜிட்டல் தங்கம் வாங்கி மகிழுங்க...

பேடிஎம், போன்பே மற்றும் மோபிக்விக் போன்ற, தங்கள் மேடை மூலம் டிஜிட்டல் தங்கம் வாங்கும் வசதியை அளிக்கும் பரிவர்த்தனை செயலிகள் வரிசையில் கூகுள் பே இணைந்துள்ளது.

YS TEAM TAMIL
13th Apr 2019
Add to
Shares
12
Comments
Share This
Add to
Shares
12
Comments
Share

கூகுளின் மொபைல் பரிவர்த்தனை செயலியான கூகுள் பே, டிஜிட்டல் தங்கம் வாங்கும் வசதியை அளிக்கத்துவங்கியிருக்கிறது. கூகுள் பே பரிவர்த்தனை மேடை மூலம் டிஜிட்டல் தங்கத்தை வாங்கி விற்கலாம். MMTC-PAMP கூட்டு மூலம் கூகுள் பே இதை வழங்குகிறது.


இந்த கூட்டு மூலம், பயனாளிகள் கூகுள் பே செயலி வழியே 99.99 சதவீத 24 கேரட் தங்கம் வாங்கலாம். பயனாளிகள் வாங்கும் தங்கம், அவர்கள் சார்பில் MMTC-PAMP ல் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்படும். பின் எப்போது வேண்டுமானாலும் அப்போதையை விலையில் அதை கூகுள் பே மூலம் விற்றுக்கொள்ளலாம் என நிறுவனம் தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, கூகுள் பே இந்தியா பிராடக்ட் மேனேஜர் அம்பரீஷ் கெங்கே கூறியுள்ளதாவது,

 “இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மையமாக தங்கம் திகழ்கிறது. இதனால் இந்தியா தங்க நுகர்வில் இரண்டாவது இடம் வகிக்கிறது. ஆண்டுதோறும் இந்தியர்கள் முக்கிய தினங்களில் தங்கம் வாங்குகின்றனர். கூகுள் பே செயலியை இன்னும் பயனுள்ளதாக ஆக்கும் வகையில் இப்போது இதன் மூலம் தங்கத்தை வாங்கி விற்கலாம். போனில் இருந்தே கூகுள் பே மூலம் இதை பாதுகாப்பாக மேற்கொள்ளலாம்.”

கூகுள் பேவுக்கு முன்பாகவே, பேடிஎம், போன்பே, மற்றும் மோபிக்விக் ஆகிய பரிவர்த்தனை செயலிகள் டிஜிட்டல் தங்கம் வாங்கும் வசதியை அளிக்கின்றன. பேடிஎம் 2017 ல் இந்த வசதியை அறிமுகம் செய்தது. பின்னர் 2018 ல் போன்பே மற்றும் மோபிக்விக் இந்த வசதியை அறிமுகக் செய்தது.

அட்சய திரிதியை, தீபாவளி போன்ற திருநாட்களில் தங்கம் வாங்கும் பழக்கம் கொண்ட இந்தியர்களுக்காக இந்த வசதி அறிமுகம் செயப்படுவதாக கூகுள் பே தெரிவிக்கிறது.  

கடந்த தீபாவளி அன்று, அதுவரை தனது மேடையில் 2,000 கிலோ தங்கம் பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பதாக பேடிஎம் தெரிவித்தது. மேடிஎம் மூலம் தங்கம் வாங்கியவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனாக வளர்ச்சி அடைந்திருப்பதாகவும் தெரிவித்தது.

போன்பே, கடந்த தீபாவளியின் போது, தங்கம் விற்பனை மற்ற நாட்களைவிட 400 சதவீதம் வளர்ச்சி அடைந்ததாக தெரிவித்தது. மோபிக்விக் நிறுவனம் தீபாவளியின் போது 7,000 க்கும் மேல் வாடிக்கையாளர்களை பெற்றது.

தமிழில்: சைபர்சிம்மன்

Add to
Shares
12
Comments
Share This
Add to
Shares
12
Comments
Share
Report an issue
Authors

Related Tags

Latest Stories

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக