Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

வில்லேஜ் குக்கிங் குழுவுடன் காளான் பிரியாணி சாப்பிட்ட ராகுல் காந்தி!

ராகுல் காந்தி தமிழகத்தின் பல ஊர்களில் வலம் வந்து கட்சிக்கு பிரச்சாரம் செய்வதோடு மக்களோடு மக்களாக தமிழர் பாரம்பரியத்தை தெரிந்து கொண்டு பலரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

வில்லேஜ் குக்கிங் குழுவுடன் காளான் பிரியாணி சாப்பிட்ட ராகுல் காந்தி!

Saturday January 30, 2021 , 2 min Read

'உங்க நிகழ்ச்சியை நான் யூடியூப்பில் பார்த்திருக்கிறேன். நேரில் பார்க்க வந்திருக்கிறேன்...’


சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வந்துள்ள ராகுல் காந்தி, வில்லேஜ் குக்கிங் சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஓலைப்பாயில் சம்மணம் போட்டு அமர்ந்து காளான் பிரியாணியை ரசித்து ருசித்து சாப்பிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை Village cooking channel பதிவிட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 5 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளனர்.


சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள தமிழகம் வந்துள்ள ராகுல்காந்தி, தமிழக மக்களுடன் உறவுக்காரர்கள் போல பழகி வருகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் செம வைரலாகி வருகிறது. திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல் என ஐந்து மாவட்டங்களிலும் பிரச்சாரம் செய்த ராகுல்காந்தி, பேக்கரியில் நுழைந்து டீ சாப்பிட்டார்.

ராகுல் செல்பி

கொங்கு மண்டலத்தைச் சுற்றி வந்த ராகுல்காந்தி, தமிழர்களின் கலாச்சாரம் பற்றியும், தமிழ் மொழி பற்றியும் பேசினார். வேனில் ஏறிய சிறுமியின் உடையை சரி செய்து செல்பி எடுத்து பலரது மனதை கவர்ந்தார். கரூரில் ஜோதிமணி எம்பி மாட்டுவண்டி ஓட்ட அசால்டாக பயணம் செய்தார்.


இந்நிலையில் கரூரில் உள்ள கிராம மக்கள் நடத்தும் Village cooking channel எனப்படும் யூடியூப் சேனலில் சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவர்களுடன் சேர்ந்த காளான் பிரியாணியை ராகுலும் சமைத்தது செம்ம ஹிட்டாகியிருக்கிறது. 


அழகுத் தமிழில் பேசி வெங்காய ரைத்தாவை கலக்கினார். அப்போது வெங்காயம், தயிர், கல் உப்பு என்று சத்தமாக சொல்லிக்கொண்டே கலக்கி ஒரு வெங்காயத்தை எடுத்து உப்பு சரியாக இருக்கிறதா என்று டேஸ்ட் பார்த்தார் ராகுல்காந்தி.


அதுமட்டுமல்ல, “உங்க நிகழ்ச்சியை நான் யூடியூப்பில் பார்த்திருக்கிறேன். நேரில் பார்க்க வந்திருக்கிறேன்,” என்று ராகுல்காந்தி ஆங்கிலத்தல் சொல்லவே அதை தமிழில் மொழி பெயர்த்தார் ஜோதிமணி எம்பி. அதைக் கேட்டதும் அவர்கள் எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி வெளிப்பட்டது. அன்பு பூரித்தது.

கட்சியின் தலைவர் என்பதை மறந்து மிகவும் கேஷூவலாக அவர்களின் கைகளை பிடித்துக்கொண்டு. சாதராணமாக பேசிய ராகுல், ஓலைப்பாயில் சம்மணம் போட்டு அமர்ந்தார்.

ராகுல் காந்தி

தலைவாழை இலை பரப்பி, அவருக்கு காளான் பிரியாணி, கத்திரிக்கா குழம்பு, தயிர் வெங்காய ரைத்தா பரிமாறப்பட்டது. ரசித்து ருசித்து சாப்பிட்ட ராகுல்காந்தி, மட்டன், சிக்கன் போட்டு இதே முறையில்தான் பிரியாணி செய்ய வேண்டுமா என்று சந்தேகம் கேட்டார்.


சாப்பிட்ட பிறகு சூப்பர் என்று சொல்லி அதற்கு தமிழில் என்ன சொல்ல வேண்டும் என்று கேட்கவே, நல்லாயிருக்கு என்று சொல்ல, அதே போல நல்லாயிருக்கு சொல்லி கைகளை பிடித்து நன்றி சொன்னார்.

அவர்களும் தன்னுடன் ஒரு பிரதான தேசிய கட்சியின் தலைவர் இருக்கிறார் என்று எண்ணி அந்நியமாக பார்க்காமல், வீட்டில் ஒருவருடன் இருப்பதாக நெருக்கம் காட்டினர். Village cooking channel யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோவை ஒரு மணி நேரத்தில் 5 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளனர்.


படங்கள் மற்றும் தகவல் உதவி - village cooking channel