அதிகக் கடன் சுமையால் திவால் நோட்டீஸ் கொடுத்த பிரபல Revlon நிறுவனம்!

20ம் நூற்றாண்டின் பெரும் பகுதியில் உலகின் இரண்டாவது பெரிய அழகு சாதன விற்பனை நிறுவனமாக இருந்த ரெவ்லான், இப்போது 22வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
0 CLAPS
0

அழகு சாதன விற்பனை நிறுவனமான ரெவ்லான், அதிக கடன் சுமை, சப்ளை செயின் பாதிப்பு, அதிகரிக்கும் செலவுகள் காரணமாக சேப்டர் 11 பிரிவின் கீழ் திவால் நிலைக்கு (Bankruptcy) விண்ணப்பித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையமாகக் கொண்ட ’ரெவ்லான் நிறுவனம்’ கோடீஸ்வரர்கள் ரான் பெரில்மனின் மேக் ஆண்டூர்ஸ் & போர்ப்சுக்கு சொந்தமான ரெவ்லான், எஸ்டீ லாடர் (Estee Lauder) போன்ற போட்டியாளர் மற்றும் சமூக ஊடகங்களை சிறப்பாக பயன்படுத்தும் சிறிய நிறுவனங்களால் மிகவும் பாதிக்கப்பட்டது. பெருந்தொற்று காலத்திற்கும் முன்பிருந்தே அதன் விற்பனை சரியத்துவங்கியதாக புளும்பர்க் நிறுவனம் செய்தி வெளியிட்டது.

எலிசிபெத் ஆர்டன், எலிசிபெத் டெய்லர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற பிராண்ட்களை கொண்ட ரெவ்லான் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனையை கொண்டுள்ளது.

ரெவ்லான் நிறுவனம் 1932ம் ஆண்டு, சார்லஸ் மற்றும் ஜோசப் ரெவ்லான் சகோதரர்கள், சார்லஸ் லாக்மன் ஆகியோரால் துவக்கப்பட்டது. இவர்கள் புரட்சிகரமாக நகத்திற்கான எனாமலை அறிமுகம் செய்தனர். 1939ம் ஆண்டு முதல் நிறுவனம் லிப்ஸ்டிக்கை விற்பனை செய்யத்துவங்கியது.

20ம் நூற்றாண்டின் பெரும் பகுதியில் உலகின் இரண்டாவது பெரிய அழகு சாதன விற்பனை நிறுவனமாக இருந்த ரெவ்லான், இப்போது 22வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் கடன் சுமை அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. 2016ல் எலிசிபெத் ஆர்டம் பிராண்டை கையகப்படுத்தியதற்காக 2 பில்லியன் டாலர் மேல் கடன், பத்திரங்களை விற்றது. நிறுவனம் கியூடெக்ஸ், ஆல்மே உள்ளிட்ட பிராண்ட்களையும் கொண்டுள்ளது. 150க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனையில் ஈடுபட்டுள்ளது.

தொகுப்பு: சைபர் சிம்மன்

Latest

Updates from around the world