தென்னிந்தியாவின் 800 பொறியாளர்களை வேலைக்கு நியமிக்க Fynd நிறுவனம் திட்டம்!

நிறுவனம் பெங்களூருவில் துவங்கியுள்ள புதிய அலுவலகம், கேமிங் அறை, தாய்மை அறை, டச் இல்லாத அணுகல் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளை கொண்டுள்ளது.
0 CLAPS
0

இந்தியாவின் மிகப்பெரிய ஆம்னி சேனல் மற்றும் பல சேனல் தொழில்நுட்ப நிறுவனமான, ரிலையன்ஸ் ஆதரவு பெற்ற 'ஃபைண்ட்' (Fynd) தென்னகத்தில் இருந்து 800 பொறியாளர்களை பணிக்கு நியமிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. பெங்களூருவில் நவீன வசதிகளுடன் புதிய அலுவலகத்தை துவக்கியுள்ளது.

இந்தியா முழுவதும் இந்த ஆண்டு 1,200க்கும் மேற்பட்ட பொறியாளர்களை பணிக்கு நியமிக்கும் நிறுவனத்தின் திட்டத்திற்கு ஏற்ப இது அமைந்துள்ளது.

நிறுவனம் தற்போது 750க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் இது இரு மடங்காக அதிகரித்துள்ளது. தீவிர வளர்ச்சிப் பாதை திட்டத்திற்கு ஏற்ப மற்றும் தென்னகத்தில் வளர்ச்சித் திட்டத்திற்கு ஏற்ப நிறுவனம் பொறியாளர்களை நியமனம் செய்ய உள்ளது.

புதிய உறுப்பினர்களுக்கு உதவ, பிரிமியம் வசதிகள் அளிக்க நிறுவனம் பெங்களுருவில் புதிய அலுவலகத்தை திறந்துள்ளது. இங்கு பணிக்குச் சேரும் புதிய பொறியாளர்களுக்கு, கேமிங் அறை, தாய் அறை, பைக் ஸ்டோரேஜ், குளியல் வசதி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

இந்நிறுவனம் அண்மையில், அகமதாபாத்தில் அலுவலகத்தை துவக்கிய நிலையில், அடுத்ததாக ஐதராபாத் மற்றும் சென்னையில் அலுவலகம் துவக்க திட்டமிட்டுள்ளது.

"நிறுவனம் வேகமாக வளர்கிறது, எங்கள் மைய சேவைகளை விரிவாக்கம் செய்து வருகிறோம். புதிய சந்தைகளில் நுழைந்து வருகிறோம். இந்த புதிய அலுவலகம் மூலம் வலுவான வளர்ச்சியை தொடர விரும்புகிறோம்,” என Fynd இணை நிறுவனர் பரூக் ஆதம் கூறியுள்ளார்.

Fynd நிறுவனம், பிராண்ட்களுக்கான ஆம்னிசேனல் தீர்வுகளை வழங்கி வருகிறது. இந்த துறையில் செயல்படும் மற்ற நிறுவனங்கள் போல அல்லாமல், நிறுவனம் வாடிக்கையாளர் நிறுவனங்களின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு, கேடலாக், கையிருப்பு நிர்வாகம், லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.

தொகுப்பு: சைபர் சிம்மன்

Latest

Updates from around the world