2 ஆயிரம் ரூபாய் நோட்டை விலக்கிக் கொள்வதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு; செப்டம்பர் வரை நோட்டை மாற்ற அவகாசம்!

2 ஆயிரம் ரூபாய் நோட்டை விலக்கிக் கொள்வதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு; செப்டம்பர் வரை நோட்டை மாற்ற அவகாசம்!

Friday May 19, 2023,

1 min Read

இந்திய ரிசர்வ் வங்கி 2 ஆயிரம் ரூபாய் நோட்டை புழக்கத்தில் இருந்து விலக்கிக் கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது.

இருப்பினும், செப்டம்பர் மாதம் வரை, இந்த நோட்டு சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரூபாய்

இந்த காலத்தில் பொது மக்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வங்கிக் கணக்கில் செலுத்தலாம் அல்லது எந்த கிளையிலும் மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி இது தொடர்பான அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 “வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்துவது வழக்கம் போல மேற்கொள்ளப்படலாம். அதாவது, எந்த கட்டுப்படும் இல்லாமல், வெளிப்புற கட்டளை ஏதும் இல்லாமல் பொருந்தக்கூடிய வழிமுறைகளுக்கு உட்பட்டு செலுத்தலாம்,” என்று தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையை குறிப்பிட்ட காலத்தில் முடிப்பதற்கும், பொது மக்களுக்கு போதிய அவகாசம் தரும் வகையில், செப்டம்பர் மாதம் வரை வங்கியில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் டெபாசிட் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இதன் மீது பின்னர் ரொக்கத்தை விலக்கிக் கொள்ளலாம்.

மூத்த குடிமகன்களுக்கு ஏற்படக்கூடிய அசெளகர்யங்களை குறைப்பதற்காக 2 ஆயிரம் நோட்டை மாற்றுவதற்கு அவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யுமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

வங்கிக் கணக்கு இல்லாதவர், வங்கி கிளையில் ஒரு நேரத்தில் 20 ஆயிரம் ரூபாய் வரை மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

2 ஆயிரம் நோட்டை மாற்ற மக்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

பண மதிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ரிசர்வ் வங்கி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.


Edited by Induja Raghunathan