Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

ரிலையன்ஸ் கைகளுக்குப் போனது நீல்கிரீஸ் மற்றும் பிக்பஜார்!

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனம், பியூச்சர் குழுமத்தை கையகப்படுத்தியுள்ளதன் மூலம், பிக்பஜார், நீல்கிரீஸ், ஈஸிடே உள்ளிட்ட சில்லறை வர்த்தக பிராண்ட்களையும் தன் வசமாக்கியுள்ளது.

ரிலையன்ஸ் கைகளுக்குப் போனது நீல்கிரீஸ் மற்றும் பிக்பஜார்!

Wednesday September 02, 2020 , 1 min Read

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரிலையனஸ் ரீடைல் வென்சர்ஸ் நிறுவனம், புகழ் பெற்ற சில்லறை வர்த்தகக் குழுமமான பியூச்சர் குழுமத்தை ரூ.24,713 கோடிக்கு கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ்


இந்த ஒப்பந்தத்தின் மூலம், ‘பிக்பஜார்’ உள்ளிட்ட சில்லறை வர்த்தகப் பிராண்ட்களை கொண்டுள்ள பியூச்சர் ரீடைல் நிறுவனம், ரிலையன்ஸ் வசமாகும். பியூச்சர் லைப்ஸ்டைல் நிறுவனமும் இதில் அடங்கும்.


உணவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் பியூச்சர் கன்ஸ்யூமர் நிறுவனமும் ரிலையன்ஸ் வசமாகும். எனினும், பியூச்சர் குழுமத்தின் நிதி மற்றும் காப்பீடு வர்த்தகம் இதன் கீழ் வராது.

“ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ், பியூச்சர் குழுமத்தின் சில்லறை மற்றும் மொத்த வர்த்தகப் பிரிவு, லாஜிஸ்டிக்ஸ் மற்றும் வேர்ஹவுசிங் பிரிவுகளை ரூ.24,713 கோடிக்கு ஸ்லம்ப் விற்பனை அடிப்படையில் கையகப்படுத்துகிறது,” என ரிலையன்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது.

சில்லறை வர்த்தகத்தில் புகழ் பெற்று விளங்கிய பியூச்சர் குழுமம், பணப் புழக்க பிரச்சனை மற்றும் கடன் சிக்கலில் தவித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், இந்த கையகப்படுத்தல் நிகழ்ந்துள்ளது.


பியூச்சர் ரீடைல், பியூச்சர் லைப்ஸ்டைல் பேஷன்ஸ், பியூச்சர் கன்ஸ்யூமர் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைக்கப்படும் வகையில், வர்த்தகத்தை மறுசீரமைக்க இருப்பதாக பியூச்சர் குழுமம் தெரிவித்துள்ளது.

இந்த கையகப்படுத்தலை அடுத்து, பிக்பஜார். புட் ஹால், நில்கிரீஸ் மற்றும் ஈஸ்டே உள்ளிட்ட பிராண்ட்கள் ரிலையன்ஸ் ரீடைல் வசமாகும். பிக்பஜார் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தென்னகத்தின் முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான நீல்கிரிசை கையகப்படுத்தியது.

ரிலையன்ஸ் நிறுவனம் சில்லறை வர்த்தகப் பிரிவில் தனது நிலையை வலுவாக்கி வருகிறது. இதன் ஒருபகுதியாக பியூச்சர் குழுமத்தை கையகப்படுத்தியுள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தின் வருவாயில் 25 சதவீதம், சில்லறை விற்பனை பிரிவு மூலம் வருகிறது.


ரிலையன்ஸ் நிறுவனம் சில மாதங்களுக்கு முன் கோவையைச்சேர்ந்த புகழ் பெற்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனமான ‘கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸையும்’ கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.