தமிழக அரசின் ஆதரவுடன் மாநிலம் முழுதும் விரிவடைகிறது ‘புத்ரி’ திட்டம்

இத்திட்டம் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு உகந்த பயிற்சியளித்து, அவர்கள் தங்களது பணிவாழ்க்கையை தீர்மானிப்பதற்கு சரியான வழிகாட்டலை அளிக்கிறது.

5th Nov 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

’அவதார் ஹியூமன் கேப்பிடல் டிரஸ்ட்’ லாப நோக்கமற்ற நிறுவனமாகும். இது பெண்களுக்கு பொருளாதாரச் சுதந்திரத்தை வழங்குவது தொடர்பாக செயல்படுகிறது. சென்னையில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனம் கடந்த எட்டாண்டுகளாக பாலின சமத்துவம், வறுமை ஒழிப்பு, போன்றவை தொடர்பாகவும் பணியாற்றி வருகிறது.


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கார்ப்பரேஷன் மற்றும் அரசுப்பள்ளிகளில் படிக்கும் பெண் குழந்தைகள், தங்களது பணிவாழ்க்கையை தீர்மானிப்பதற்கு வழிகாட்டும் நோக்கத்துடன் 2017-ம் ஆண்டு ’புத்ரி திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த புத்ரி திட்டத்தின்கீழ் தமிழ்நாடு முழுவதும் உள்ள 1,000 பள்ளிகளில் வேலை குறித்த நோக்கத்தன்மை தொடர்பான பயிற்சிகளை மாணவிகளுக்கு வழங்க தமிழ்நாடு அரசு தற்போது ஆதரவளித்து ஒப்புதல் கடிதம் அனுப்பியுள்ளது. இதை கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்தி தனியார் கூட்டமைப்புடன் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
புத்ரி

சமீபத்தில் நடைபெற்ற புத்ரி திட்டத்தின் ‘உத்யோக் உத்சவ் 2019’ நிகழ்வின் மூன்றாவது பதிப்பில் அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்நிகழ்வில் சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 800 புத்ரி உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த இளம் பெண்களுக்கு அவர்களது பள்ளிகளிலேயே புத்ரி திட்டத்தின்கீழ் 40-க்கும் அதிகமான திறன்களில் பயிற்சியளிக்கப்படுகிறது.


’உத்யோக் உத்சவ்’ நலிந்த பிரிவினைச் சேர்ந்த மாணவிகள் வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிக்க, தொழில் வாய்ப்புகள், உதவித்தொகை, இண்டெர்ஷிப், வேலை வாய்ப்புகள் போன்றவற்றை ஆராய உதவும் தளமாகும்.


தமிழக அரசாங்கத்தின் பள்ளிக் கல்வித் துறையின் இணை இயக்குநர் எம். வாசு கூறும்போது,

”நகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் தங்களது லட்சியத்தை எட்ட இந்த முயற்சி உதவுகிறது. இது மேலும் விரிவடைந்து ஏராளமான மாணவிகளைச் சென்றடைவதற்காக அவதார் ஹுயூமன் கேப்பிடல் டிரஸ்ட் உடன் இணைந்து செயல்படுவதில் தமிழ்நாடு அரசு மகிழ்ச்சியடைகிறது.

பெண்கள் ஆண்களுக்கு நிகராக இருப்பதுடன் ஆண்களைக் காட்டிலும் சிறந்தவர்களாக இருக்கவேண்டும் என்றார் மகாகவி பாரதியார். புத்ரி திட்டத்தின் உறுப்பினர்களாக இணையும் மாணவிகளுக்கு அத்தகைய வளர்ச்சியை சாத்தியப்படுத்த விரும்புகிறோம்,” என்றார்.


சமூக தொழில்முனைவர், அவதார் குழுமத்தின் இயக்குநர்-தலைவர் மற்றும் அவதார் ஹுயூமன் கேப்பிடல் டிரஸ்ட், மேனேஜிங் ட்ரஸ்டி டாக்டர் சௌந்தர்யா ராஜேஷ் கூறும்போது, “நம் சமூகம் பாலின சமத்துவத்தை நோக்கிப் பயணிக்கையில் நலிந்த பிரிவினைச் சேர்ந்தவர்களின் திறன்கள் அடையாளம் காணப்படவேண்டியது அவசியமாகிறது.

“தமிழ்நாடு முழுவதும் உள்ள நலிந்த பிரிவினைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு புத்ரி திட்டத்தின்கீழ் பயிற்சியளிக்கப்படுகிறது. இந்த முயற்சியின்கீழ் இதுவரை 5,000க்கும் அதிகமான பெண் குழந்தைகள் பலனடைந்துள்ளனர். இன்று அதிகளவிலான கார்ப்பரேட் பெருநிறுவனங்கள் அங்கு பணிபுரியும் ஏராளமான பெண்கள் திருமணம், மகப்பேறு, இடமாற்றம் போன்ற காரணங்கள் தங்களது பணி வாழ்க்கையை பாதிக்காமல் பணியைத் தொடர உதவும் சூழலை அமைத்துத் தருகின்றன,” என்றார்.

அவர் மேலும் கூறும்போது, “வேலை குறித்த நோக்கத்தன்மையை உருவாக்கும் பயிற்சி என்பது தொழில் பயிற்சியில் இருந்து மாறுபட்டது. இதில் கடினமான சூழல்களில் இருந்து மீண்டெழும் திறன், ஆர்வத்தை ஏற்படுத்திக்கொள்ளுதல், குழுவாக பணியாற்றுதல், பணிவாழ்க்கையில் முழுமையான கவனத்துடன் செயல்படுதல் போன்றவற்றில் பயிற்சியளிக்கப்படும். உத்யோக் உத்சவ் இத்திட்டத்தின் நீட்ச்சியாகும். இந்தத் தளம் பெண் குழந்தைகளுக்கு கார்ப்பரேட் சூழலை அறிமுகப்படுத்தி அவர்களது பணி வாழ்க்கையை கற்பனை செய்துகொள்ள உதவுகிறது,” என்றார்.

1
”இந்திய பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இந்தப் பெண்கள் நம் நாட்டின் ஜிடிபி-யை அதிகரிப்பதில் பங்களிப்பார்கள். பாலின சமத்துவத்தை எட்டும் நிலையில் இது 2025ம் ஆண்டில் கூடுதலாக 2.9 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்றார் செளந்தர்யா.

இந்நிகழ்வு மாணவர்களுக்கு அறிவைப் பகிர்ந்துகொள்ளும் தளமாக அமைகிறது. அவர்கள் பட்டப்படிப்பை முடித்த பிறகு அலுவலகப் பணிகளில் இணைய RNTBC, Comcasts, Zoho Corp, Danfoss, Deloitte, Saint Gobain, Dow Chemicals, HSBC, Dun & Bradstreet, Caterpillar, News7, Sathyabama, CIPET, Project Management Institute போன்ற முன்னணி நிறுவனங்கள் வழிகாட்டுகிறது.


  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close
Report an issue
Authors

Related Tags

எங்கள் தினசரி செய்திக்கு பதிவு பெறுக

Our Partner Events

Hustle across India