சென்னையில் இவர்தான் ‘டாப் பணக்காரர்’ - மும்பை, டெல்லி, பெங்களூர் பட்டியலும் பாருங்க!

By Durga
இந்தியாவில் உள்ள பிரதான பெருநகங்களில் இருக்கும் பணக்காரர்களின் பட்டியல் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.
13 CLAPS
0

உலகளவில் ஐந்தாவது பெரிய உள்நாட்டு உற்பத்தி நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியா 166 பில்லியனர்களைக் கொண்டிருக்கிறது. டெல்லி, பெங்களூரு, சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு பெரிய நகரங்களும் பொருளாதார மையங்களாக திகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் தொழில் முணைவோர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு ஏற்ப மத்திய அரசும் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்தியாவின் 8 பணக்கார நகரங்கள் மற்றும் பணக்கார குடியிருப்புகள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

India cities richest man

மும்பை - முகேஷ் அம்பானி

இந்தியாவின் பிரதான பொருளாதார மைய நகரமாக திகழ்வது மும்பை தான். பணக்கார நகரமாக இது கருதப்படுகிறது. காரணம் இங்கு வாழ்வதற்கான பொருளாதாரத் தேவை சற்று அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாக நாட்டின் செல்வந்தர்களின் தாயமாக இது இருக்கிறது.

மும்பையில் வசிக்கும் மிகப் பெரிய பணக்காரரானவர் ஆசியாவின் பிரதான பணக்காரர்களில் ஒருவருமாக இருக்கிறார். அவர் அனைவருக்கும் அறிந்த ஒருவரே. முகேஷ் அம்பானி தான். இவரது தற்போதைய சொத்து மதிப்பு 89.9 பில்லியன் டாலர் ஆகும். இவர் தற்போது இந்தியாவின் இரண்டாவது பணக்காரராக இருக்கிறார். முதலிடத்தில் இருப்பவர் யார் என்ற கேள்வி வரலாம். அவரும் அனைவருக்கும் அறிந்தவரே. உலகளவில் டாப் 10 பணக்காரர்களின் ஒருவராக சமீபத்தில் உருவெடுத்த இந்திய பில்லியனர் கௌதம் அதானி தான்.

புது டெல்லி- ஷிவ் நாடார்

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் இரண்டாவது பணக்கார நகரமாக திகழ்வது புது டெல்லி தான். இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் குறிப்பிடத்தக்க வகையில் ஆடம்பரமான குடியிருப்புகள் இருக்கின்றன. பல்வேறு பணக்காரர்களின் குடியிருப்பாக திகழ்வது டெல்லி தான்.

ஷிவ் நாடார்

அதன்படி, தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னோடியும், எச்சிஎல் (HCL) நிறுவனருமான ஷிவ் நாடார், இந்தியாவின் மூன்றாவது பெரிய பணக்காரராக இருக்கிறார். டெல்லியின் பிரதான பணக்காரர் இவர்தான். இவரது சொத்து மதிப்பு 25.6 பில்லியன் டாலர் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா - பெனு கோபால் பங்கூர்

மேற்குவங்கத்தின் தலைநகரமாக திகழும் கொல்கத்தா ஆனது பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கிறது. கொல்கத்தாவின் பெரும் பணக்காரராக திகழ்பவர் ஸ்ரீ சிமெண்ட் தலைவர் பெனு கோபால் பங்கூர் ஆவார். இவரது சொத்து மதிப்பு 6.7 பில்லியன் டாலர் ஆகும். இவர் இந்தியாவின் 19-வது பணக்காரராக இருக்கிறார்.

பெங்களூரு - அசிம் பிரேம்ஜி

இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் நகரம் பெங்களூரு ஆகும். கர்நாடகாவின் தலைநகரமாக பெங்களூரு திகழ்கிறது. பெங்களூருவில் பல்வேறு நிறுவனங்களும் தங்களது கொடியை நிலை நாட்டி வருகிறது.

அசிம் ப்ரேம்ஜி

அதன்படி, பெங்களூருவின் பணக்காரர் என்று குறிப்பிடப்படுபவர் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைவரும், முன்னாள் விப்ரோ நிறுவன தலைவருமான அசிம் பிரேம்ஜி தான். அசிம் பிரேம்ஜியின் சொத்து மதிப்பு 9.1 பில்லியன் டாலர் ஆகும். இவர் இந்தியாவின் 12-வது பணக்காரராக இருக்கிறார்.

சென்னை - கலாநிதி மாறன்

தமிழகத்திற்கு பல்வேறு சிறப்புகள் இருந்தாலும். தமிழகத்தின் தலைநகரமாக திகழ்வது சென்னை தான். சென்னையில் வசிக்கும் மகிப் பெரிய பணக்காரர் சன் குழுமத்தின் தலைவரும் நிறுவனருமான கலாநிதி மாறன். இவரது சொத்து மதிப்பு 2.2 பில்லியன் டாலர் ஆக இருக்கிறது.

கலாநிதி மாறன், சன்நெட்வொர்க் உரிமையாளர், பட உதவி : பிசினஸ் ஸ்டான்டர்டு

சன் நெட்வொர்க் என்ற குழுமத்தில் பல்வேறு பிரிவு தொழில்துறைகள் நிறுவப்பட்டிருக்கிறது. சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் இந்தியான் 77-வது பணக்காரராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத் - முரளி திவி

தெலங்கானாவின் தலைநகராக திகழ்வது ஹைதராபாத் ஆகும். ஹைதராபாத்தைச் சேர்ந்த பணக்காரராக திகழ்பவர் முரளி திவி ஆவார். ஹைதராபாத்தைச் சேர்ந்த விஞ்ஞானி முரளி திவி, மூன்று தசாப்தங்களுக்கு முன்பு திவியின் ஆய்வகங்களை நிறுவிய ஒரு மருந்து அதிபர் ஆவார். அவரும் அவரது குடும்பத்தினரும் $7.8 பில்லியன் நிகர சொத்து மதிப்பை வைத்துள்ளனர், பணக்காரர்கள் பட்டியலில் 16-வது இடத்தில் இவர் இருக்கின்றனர்.

புனே - சைரஸ் பூனவல்லா

நாட்டின் ஏழாவது பணக்கார நகரமாக திகழ்வது புனே ஆகும். புனேவின் பணக்காரராக திகழ்பவர் சைரஸ் பூனவாலா ஆவார். இவர் நான்காவது இந்திய பணக்காரராக இருக்கிறார். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) நிறுவனர் இவர். சைரஸ் பூனவாலா புனேவில் வசித்து வருகிறார். இவரது சொத்து மதிப்பு $21.8 பில்லியன் ஆக இருக்கிறது.

சைரஸ் பூனாவாலா

அகமதாபாத் - கௌதம் அதானி

குஜராத்தின் அகமதாபாத் இந்தியாவின் எட்டாவது நகரமாக திகழ்கிறது. அகமதாபாத்தின் பணக்காரராக அதானி குழுமத்தின் தலைவரும் நிறுவனருமான கௌதம் அதானி இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 105.4 பில்லியன் டாலராகும். இதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இவர்தான் இந்தியாவின் முதல் பணக்காரர் ஆவார். உலகளவின் பணக்காரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

Latest

Updates from around the world