ரூ.2,520 கோடி லாபம், 15 மில்லியன் புதிய பயனர்கள்; ஜூன் காலாண்டில் பெற்ற ஜியோ!

15 மில்லியன் பயனர்களை இந்த காலாண்டில் புதிதாக பெற்று, இன்று சுமார் 398.3 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ளது ஜியோ.

31st Jul 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

ரிலையன்ஸ் ஜியோ ஜூன் மாத காலாண்டு முடிவில் ரூ.2520 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 183 சதவீத உயர்வாகும்.

ஜியோ வருவாய் 33.7% உயர்ந்து ரூ.16.557 கோடியை அடைந்துள்ளது. இதோடு 15 மில்லியன் பயனர்களை இந்த காலாண்டில் புதிதாக பெற்று, இன்று சுமார் 398.3 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ளது ஜியோ.

ஜியோ-வின் டேட்டா ட்ராபிக்கும் ஆண்டுக்கு 30 சதவீதம் உயர்ந்துள்ளது. பயனர்கள் ஜியோவில் செலவிடும் நேரமும் இந்த காலாண்டில் குறிப்பாக லாக்டவுன் காலத்தில் உயர்ந்துள்ளது. சராசரியாக ஜியோ மொபைல் டேட்டா பயன்பாடு மாதத்திற்கு 12.1 ஜிபி அளவில் தற்போது உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஜியோ; நாடு முழுவதும் கட்டமைத்துள்ள வயர்லெஸ் மற்றும் டிஜிட்டல் நெட்வொர்க் இந்தியர்களை டிஜிட்டலாக இணைக்கும் என்ற தனது கனவோடு இயங்குகிறது. தற்போது 14 முதலீட்டாளர்களுடன், மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக, பன்னாட்டு முதலீட்டாளர்களின் பங்கோடும், ஒரே பொதுவான குறிக்கோளுடன் பயணிக்கிறது.”
ஜியோ

கடந்த காலாண்டில் அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரை, ஜியோ நிறுவனத்தில் 13 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலம் ரூ.152,056 கோடி முதலீடுகளை பெற்றது.


Facebook, Google, Silver Lake, Vista Equity Partners, General Atlantic, KKR, Mubadala, Abu Dhabi Investment Authority, TPG Capital, L Catterton, Saudi Arabia Public Investment, Intel Capital, மற்றும் Qualcomm Ventures ஆகியோர் ஜியோவில் முதலீடு செய்துள்ளனர். முதலீடுகள் போக தற்போது ரிலையன்ஸ் 66.48% பங்குகளை ஜியோ-வில் வகிக்கும். இது பற்றி அம்பானி பகிர்கையில்,

“இந்திய ஸ்டார்ட்-அப்’கள் மற்றும் பன்னாட்டு பிரபல தொழில்நுட்ப நிறுவனர்களுடன் கைக்கோர்த்து, ஜியோ அடுத்த டிஜிட்டல் வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது. எங்களின் டிஜிட்டல் வளர்ச்சி, 1.3 பில்லியன் இந்தியர்களை மனதில் வைத்து வகுக்கப்பட்ட திட்டமாகும். இந்தியாவை டிஜிட்டல் நாடாக்குவதில், ஜியோ முன்னணி பங்கு வகித்து, முதன்மை இடத்தில் இருக்கும்,” என்றார்.

ஜியோ கூட்டமைப்பு $65 பில்லியன் ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனங்களான Zoom ($42 பில்லியன்), Uber ($35 பில்லியன்), Twitter ($34 பில்லியன்), மற்றும் Airbnb ($26 பில்லியன்) விட அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.


ஆங்கில கட்டுரையாளர்: சோஹினி மிட்டர்

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding Course, where you also get a chance to pitch your business plan to top investors. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India