‘என்னை மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்’ - ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்!

By MalaiArasu|11th Jan 2021
அரசியல் நிலைப்பாடு குறித்து ரஜினி மீண்டும் அறிக்கை!
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

நான் அரசியலுக்கு வர வேண்டும் என அறப்போராட்ட நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியலுக்கு வரப்போகிறேன் என்று கடந்தாண்டு நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இதன்காரணமாக அவரது ரசிகர்களின் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தனர். அண்ணாத்த படபிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற ரஜினி உடலநலக்குறைவு காரணமாக அங்கே சிகிச்சைப் பெற்று சென்னை திரும்பினார்.


அப்போது அவர். உடல்நலப் பிரச்னைகள் காரணமாக அரசியலுக்கு வரப்போவதில்லை எனத் தெரிவித்தார். ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கான முற்றுப்புள்ளி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்து அரசியலில் ஈடுபட வேண்டுமென்று கோரி நேற்று (ஜனவரி 10) அவரது ரசிகர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில், 300க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் பங்கேற்றனர். இதில் சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களும் பங்கேற்றிருந்தனர்.

rajini

இந்நிலையில் ரசிகர்களின் இந்த போராட்டம் தொடர்பாக நடிகர் ரஜினி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்.

”நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மன்ற நிர்வாகிகளும், மன்றப்பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்களும் சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினர். கட்டுப்பாடுடன், கண்ணியத்துடன் நடந்த போராட்டத்திற்கு பாராட்டுகள்.


ஆனால் தலைமையின் உத்தரவை மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது. தலைமையின் உத்தரவை மதித்து போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கு நன்றி. நான் ஏன் இப்போது அரசியலுக்கு வரமுடியவில்லை என்ற காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன்.

நான் என் முடிவை கூறி விட்டேன். தயவு கூர்ந்து இதற்குப் பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று என யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.