விராட் கோலியை பின்னுக்குத் தள்ளிய ரன்வீர் சிங் - டாப் 5ல் இடம் பிடித்த தீபிகா படுகோன் - எதில் தெரியுமா?
இன்று சோசியல் மீடியா போகிற போக்கைப் பார்த்தால் சாமானியர்கள் யார் வேண்டுமானாலும், பயங்கரமாக வளர்ந்து தனி பிராண்டை உருவாக்க முடியும். இருப்பினும், கிரிக்கெட் வீரர்கள், கால்பந்து வீரர்கள், நடிகர்கள், நடிகைகளை மிஞ்ச முடிவதில்லை. அந்த அளவுக்கு அவர்களின் பெயர்கள் மக்கள் மனதில் நிலைத்து விடுகிறது.
இன்று சோசியல் மீடியா போகிற போக்கைப் பார்த்தால் சாமானியர்கள் யார் வேண்டுமானாலும், பயங்கரமாக வளர்ந்து தனி பிராண்டை உருவாக்க முடியும். இருப்பினும், கிரிக்கெட் வீரர்கள், கால்பந்து வீரர்கள், நடிகர்கள், நடிகைகளை மிஞ்ச முடிவதில்லை. அந்த அளவுக்கு அவர்களின் பெயர்கள் மக்கள் மனதில் நிலைத்து விடுகிறது.
பிராண்ட் வேல்யூ:
விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவருமே தங்களது பிராண்டை வைத்து விளம்பரங்கள் மூலமாக ஆண்டுக்கு கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். குறிப்பாக ஷாருக்கான், விராட் கோலி, ஆலியா பட், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் எல்லாம் இன்றைய வர்த்தக உலகில் தனி பிராண்டாக வலம் வருகின்றனர்.
அப்படி தங்களுக்கு உள்ள பிராண்ட் வேல்யூவை வைத்து அவர்கள் விளம்பரங்கள் மூலமாக சம்பாதிக்கும் தொகையை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுதோறும் செலிபிரிட்டி பிராண்ட் மதிப்பீட்டு அறிக்கை வெளியிடப்படுகிறது.
தற்போது 2022ம் ஆண்டுக்கான செலிபிரிட்டி பிராண்ட் மதிப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள டாப் 25 பிரபலங்களின் பிராண்ட் மதிப்பு 29 சதவீதம் உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டாப் 25 பிரபலங்களின் பிராண்ட் மதிப்பின் ஒட்டுமொத்த மதிப்பு 1.6 பில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னுக்குத்தள்ளப்பட்ட விராட் கோலி:
2022ம் ஆண்டுக்கான செலிபிரிட்டி பிராண்ட் மதிப்பீட்டு பட்டியலில் கடந்த ஆண்டு 2021ம் ஆண்டு வரை தொடர்ந்து 5 முறை முதலிடம் பிடித்து வந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி, இந்த ஆண்டு இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என அனைத்து சோசியல் மீடியாவிலும் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்களையும், கோடிக்கணக்கான வெறித்தனமான ரசிகர்களையும் கொண்ட விராட் கோலியை, பாலிவுட்டின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 176.9 மில்லியன் டாலராக உள்ள நிலையில், ரன்வீர் சிங்கின் பிராண்ட் மதிப்பு 181.7 மில்லியனாக உள்ளது. 2021ம் ஆண்டு வெறும் 23.4 மில்லியன் டாலர்களாக இருந்த பிராண்ட் மதிப்பு 2022ம் ஆண்டு 181.7 மில்லியன் டாலர்களாக அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.
டாப் 10 பட்டியலில் இருப்பது யார்?
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார் 153.6 மில்லியன் டாலர் மதிப்புடன் மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். 100 மில்லியன் டாலர்கள் பிராண்ட் மதிப்புடன் ஆலியா பட் 4வது இடத்திலும், 82.9 மில்லியன் டாலர்கள் பிராண்ட் மதிப்புடன் தீபிகா படுகோன் 5வது இடத்தில் உள்ளார்.
எம்எஸ் தோனி 80.3 மில்லியனுடன் 6வது இடத்திலும், அமிதாப் பச்சன் 79 மில்லியன் டாலர்கள் மதிப்புடன் 7வது இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 73.6 மில்லியன் டாலர்களுடன் 8வது இடத்திலும் உள்ளனர்.
பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார்களான ஹிருத்திக் ரோஷன், ஷாருக்கான் இருவரும் 9 மற்றும் 10வது இடம் பிடித்துள்ளனர். 71.6 மில்லியன் டாலர்கள் பிராண்ட் மதிப்புடன் ஹிருத்திக் ரோஷன் 9வது இடத்திலும், 55.7 மில்லியன் டாலர்களுடன் ஷாருக்கான் 10வது இடத்திலும் உள்ளனர்.
அதற்கு அடுத்துள்ள 15 இடங்களில் சல்மான் கான், ரன்பீர் கபூர், ரோஹித் சர்மா, ஆயுஷ்மான் குரானா, அனுஷ்கா ஷர்மா, கியாரா அத்வானி, கரீனா கபூர், கார்த்திக் ஆர்யன், ஹர்திக் பாண்டியா, அல்லு அர்ஜுன், சாரா அலி கான், வருண் தவான், நீரஜ் சோப்ரா, பிவி சிந்து, மற்றும் ரஷ்மிகா மந்தன்னா ஆகியோர் உள்ளனர்.
தென்னிந்திய நட்சத்திரங்கள்:
முதல்முறையாக, தென்னிந்திய நட்சத்திரங்களான அல்லு அர்ஜுனா ($31.4 மில்லியன்) மற்றும் ராஷ்மிகா மந்தனா ($25.3 மில்லியன்) மற்றும் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா ஆகியோர் இந்தியாவின் முதல் 25 பிரபலங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
ஓடிடி வெளியீடு, பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் வாடிக்கையாளர்களைக் கவர்வது, சமூக ஊடகங்களில் அவ்வப்போது பாலிவுட் பிரபலங்களுக்கு எதிராக எழும் புறக்கணிப்பு சிக்கல்கள், தென்னிந்திய திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே கிடைக்கும் வரவேற்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு விளம்பரதாரர்கள் தென்னிந்திய பிரபலங்கள் மீது தங்களது கவனத்தை திரும்பியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட்டியலில் பாலிவுட் நட்சத்திரங்களின் பங்களிப்பு குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. 2016 ஆம் ஆண்டில், பாலிவுட் நட்சத்திரங்கள் இந்தியாவின் சிறந்த 20 பிரபலங்களுக்கான ஒட்டுமொத்த பிராண்ட் மதிப்பில் 81.7 சதவீதத்தை கொண்டிருந்தனர், மீதமுள்ள 18.3% விளையாட்டு வீரர்கள் வசம் இருந்தது. இந்நிலையில், 2022ல் பாலிவுட் நட்சத்திரங்களின் பங்கு 67.6 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாவில் 20 கோடி ஃபாலோயர்களை பெற்ற முதல் இந்தியர்; சாதனை படைத்த விராட் கோலி!