வங்கி அல்லாத நிறுவனங்கள் வாலெட்களில் கடன் வழங்க ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு!

உடனடி கடன் வசதி மீது ’பை நவ் பே லேட்டர்’ வசதியை அளிக்கும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வர்த்தக மாதிரி மீது, ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடு தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 CLAP
0

வங்கி அல்லாத நிறுவனங்கள், வேலெட் மற்றும் ப்ரீபெய்டு கார்டுகளில் பணத்தை லோடு செய்வதற்கு அனுமதி இல்லை, என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அனைத்து வங்கி அல்லாத ப்ரீபெய்டு பேமெண்ட் சேவை வழங்கும் நிறுவனங்கள் (PPI) கவனத்திற்கு எனும் தலைப்பிலான அறிவிக்கையில்,

“பிபிஐ நிறுவனங்கள் கடன் வசதிக்கான தொகையை லோடு செய்ய பிபிஐ- எம்டி அனுமதிப்பதில்லை. இந்த முறை பின்பற்றப்பட்டு வந்தால் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதை மீறினால், தொடர்புடைய சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்,” என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பிபிஐ- எம்டி என்பது இத்தகைய நிறுவனங்களுக்கான நெறிமுறைகளை வழங்கும் ஆவணமாகும்.

“பிபிஐ நிறுவனங்கள் ரொக்கத்தை லோடு செய்ய, மீண்டும் லோடு செய்ய, வங்கிக் கணக்கிற்கு, டெபிட், கிரெடிட் கார்டிற்கு பணம் செலுத்த அனுமதிக்கப்படும். இந்தியாவில் செயல்படும் பிபிஐ இந்திய ரூபாயில் தான் இருக்க வேண்டும்,” என்றும் அந்த அறிவிக்கை மேலும் தெரிவிக்கிறது.

நிதி பரிவர்த்தனை, நிதிச்சேவைகள், பணம் அனுப்புதல் உள்ளிட்ட பொருட்கள், சேவைகளை வாங்க, இந்த சாதனத்தில் உள்ள மதிப்பின் மீது செயல்படும் சேவையாக பிபிஐ கருதப்படுவதாக ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது.

பேமெண்ட் வாலெட்கள், ஸ்மார்ட் கார்டுகள் மொபைல் வாலெட்கள், மேக்னடிக் சிப் மற்றும் வவுச்சர்கள் வடிவில் இவை அமைந்துள்ளன.

ஜிபே, அமேசான்பே, பேடிஎம் போன்றவற்றில் டெபிட் கார்டு அல்லது கிரெடி கார்டு வாயிலாக பணம் லோடு செய்வது அனுமதிக்கப்பட்டாலும், வங்கி அல்லாத நிறுவனத்தால் கடன் வசதி வழங்க அனுமதி இல்லை. ’பை நவ் பே லேட்டர்’ முறையில் வாலெட் வசதியை வழங்கும் வங்கிசாரா நிதி நிறுவனங்களின் வர்த்தக மாதிரியை இது மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முடிவு, பெரிய அளவு கடன் பரப்பு கொண்ட வங்கிகளுக்கு சாதகமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஸ்லைஸ், பேயூ, லேஸிபே, கிரெடிட்பீ போன்ற நியோவங்கிகளும், இதே முறையில் தங்களது வங்கி சாரா நிறுவனம் அல்லது இத்தகைய நிறுவனத்தின் கூட்டுடன் கடன் வசதி வழங்குகின்றன.

“புது யுக நிறுவனங்கள் சில, பிபிஐ உரிமம் கீழ், 2 முதல் 3 லட்சம் கார்டுகள் வரை சேர்த்து வருகிறன. இவை வங்கிசாரா நிதி நிறுவனங்கள், வங்கிகள் கடன் மூலம் நுகர்வோர் வாலெட்டிற்கு கடன் வசதி அளிக்கின்றன. பிபிஐ சாதனத்தின் நோக்கம் பண பரிவர்த்தனை வசதி தானே தவிர கடன் வசதி அல்ல. பல நிதிநுட்பங்கள் இந்த வசதி மூலம் கடன் வசதியை அளிப்பதாகக் கருதப்படுகிறது,” என வெளியிட்டுள்ள குறிப்பு தெரிவிக்கிறது.

இந்த நடைமுறை கட்டுப்பாட்டு அமைப்பை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி அண்மை காலமாக நிதிநுட்ப நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளை தீவிரமாக்கி வருகிறது.

ரிசர்வ் வங்கியின் 2025 தொலைநோக்கு அறிக்கை, மேலும் டிஜிட்டல் ஏற்பை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவில் பேமெண்ட் துறையில் பல மாற்றங்களை நோக்குவதாக தெரிவிக்கிறது. இதன் காரணமாக, பேமெண்ட் கட்டணங்களும் குறைய வாய்ப்புள்ளது. நிதி நுட்பத் துறையில் இடர்கள் அதிகரித்து வருவது தெளிவாக தெரிவதால், கட்டுப்பாடுகள் தேவை. இதன் காரணமாக, நிதிநுட்ப துறையின் வளர்ச்சி அல்லது லாபம் குறையலாம் என்றும் அந்த குறிப்பு தெரிவிக்கிறது.

ஆங்கிலத்தில்: நைனா சூட் | தமிழில்: சைபர் சிம்மன்