கொரோனா பாதிப்பு யாருக்கு ஏற்படும்? பொருட்களின் மேல் எவ்வளவு நேரம் வைரஸ் உயிர் வாழும்?

இப்படி கொவிட்-19 வைரஸ் பற்றி உங்களின் பல அடிப்படைக் கேள்விகளுக்கு உலக சுகாதார மையம் அளித்துள்ள விளக்கங்கள் இதோ!

24th Mar 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

கொரோனா வைரஸ் 170-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்கல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் 14,000-க்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கோவிட்-19 குறித்து பல்வேறு தகவல்கள் மக்களிடையே பகிரப்பட்டு வருகிறது. இந்த கொரோனா வைரஸ் குறித்த தவறான, போலியான தகவல்களை நம்பவேண்டம் என்று அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.


இந்த நிலையில் இந்த கோவிட்-19 குறித்து உலக சுகாதார மையம் விரிவான தகவல்களை வழங்கியுள்ளது. இதில் மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கேள்விகளாக வெளியிட்டு அதற்கான சரியான, விஞ்ஞானப் பூர்வமான பதில்களை தந்துள்ளது WHO.

who corona

உங்களின் கொரோனா சந்தேகங்கள் கேள்வி-பதில் வடிவில் இதோ:


உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸை உலகளவில் பரவும் தொற்று (Pandemic) நோயாக ஏன் அறிவித்தது?

கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவக்கூடியது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஒரே சமயத்தில் பரவி வருவதால் இந்த நோய் தொற்றுநோயாக உலக சுகாதார நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது.

இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு பன்றிக் காய்ச்சல் பரவியது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு வைரஸ் புதிதாகவும் மற்றவர்களுக்கு எளிதாக மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுத்தும் வகையிலும் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவும் வகையிலும் அமைந்திருந்தால் அவை பரவக்கூடிய தொற்றுநோயாகக் கருதப்படும். கொரோனா வைரஸ் இந்த தன்னை அனைத்தையும் கொண்டுள்ளது.


இந்த வைரஸ் தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான தடுப்பூசியோ சிகிச்சையோ இன்னமும் கண்டறியப்படாத நிலையில் இதன் பரவலைத் தடுப்பது முக்கியம்.


கோவிட்-19 பாதிப்பு யாருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது?

ஒருவர் எங்கு இருக்கிறார் என்பதைப் பொறுத்தே பாதிப்பு அமையும். கோவிட்-19 பாதிப்பு அதிகமுள்ள பகுதியாக இருப்பின் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம். பெரும்பாலான பகுதிகளில் பாதிப்பு குறைவாக இருப்பினும் தற்போது உலகின் பல்வேறு பகுதிகளிலும் இந்த நோய்பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது. இந்தப் பகுதிகளில் வசிப்போர் அல்லது இந்தப் பகுதிகளுக்குச் செல்வோர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம்.


ஒவ்வொரு முறை கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்கள் புதிதாகக் கண்டறியப்படும்போதும் அரசாங்கங்களும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். எனவே உள்ளூரில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு இணங்க நடந்துகொள்வது சிறந்தது. இந்த நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் கோவிட்-19 பரவும் அபாயம் குறையும்.

கோவிட்-19 நோய்பரவல் முடிவிற்கு வரக்கூடும் என்பதை சீனா போன்ற நாடுகள் நிரூபித்துள்ளது. ஆனால் துரதிர்ஷ்ட்டவசமாக பலருக்கு புதிதாக பாதிப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. நீங்கள் இருக்கும் அல்லது செல்ல விரும்பும் பகுதியின் சூழலை முழுமையாக உணர்ந்துகொள்வது அவசியம். உலகம் முழுவதும் கோவிட்-19 ஏற்படுத்தி வரும் பாதிப்பு குறித்த நிலவரங்களை உலக சுகாதார நிறுவனம் தினமும் வெளியிட்டு வருகிறது.

நம்மை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிந்துகொள்ளவேண்டுமா?


உங்களுக்கு இருமல், சளி உள்ளிட்ட கோவிட்-19 அறிகுறிகள் இருந்தாலோ அல்லது கோவிட்-19 பாதித்துள்ளவர்களை நீங்கள் பராமரித்து வந்தாலோ மட்டும் முகக்கவசம் அணியலாம். பயன்பாட்டிற்குப் பின்னர் அப்புறப்படுத்தக்கூடிய முகக்கவசங்களை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

உங்களுக்கு நோய் பாதிப்பு இல்லையென்றாலோ அல்லது நோய் பாதித்தவர்களை பராமரிக்கவில்லை என்றாலோ நீங்கள் ஒரு முகக்கவசத்தை வீணாக்குகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். உலகளவில் முகக்கவசங்களுக்கான பற்றாக்குறை நிலவுகிறது. எனவே இவற்றை முறையாகப் பயன்படுத்துமாறு உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது.

கொரோனா தொற்றில் இருந்து காத்துக்கொள்ள கைகளை அடிக்கடி சுத்தமாகக் கழுவவேண்டும். இருமல் ஏற்படும்போது முழங்கையை மடக்கி இருமவேண்டும். அல்லது டிஷ்யூ பயன்படுத்தவேண்டும். இருமல் அல்லது தும்மல் இருப்போரிடம் இருந்து குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு இருக்கவேண்டும்.

இந்த வைரஸ் பொருட்களின் மேற்பரப்பில் எவ்வளவு நேரம் உயிர்வாழுக்கூடியவை?


கொரோனா வைரஸ் சில மணி நேரங்கள் முதல் பல நாட்கள் வரை வாழக்கூடியது. இது வெப்பநிலை, ஈரப்பதம் உள்ளிட்ட குறிப்பிட்ட சூழலின் தன்மையைப் பொறுத்து மாறுபடும்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொற்று இருப்பதாக நீங்கள் கருதினால் அந்த இடத்தைக் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி உங்களையும் மற்றவர்களையும் கிருமிதொற்றில் இருந்து காத்துக்கொள்ளலாம். ஆல்கஹால் சார்ந்த சானிடைசர் அல்லது சோப்பு கொண்டு கைகளை சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள். கண், வாய், மூக்கு போன்ற பகுதிகளைத் தொடுவதைத் தவிர்த்துவிடுங்கள்.


கோவிட்-19 பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து ஒரு பேக்கேஜ் பெறுவது பாதுகாப்பானதா?


கோவிட்-19 பாதிக்கப்பட்ட நபர் மூலம் வணிகரீதியான பொருட்களில் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு. வெவ்வேறு வெப்பநிலையைக் கடந்து வரும் பேக்கேஜில் வைரஸ் தொற்று ஏற்படும் ஆபத்து குறைவு.


நாம் தவிர்க்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன?


  • புகைபிடித்தல்
  • பல்வேறு முகக்கவசங்களை அணிந்துகொள்ளுதல்
  • ஆண்டிபயாடிக்ஸ் உட்கொள்ளுதல்


இதுபோன்ற நடவடிக்கைகள் தீங்குவிளைவிக்கக்கூடியவை. உங்களுக்கு காய்ச்சலோ இருமலோ அல்லது மூச்சு விடுவதில் சிரமமோ இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும். இது தொற்று தீவிரமாகும் ஆபத்தைக் குறைக்கும். அத்துடன் சமீபத்தில் நீங்கள் மேற்கொண்ட பயண விவரங்களை மருத்துவரிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும்.


தகவல்கள்: உலக சுகாதார மையம் | தமிழில்: ஸ்ரீவித்யா

How has the coronavirus outbreak disrupted your life? And how are you dealing with it? Write to us or send us a video with subject line 'Coronavirus Disruption' to editorial@yourstory.com

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India