முதன்முறையாக இந்தியாவில் 100 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியது ரிலையன்ஸ்!

2022, மார் 31ம் தேதி முடிவின் படி ரிலையன்ஸ் குழுமம்ம் எண்ணெய் நிறுவனங்கள், சில்லறை வர்த்தகம் மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்களின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.16 ஆயிரத்து 203 கோடியாக உயர்ந்துள்ளது.
2 CLAPS
0

2022, மார் 31ம் தேதி முடிவின் படி, ரிலையன்ஸ் குழுமம்ம் எண்ணெய் நிறுவனங்கள், சில்லறை வர்த்தகம் மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்களின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.16 ஆயிரத்து 203 கோடியாக உயர்ந்துள்ளது.

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டாப் 10 இடம் பிடித்தவரான கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் கடந்த வெள்ளியன்று மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிகர லாபம் 22.5 சதவீதம் உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது.

பம்பர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், டெலிகாம் மற்றும் டிஜிட்டல் சேவைகளின் நிலையான வளர்ச்சி மற்றும் சில்லறை வணிகத்தில் வலுவான வேகம் ரிலையன்ஸ் நிறுவனம் லாபம் ஈட்ட காரணமாக அமைந்துள்ளது.

2022 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் ரிலையன்ஸ் நிறுவனம் அதன் எண்ணெய், சில்லறை விற்பனை கடைகள் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.16,203 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.13, 227 கோடியாக இருந்த நிகர லாபம் இருந்தது.

இந்திய சந்தை மதிப்பின் அடிப்படையில் மிகப்பெரிய நிறுவனமாக வலம் வரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய், நிதியாண்டின் நான்காவது காலாண்டில், ஆண்டுக்கு ஆண்டு 35 சதவீதம் உயர்ந்து ₹ 2.32 லட்சம் கோடியாக உள்ளது.

2021-22ம் ஆண்டுக்கான நிதியாண்டில் (ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை), ரிலையன்ஸ் ரூ.7.92 லட்சம் கோடி (USD 102 பில்லியன்) வருவாயில் ரூ.60,705 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் ஒரு வருடத்தில் 100 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமை பெற்றுள்ளது.

நிறுவனம் இதுவரை இல்லாத காலாண்டுகளில் மிக உயர்ந்த EBITDA, அதாவது வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் முன் இருந்த வருவாயாக 33,968 கோடியை அறிவித்தது, இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 28 சதவீதம் அதிகமாகும்.

துறை ரீதியிலான வருவாய்:

எண்ணெய் முதல் ரசாயனம் வரையிலான வர்த்தகத்தின் வட்டி, வரிகள், தேய்மானம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு முன்பான வருவாய் 25 சதவீதம் அதிகரித்து ரூ.14,241 கோடியாக அதிகரித்துள்ளது. இதேபோல் ரிலையன்ஸ் டிஜிட்டல் சேவைக்கு வரிக்கு முந்தைய வருவாயும் கடந்த ஆண்டை விட 25 சதவீத அதிகரித்து ரூ. 11,209 கோடியாக உயர்ந்துள்ளது.

சில்லறை வணிகத்தில் வரிக்கு முந்தைய வருவாய் 2.5 சதவீதம் அதிகரித்து ரூ.3,712 கோடியாகவும், கிருஷ்ணா-கோதாவரி படுகையில் (KG-D6 block) இருந்து எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தி மூலம் வரிக்கு முந்தையாக வருவாயாக ரூ.1,556 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 3 மடங்கு அதிகமாகும்.

வரி, வட்டி, தேய்மானம் மற்றும் கடனை திரும்ப செலுத்துவதற்கு முன்னதாக நுகர்வோர் வணிகத்தில் 45 சதவீத வருவாயை ரிலையன்ஸ் நிறுவனம் ஈட்டியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்ய-உக்ரைன் போர், கச்சா எண்ணெய்-பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவை அதிகரிப்பு, விநியோக சூழ்நிலையை துரிதப்படுத்தியது, பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மூலமாக அதிக வருவாய் ஈட்ட உதவியுள்ளது.

கடந்த இரண்டு காலாண்டிகளாக சந்தாதரர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் பிரிவான ஜியோவின் நிகர லாபம் உயர்ந்தே காணப்படுகிறது. கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் நிகர லாபம் 24 சதவீதம் அதிகரித்து, ரூ.4,173 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

மார்ச் 31, 2022 இல் முடிவடைந்த நிதியாண்டில், ரிலையன்ஸ் ஜியோவின் ஒருங்கிணைந்த நிகர லாபம் சுமார் 23 சதவீதம் அதிகரித்து ₹14,854 கோடியாக உள்ளது.

ரிலையன்ஸ் ரீடெய்யில் நிறுவனம், விற்பனை திறனை அதிகரிக்கவும், கடைகளை விரிவாக்கவும் 1 பில்லியன் டாலருக்கு மேல் முதலீடு செய்துள்ளது. இதனைக் கொண்டு இரண்டாம் கட்டம் மற்றும் 3ம் கட்ட நகரங்களில் கடைகளை திறந்துள்ளது.

பசுமை எரிசக்தி தொடர்பான கிகா தொழிற்சாலைகள் மற்றும் ஒரு மிதமான 4-5 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட அப்ஸ்ட்ரீம் பிரிவு ஆகியவை அடுத்த 24-36 மாதங்களில் வலுவான வளர்ச்சியை எட்டக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

கடன்கள் அதிகரிப்பு:

கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தை விலைக்கு நிகராக உயராத காரணத்தால் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் அதிக அளவிலான வருவாயை பெறவில்லை. ஆனால், தொற்றுநோய்களின் போது தன்னை நிகர கடன் இல்லாத நிறுவனமாக அறிவித்த ரிலையன்ஸ், நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டில் வருவாயை விட கடன்கள் அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

டெலிகாம் ஸ்பெக்ட்ரம் கையிருப்பு வருவாயானது ரூ.2,31,490 கோடியாக உள்ள நிலையில், மறுநிதியளிப்பு பொறுப்புகள் அதன் மொத்தக் கடன் தொகை ரூ 2,66,305 கோடியாக அதிகரித்துள்ளது.

ரிலையன்ஸ் நான்கு வணிக சாம்ராஜ்யத்தை இயக்குகிறது. O2C வணிகத்தில் அதன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், பெட்ரோ கெமிக்கல் ஆலைகள் மற்றும் எரிபொருள் சில்லறை வணிகம் ஆகியவை அடங்கும்; செங்கல் மற்றும் மோட்டார் கடைகள் மற்றும் இ-காமர்ஸ் ஆகியவை சில்லறை வணிகம்; தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவை உள்ளடக்கிய டிஜிட்டல் சேவைகள் மற்றும் புதிய ஆற்றல் வணிகம் ஆகியவை அடங்கும்.

ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட்டின் வரி மற்றும் கடனுக்கு முந்தைய வருவாய் 2.4 சதவீதம் அதிகரித்து ரூ.3,705 கோடியாக உள்ளது. அதேசமயம் காலாண்டில் சில்லறை வணிகத்தின் நிகர லாபம் 4.8 சதவீதம் குறைந்து ரூ.2,139 கோடியாக உள்ளது. மார்ச் காலாண்டில் ரிலையன்ஸ் ரீடைல் புதிதாக 793 கடைகளைத் திறந்துள்ளது, இதன் மூலம் கடைகளின் எண்ணிக்கை 15,196 ஆக அதிகரித்துள்ளது.

இந்தக் காலாண்டிலும் எண்ணெய், எரிவாயு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகம் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சர்வதேச சந்தை விலைக்கு நிகராக உயராத காரணத்தால் அதிகளவிலான வருமானத்தைப் பெற முடியவில்லை. ஆனால், New Energy மற்றும் New Materials பிரிவு வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதில் முகேஷ் அம்பானி மிகழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜியோ பிளாட்ஃபார்ம் - மார்ச் காலாண்டில் ரிலையன்ஸ் ஜியோவின் மொத்த டேட்டா டிராப்பிக் அளவு 24.6 பில்லியன் ஜிபி, இது கடந்த வருடத்தைக் காட்டிலும் 45.7 சதவீதம் அதிகமாகும். இதேபோல் வாய்ஸ் டிராபிக் 1.2 டிரில்லியன் நிமிடமாக உயர்வு இது கடந்த ஆண்டை விடவும் 16.8 சதவீதம் அதிகம்.

மேலும், ஜியோவின் ARPU அளவு 21.3 சதவீதம் அதிகரித்து 167.6 ரூபாயாக உள்ளது. முந்தைய காலாண்டில் 421 மில்லியனுக்கும் குறைவான வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்த நிலையில், தற்போது மேலும் சரிந்து 410 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

தகவல் உதவி - என்.டி.டிவி | தமிழில் - கனிமொழிLatest

Updates from around the world